visitors

Monday, May 17, 2010

GOD AND RELIGION

நண்பர் திரு ஏவிஎஸ் அவர்கள் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள்!!!

அவரின் வாதம் - கடவுள் எனும் சக்தி கண்டிப்பாக இருக்கிறது !

என் பின்னூட்ட்டம் கிழே -

---------------------

அன்பான நண்பர் திரு ஏ வி எஸ்,

கடவுள் மறுப்பாளர்கள் பலர் (நான் போலி பகுத்தறிவு பேசும் டுபாகூர் முற்போக்கு ஜால்ராக்களை சொல்லவில்லை, மற்றும் கம்யூனிச தெய்வங்களை வழி பட்டுக்கொண்டு கடவுள் இல்லை என்று சொல்லும் பொய்யர்களை சொல்லவில்லை ஏனென்றால் இவர்கள் எல்லோருமே ஒரு ஹிடன் அஜெண்டாவுடன் செயல் படுபவர்கள் என்பதால்) தங்களின் சிந்தனைகளை திண்ணமாக சொல்லுவதற்கு காரணம், மதங்களின் மூலம் உண்டாகும் பெரும் சச்சரவுகளும், அதன் மூலம் நடக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் அதனால் உண்டாகும் மனிதநேய பிளவுகளால் மட்டுமே!

ரிசார் டாவ்கின்ஸ் என்ற விஞ்ஞானி சொன்னது, மதம் தனியாக நின்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் மதம் என்பது "அவர்கள் Vs. நாங்கள்", அதாவது என் மதத்தை நம்புபவர்கள் Vs. நம்பாதவர்கள் என்ற ஒரு முத்திரை குத்தும் வழிமுறையாக கடைசியில் வந்து விடுகிறது. மனிதர்களின் மனங்களின் என் மதமே, என் கடவுளே, என் தூதரே, என் சாமியாரே உயர்ந்தவர், மற்றவரெல்லாம் பிசாசு, பொய், தாழ்ந்தது, என்று தொடங்கி, அப்படி இல்லாதவை அழிக்க படவேண்டும் என்பதில் முடிகின்றது! நல்லவர் பலர் இருந்தாலும் ஒரு சிறிய தீய சிந்தனை கூட்டத்திற்கு மதம் வித்திடுகிறது! இது அந்த கூட்டத்தின் தவறு என்பது ஒரு பாதிதான்! மதம் மற்றும் அது கொடுக்கும் ஒரு ஆதாரம் இல்லா நம்பிக்கை, அது ஊட்டும் அதீக உயர்வு மனப்பான்மை, அப்படி இருப்பவர்களுக்கு அந்த மதங்கள் கொடுக்கும் உயர்விடம் போன்ற எல்லாம் சேர்த்துதான் வெறி கொண்ட ஒரு வழி முறையாக மதம் மாறுகிறது! அதனால்தான் மதம் என்பது நல்லவைகளை சொன்னாலும், வெறித்தனத்திற்கு எப்பொழுதும் பால் வார்க்கும் ஒரு வழிமுறையாக ஆகிவிடுகிறது, you like it or not!

சொல்ல வருவது, எனக்கு புரிந்த வரையில், நண்பர் திரு தருமி போன்றவர்கள் (அவரை நீங்கள் கோட் செய்ததால்) மதம் மற்றும் கடவுள் இல்லாமையை வலி உறுத்துவது, அது இல்லாதவை என்ற காரணத்தால் மற்றும் அல்லாது, அவை செய்யக்கூடிய கேடுகள் பல என்று உணர்த்துதான் என்று நான் நினைக்கின்றேன்! என் நிலையும் ஏறக்குறைய அதேதான்!

நீங்கள் எழுதியதிலிருந்து ஒன்று புரிகிறது, அதாவது அதுதான் உண்மை, மற்றவை பொய் என்ற நிலையை நீங்கள் கடந்து வந்திருக்க கூடம் என்ற தெரிகிறது! அதாவது நீங்கள் மற்ற மத நூல்களையும் படித்து அதைப்பற்றி தெரிந்து கொண்டு, அவைகளை சாடாமல் இருப்பதாக எனக்கு படுகிறது! ஏசுவே உங்கள் வழி என்று கூறினாலும் மற்றவை காரி உமிழத்தக்க கசடுகள் இல்லை என்று நீங்கள் நினைப்பீர்களானால், உங்களுக்கு நாத்திக உபதேசம் தேவை இல்லை என்று கூறலாம்! அது என் கணிப்பு!

