visitors

Wednesday, January 20, 2010

லாவரேன்ட்டி பேரியா (Laverenty Beria) – ஸ்டாலின் குலோத்தோரின் பழைய வீரன்!!

சொல்லிவைத்தாற்போல் நான் திரு வினவின் பதிவில் எழுதியதை எடுத்துவிட்டார்கள்! அதாவது அவர்கள் இந்த மாதிரி எதிர் கருத்துகளுக்கும், கிண்டல்களுக்கும், பதிவுக்கு ஒவ்வாத கருத்துகள் அல்லது அநாகரீகமான கருத்துகள் என்று பெயரிட்டு வேறு யாரும் பார்க்க முடியாத ஒரு இடத்தில் போட்டு விடுவார்கள்! நான் அவர்கள் எழுதிய பதிவான முக்கொலோத்தோர் குரு பூஜை பற்றிய ஒரு அநாகரீகத்தை கிண்டல் செய்து அதே போல எழுதிய பதிவை அமுக்கி விட்டார்கள்!

ஆதலால் நான் இங்கே அதை போடுகிறேன்! (திரு வினவின் கட்டுரையை முதலில் படித்துவிட்டு இதை படித்தால் மொத்தமும் புரியும். அவர்கள் கட்டுரையின் பெயர் - புவனேஸ்வரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை!

http://www.vinavu.com/2010/01/20/buvaneswari-moomuka/

நான் எழுதியதின் தலைப்பு : லாவரேன்ட்டி பேரியா (Laverenty Beria) – ஸ்டாலின் குலோத்தோரின் பழைய வீரன்!!


லாவரேன்ட்டி பேரியா (Laverenty Beria) – ஸ்டாலின் குலோத்தோரின் பழைய வீரன்!!
-------------------------------------------------------------------------------

வாசகர்களுக்கு லாவரன்ட்டி பேரியாவைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை! தேசத்ரோக மற்றும் பல பெண்களை மானப்பங்கம் செய்த வழக்கில்
கைதிசெயயப்பட்ட இந்த திருவாளர், மரணதண்டனை அடைந்தபின் அவரைப்பற்றியும் அவர் செய்த அக்கிரமங்களை கண்டும் காணாததுபோல இருந்த தலைமை
பற்றியும் வெளிவந்ததை தொடர்ந்து சோவியத் புரட்சியாளர்கள் சொன்னவைகளை உண்மையென்று நம்பிவந்த பலரை கொதித்தெழ செய்தது!

இந்த சிவப்பு சமுதாயம் நம்பி இருக்கும் முன்று தூண்களில், பொய், சர்வாதிகாரம் என்ற இரு பெரும் தூண்கள் மோதி கொண்டு வீழ்ந்து விட்டால், அழித்தொழிப்பு என்ற மூன்றாவது தூணின்மீது மொத்த வெய்ட்டும் இறங்கி அந்த தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலை நோக்குடன் புரிந்து கொண்ட, அந்த நேரத்தில் குருசேவின் தலைமையில் இருந்த புரட்சி பொய்கள், உடனே தலையிட்டுஅவ்விரு தூண்களுக்கிடையல் போர் நிறுத்தம் செய்து வைத்தார்கள். அப்புறம் லாவரன்ட்டி பேரியா பற்றி எல்லோரும் மறந்துவிட்டார்கள்! (ஆனால் 1991 வரையிலும்தான் என்றாலும்)

இப்படி தனிஒரு மனிதனாக நின்று உலகையே திரும்பிபார்க்கவைத்த லாவரன்ட்டி பேரியா யார் என்று அறிந்து கொள்ளும் அக்கறை ஒருவருக்கும் இல்லை என்று சொல்லமுடியாது. ஏனென்றால் எல்லோருக்கும் அவரின் கொலைகள் மற்றும் லீலைகள் தெரிந்ததுதான். அதற்கு மேலும், அவருக்கும் ஜோசப்
ஸ்டாலினுக்கும் உள்ள உறவும் எல்லோரும் அறிந்ததுதான். ஸ்டாலினின் முப்பது வருட கையாள், ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் (இருவரும் Georgians), ஸ்டாலின் கைக்காட்டிய பலரை தூக்கு மேடைக்கு அனுப்பியவர், மொத்தத்தில், NKVD இன் பலநாள் தலைவர்!