இருந்தும், மதம் என்பதற்கும் கடவுள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது! கடவுள் நம்பிக்கை மட்டும் இருந்தால், அது பரிணாம இன்றியமையாமை என்ற உண்மையினால் வந்த ஒரு மனித எண்ண நிலை என்று கூறி, அது பாதிக்காத வரையில் "இருக்கட்டும்" என்று கூறி நகரலாம். ஆனால் மதம் என்று ஒன்று கடவுள் நம்பிக்கையுடன் பின்னி பிணைந்து பதிந்து விட்டால், இப்பொழுது இல்லை என்றாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பற்றி எரிந்து தன்னுடன் சேர்த்து சுற்றத்தையும் சாம்பலாக்கக்கூடும் சங்கதியாக வந்து விடும்!

Thats why, even a poor and a harmless fiction of a god becomes a potent poison when "religion" and its "holy books" join forces to impart legitimacy to the fiction!

நன்றி

-----------------

இரண்டாவது பின்னூட்டம்

-----------------
அன்பான நண்பர் திரு ஏவிஎஸ்,

பதிலுக்கு நன்றி.

நீங்கள் எழுதியதற்கு என்னால் மறு மொழி கொடுக்க முடியும், point by point. ஆனால் நான் சில வரைமுறைகளை கடை பிடிப்பவன்!

அதாவது, நான் எந்த ஒரு மதத்தையோ, கடவுளையோ என்னுடைய கடவுள் மற்றும் மதமருப்பை நிலைநாட்டுவதர்க்காக அல்லது ஊருக்கு தண்டோரா போட்டு
முற்போக்கு பட்டம் தேட விமர்சனமோ நையாண்டியோ செய்வது கிடையாது! இன்னும் சொல்லப்போனால் கடவுள் மறுப்பை சிறந்த ஆதாரங்களுடன், நல்ல மொழியில், நடையில், நாகரீகமாக ஒரு தர்க்க கட்டுப்பாட்டுடன், தரத்துடன் செய்யும் முறையை நான் பின்பற்ற முடியுமா என்று கூட எனக்கு தெரியாது! நான் பார்த்த வரையில் திரு தருமி போன்ற சிலர்தான் அதை செய்கிறார்கள்! அந்த திறன் மற்றும் முக்கியமாக கவனம் எனக்கு இல்லாத காரணத்தால் நான் மத விடயத்தில் அவ்வளவாக பின்னூட்டம் இடுவதில்லை. முக்கியமாக நாத்தீகம் பற்றி பேசினாலும், முதல் பின்னூட்டத்தில் நான் சொல்லி இருப்பது போல, நான் கடவுள் நம்பிக்கை என்பதை மனித பரிணாமத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்கிறேன், அதாவது just like how sexual attraction and other instincts that have evolved in the human brain for evolutionary purposes. ஆதலால் அதன் மேல் எனக்கு கோபம் ஒன்றும் இல்லை! ரிச்சர்ட் டாகின்ஸ் இன் கருத்துகளை முழுவதுமாக ஏற்ப்பவனானாலும், கடவுள் என்பது இல்லை என்று புரிந்து கொண்டாலும், அதை நம்புபவர்கள் பெரிய தவறு செய்து விட்டதாக நான் நினைக்கவில்லை(அதாவது அவர்கள் மற்றவர்களை பழித்து, அறிவியலையும் நாம் பார்க்கும் உண்மைகளையும் சில புத்தகத்தின் பேரால் நிராகரிக்காத வரையில்)!

நீங்கள் அப்படி பட்டவர் இல்லை என்று நினைப்பதாக முன்பே சொல்லிவிட்டேன்! Hence உங்களிடம் கடவுள் இல்லை என்பதை புரியவைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதில்தான் எனக்கு யோசனை!

நன்றி

---------------