இப்பேற்பட்டவரை, இது நாள் வரையில் பயத்துடன் போற்றிவந்த, சலாம் போட்ட, பார்த்து நடுங்கிய, அவர் சொன்னதற்காக பலரை அடித்து நொறுக்கிய
அழுகிப்போன கோழைகள், இவர் இன்று ஒன்றும் இல்லை என்று புரிந்தவுடன் அவர் பெயரை எல்லா இடத்திலிருந்தும் மொத்தமாக அழித்தார்கள் (பிறகு மூன்று வருடங்கள் கழித்து ஸ்டாலின் பெயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது என்பது வேறு கதை!), மேலும் பல உண்மை மற்றும் பொய் கலந்த குற்றச்சாட்டுகளை சொல்லியும் பழித்தார்கள்! பரமசிவன்தான் இல்லையே, பம்பையும் பத்தவைத்தாகிவிட்டதே, பின்னர் பயம் எதற்கு என்றுதான்! இந்த கும்பலுக்கு நடுவில் இன்றும் இவரை போன்ற, இவரின் தலைவரைபொன்ற கொடுங்கொலை செய்த பலரை தூகிவைத்தாடும் சிறு கும்பலொன்று இருக்கத்தான் செய்கிறது! யார் இவர்கள் என்று சொல்லித்தெரிவதில்லை!

ஸ்டாலின் பரம்பரையில் வந்தவர் என்று தெரிந்தபின், எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாங்கள் கண்டிப்போமா? இவரை கண்டித்தால், ஸ்டாலினை கண்டிப்பது போலதானே? அம்பை திட்டினால் பழி வில்லுக்கல்லவோ போகும்! ஆதலால் இவரை விமர்சிக்கும் தைரியம் நம் சிவப்பு நண்பர்களுக்கு வருமா என்று பார்ப்போம்!

ஒரு வேளை நம்ம ஸ்டாலினிஸ்டுகள் அல்லது மாவோவிச்டுகள் நம் நாட்டை பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் யோசித்துப்பாருங்கள்!
கடவுள் லெனின் இரட்ச்சிப்பில், புனித ஸ்டாலின் மற்றும் புனித மாவோ ஆசியில், கால் மார்க்ஸ் ஆவியின் கரிசனங்களை எதிர்ப்பார்த்து, திரு வினவு, திரு கலகம் போன்ற சில பல வகையான மாணிக்கங்களின் ஆட்ச்ச்யின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம்!!

காந்தி கிடையாது, நேரு கிடையாது, அம்பேத்கர் கிடையாது, சுதந்திரம் கிடையாது, அதை சுவாசிக்க பாதி மனிதர்களும் கிடையாது! ஏனென்றால், மாவோ மற்றும் ஸ்டாலினின் வழிவந்தவர்கள் செய்யும் முதல் காரியம், அழித்தொழிப்பு!!! என்ன செய்வது வரலாறென்பது இந்த சிவப்பு புரட்ச்சியாளர்கள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!!

சென்னை சட்டக்கல்லூரி பெரச்சனையை எடுத்துக்கொள்ளுங்களேன். லாவரேன்ட்டி பேரியா போன்ற ஒரு மனிதகுல மாணிக்கத்தை மாணவரணி
தலைவராகவும், தெளிந்த சிந்தனையுடைய, அதாவது இரு பக்க பிரச்ச்னைக்குமே நல்ல தீர்வு ஒரு பக்கத்தை அழித்துவிடுவதே என்று எண்ணம் கொண்ட, செய்து காட்டிய, தூய மாவோ அடிபோடி போல் பாட் போன்ற ஒருவர், கட்சி தலைவராகவும் இருந்தால், அம்பேத்கர் பட பிரச்சனையே வந்திருக்காதே. இவர்கள் ஸ்டாலின் படத்தையோ, லெனின் படத்தையோ அல்லது மாவோ படத்தையோதானே போடுவார்கள்! Chariman Mao is our Chairman என்று சொன்ன இவர்களுக்கு இந்த பிரச்சனையை எல்லாம் எம்மாத்திரம்!!! இந்திய வரலாறு எதற்கு இவர்களுக்கு, சீன மற்றும் ஸ்டாலினின் வரலாறு இருக்கும்பொழுது! அதுதானே நம்ம புனிதபூமி!

வெள்ளையனை எதிர்த்துப்போராடி தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாக பட்டிருக்கிறது! அதே வெள்ளையனுக்கும் காவடி தூக்க, அதுவும் ஸ்டாலின் இவர்களுடன் இப்போதைக்கு சமாதானமாக போவிட்டார், என்ற ஒரே காரணத்துக்காக இந்திய தேசிய படை கண்ட சுபாஷ் சந்திர போசை
தூற்றுவது உங்களுக்கு கவ்ரவமாக படுகிறது!

மேலும், நீங்கள் உயிவாழ உதவும் இந்திய தேசத்தை தூற்றி, இந்த நாட்டை படை எடுத்த எமது போர் வீரர்களின் உயிரை வாங்கிய மாவோவின் படம் போட்ட கொடிகளையும், சட்டைகளையும், தொப்பிகளையும் மாட்டிக்கொண்டு அழகு பார்ப்பதுதான் உங்களுக்கு கவுரவமாக படுகிறது!

சரி நிகழ்காலத்திற்கு வருவோம், மாவோவை ஆதர்ச தலைவராக கொண்ட உங்கள் கூட்டம், மாவோ பூஜைக்கு ஒட்டுவால் மாதிரி கிம் ஜங் இல், பிடேல் காஸ்ட்ரோ போன்றவருக்கும் பூஜைகள் எப்பொழுது நடத்துவீர்கள்?? ஏன் கேட்கிறேன் என்றால், உங்களுக்கு பிடத்த மாதிரி கொடுங்கோல் சர்வாதிகாரிகள்
இன்றைக்கு உலகத்தில் வெகுசிலரே. இவர்களைப்போன்றோர், அதாவது நீங்கள் துதிக்கும் ஸ்டாலினிச சர்வாதிகாரிகள் இருக்கப்போவது இன்னும் கொஞ்ச நாட்கள்தான்! ஆதலால் இருக்கும் சில நாட்களை ஏன் வீணடிக்கிறீர்கள்! அவர்தம் படங்களைபோட்டு, ஸ்டாலின் வாழ்க மாவோ வாழ்க, காஸ்ட்ரோ ஒருத்தர் போதுமா இன்னும் பலர் வேண்டுமா, பன மரத்துல வவ்வாலு கிம் ஜங் இல்லு நம்மாளு என்று உங்களின் கொள்கை முழக்கங்களை இடவேண்டியதுதானே!
நம்முடைய சிவப்பு நண்பர்கள் இந்தியர்களாக பிறந்தவர்கள்! எனினும் சீன மற்றும் ரஷ்ய ரத்தம் மட்டுமே தங்கள் உடலில் ஓடுவதாக நினைத்து இந்தியா என்பது என்றும் இல்லை, இந்தியன் என்பது என்றுமே இல்லை, இந்தியன் என்பதெல்லாம் பொய், சீன மற்றும் சோவியத் ரஷ்ய ஒன்றுதான் மெய் என்று அணி திரளுவார்கள்! ஆனால் பாருங்கள் இவர்கள் இந்தியாவில் இருப்பதால், இவர்களை யாரும் கண்டுகொள்ளாததால், ஒரு யோசனை!

உடனடியாக ரஷ்யவிற்கு சென்று, இறந்த லாவறேண்டி பெரியாவின் உடலை எப்படியாவது கண்டுபிடுத்து, இதோ பாருங்கள் இந்த பிணத்தை, இறந்த இவர் என்ன தவறு செய்திரிந்தாலும், எங்கள் தலைவரின் கீழ் பல நாள் வேலைப்பார்த்ததால், அவரும் இவரை கண்டுகொள்ளாமல் விட்டாமாதிரி நீங்களும் எங்களுடன் சேர்ந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம், இந்தியாவை கண்டபடி தூற்றலாம், நாங்கள் உங்களையும் கண்டுகொள்ளமாட்டோம், ஏனென்றால் நாங்கள் ஒரிஜினல் புரட்சி கொழுந்துகள் என்று கொண்டாடலாம்!

முடிந்தால் ஸ்டாலின் மற்றும் மாவோ குருபூஜை என்று ஒவ்வரு வரதமும் கொண்டாடி சிறப்பு விருந்தினராக மன்மோகன் சிங்கையும் பா சிதம்பரத்தையும் அழைக்கலாம்! ஆனால் என்ன, அவர்கள் இருவரும் மெத்த படித்த அறிவாளிகள், நாகரீகமானவர்கள், உங்களை பார்த்து என்னடா இது புதுவிதமான தமாஷு, அட தமிழ்நாடுதானே, அங்கே தமாஷுக்கு என்ன பஞ்சம், நாங்க போகாவிட்டால் ஒண்ணும் ஆகிடாது என்று வரவே மாட்டார்கள்!!!!

நன்றி


-------------------------------------

Saturday, January 2, 2010

முற்போக்கு வாங்கலையோ முற்போக்கு - நண்பர் திரு வினவு தளத்தில் நான் எழுதிய ஒரு கமென்ட்

அன்பான நண்பர் திரு வினவு மற்றும் மற்ற பல நண்பர்களுக்கும்,

என்ன சார், பார்த்து ரொம்ப நாளாச்சு! புரட்சி செயல் திட்டங்களெல்லாம் எப்படி சார் இருக்கு? ஏகாதிபதிய பிற்போக்கு
ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளை எப்பொழுது கவுத்து நம்ம ஊரில்ல அக்டோபர் புரட்சி செய்யப்போறீங்க?

சீக்கிரம் ஏதோ பாத்து செய்யுங்க சார்! மத்த ரியாலிட்டி ஷோ எல்லாம் ரொம்ப போர் அடிக்குது! மானாட மயிலாட போன்ற அருமையான ஒன்றை
அதாவது மாவோ பாட நாங்களும் மாங்கா மாதிரி ஆட அப்படின்னு ஒன்று எடுத்து விடுங்க சார், ஏதோ எங்களுக்கும் பொழுது போகும்!

அது சரி, அருமை நண்பர் திரு கலகத்தின் எழுத்துகளை பார்க்கலாம் என்றுதான் வந்தேன்! ஆளை காணவில்லையே? திட்டி திட்டியே களைச்சு போயி ரெஸ்ட்இல இருக்காரா?? அதுவும் இந்த மாதிரி கண்டபடி வசை பாடும் ஒரு இடத்துல அவரு இல்லைன்னா ரொம்ப போர் அடிக்குது சார்! கொஞ்சம் வந்து கொம்பு சுத்த சொல்லுங்களேன்! அட்லீஸ்ட் திரு கலகம் பாட மற்ற கெட்டவார்த்தை எல்லாம் ஓட அப்படின்னு ஒன்றை பார்த்த சந்தோஷமாவது இருக்கும்!

நான் சும்மா போயிருப்பேன்! நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை என்று! அனா பாருங்க சார் ஒரு லைன் ஒன்றை போட்டீங்களே!! ஐயோ சாமி, எப்படிங்க சார், // வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை//

முற்போக்கா???????

பார்க்கிறவன் பன்னாடையா இருந்தா பட்டுக்கோட்டை பெரியப்பா படம் பத்து ஆஸ்கர் வாங்கியிருக்குன்னு கூட சொல்லலாம்!

இதைப்பார்த்து சிரிச்சி சிரிச்சி, சரி, என்னதான் வேலை இருந்தாலும் கொஞ்சம் வந்திட்டு போவமேன்னுதான் வந்தேன்!

காஞ்சி தேவநாதன் கற்பும் கர்பக்ரஹமும் எவ்வளவு புனிதமானது என்பதைப்பற்றி அருமையாக பேசினார்! நல்லா இருக்கு இல்ல சார் இது!

நீங்க எழுதுவதற்கும், மேலே உள்ளதற்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை! ஒரு கடைந்தெடுத்த Hypocritical கூட்டம் என்றால், வேற யாரு....நீங்களும் உங்கள் ஜல்லிகளும்தான் சார்! கூட வேற ஏனைய முற்போக்கு பதிவர்கள் அப்படின்னு சொல்லி வேற ஒரு லைன்! அது யாரு சார் உங்க அளவு முற்போக்கு?????

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் சார், எல்லா மனிதர்களுக்கும் தெரிந்த முற்போக்கு மற்றும் பிற்போக்கு ஒன்று இருக்கிறது! எல்லோரும் முர்போக்குதான் பல சமயங்களில், எல்லோரும் பிர்போக்குதான் சில சமயங்களில்!

"ஒன் பாத்ரூம் முற்போக்கு, டூ பாத்ரூம் பிற்போக்கு" - இதைதவிர நீங்க சொல்லவரும் முற்போக்கு மற்றும் பிற்போக்கிற்கு வேற ஒன்றும் ஆர்தமே கிடையாது!

ஏமாந்தவன் எட்டிப்பார்த்தால் நோக்கு கூலி கேட்ப்பார்களாம்
எமாத்தியவன விட்டு வெச்சா அவன் பொழைப்பதர்க்கு பத்து காரணத்த சொல்லுவானாம்

நீங்கள் கட்டி வைத்த மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் சரிந்து போய், சாக்கடை என்று எல்லோரும் கண்டுகொண்டு, சரித்தரித்திலிருந்து சுருங்கி சனியன் போனது என்று உலக மக்களெல்லாம் உங்களைப்போன்றவர்களை மறந்து விட்ட பிறகும், ஒரு சில இடங்களில் நீங்கள் செய்யும் காமடி அப்பப்பா. Historically convicted on all counts yet posturing superbly as sanctimonious இந்த உலகத்தில் யாராவது செய்யமுடியும் என்றால் அது நீங்களும் உங்களது நண்பர்களும்தான் சார்.

போதாகுறைக்கு புர்க்காவைப்பற்றி ஏதோ உங்களால முடிந்த ஒரு கால் பக்கம்! தனி மனித உரிமையைப்பற்றி பேச உங்களுக்கு என்ன சார் யோகிதை இருக்கிறது. This is for every body to know - As writen by Svetlena Alliluyeva....daughter of the mighty Joseph Stalin, the god of our முற்போக்குவாதி friends!!

ஒரு முறை ஸ்டாலின் முன் அவரின் மகள், சுமார் பத்து வயது இருக்கும் பொழுது, தொடை தெரிய அந்த சிறிய பெண் அணிந்த உடையை பார்த்து விட்டார் ஒரு அரை! The point is, இதை செய்தது யாரோ ஒரு குடும்பத்தலைவன் இல்லை. முற்போக்குவாதிகளின் பிரதிநிதியாக வணகப்படும் ஒருவர்!!

ஆதலால் இதை நீங்கள் கண்டித்துவிட்டு பிறகு, புர்தாவைப்பற்றி கண்டிக்கவும்!

(இதற்க்கு இவர்கள் சொல்லப்போகும் பதில், இது ஒரு கட்டுக்கதை - ஏகாதிபதிய திரிபு.....and so on........but the facts are on the table)

இரண்டாவது, ச்வேடேலானாவின் முதல் திருமணம்.... அவரின் காதலரின் பெயர் கிராகேரி மோர்சா. வயதில் மூத்தவர் (38 Vs. 17) எனினும் ஸ்வெட்லானா
அவரைதான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். ஸ்டாலின் இதை சிறிதும் விரும்பவில்லை. ஒரு தகப்பனானவன், இந்த அளவு வயது வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக கவலை கொள்ளலாம்தான்! தவறில்லை, என்ன ஆனாலும் அவரின் மகளின் வாழ்கை! ஆனால் ஸ்டாலின் கவலைப்படதோ மணமகனின் வயதைப்பற்றி இல்லை.அவரின் குலத்தைப்பற்றி. I dont like him, he is a Jew - இது ஸ்டாலின் தன் மகளிடம் கூறியது! கிரிகோரி ஒரு யூதர். யூதர்களும் கிருத்துவர்களும் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வது நடவாத காரியம் - யாருக்கு - பிற்போக்கு மனிதர்களுக்கு. ஆனால் சிவப்பு சட்டை காரர்கள்தான் முற்போக்கு ஆயிற்றே...இருந்து.......ஊருக்கு தான் உபதேசம்.. அதிரிந்து போன ச்வேட்லான, எப்படி அப்பா இப்படி எல்லாம் பேசலாம் என்று மறு மொழி கூறியபின், கோபமாக ஸ்டாலின் do what you want என்று வெளியேறி, தன் மகளின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை!

அன்பான சிவப்பு நண்பர்களே, அதாவது முற்போக்கு நண்பர்களே.....என்ன சத்தத்தையே காணும்!

(இதற்கும் நீங்கள் எல்லாம் பதில் வைத்திருக்கிறீர்கள்... இது ஒரு திரிபு....ஸ்வெட்லானா சோவியத் ரஷ்யாவிலிருந்து ஓடி மேற்கத்திய நாடுகளுக்கு போய், அங்கே இருக்கும் ஏகாதிபதிய சுரண்டல்கார்களிடம் பணம் வாங்கி இப்படி கண்டபடி எழுதி தன் சுய சரிதையாக வெளியிட்டார் என்று அடிப்பீர்கள்...வேற என்ன??)

இவர் செய்த முற்போக்கு இன்னும் பல பல பல ..... கேட்டால் சிரிப்பாக வரும்......

இவர் பேசுகிறார்களாம் பெண்ணடிமைப்பற்றி.......... இவர்கள் பேசுகிறார்களாம் முர்போக்கைப்பற்றி.........

காமடி காமடி............

நன்றி