நான் படம் பார்க்கவில்லை. பார்க்கும் ஐடியா நேற்றுவரை இல்லை! இருந்தும் சில திராவிட டுபாக்கூர் குஞ்சுகள் விஜயை கிண்டலடிப்பதால் விஜய் ஏதோ நல்லது செய்திருப்பதாக புரிகிறது!!!
நன் படத்தை சொல்லவில்லை! விஜயை சொல்லுகின்றேன்!
திராவிட அறிவாளிகளுக்கு தெரிந்த இரண்டு விடயங்கள் - சினிமா மற்றும் வெட்டி அரசியல் வம்பு - அதில் விஜயை காயடிக்க இந்த சினிமா மேடையை தவிர வேறு இல்லை என்று இவர்கள் முடிவெடுத்தாகி விட்டது தெரிந்ததுதான்!!
அதுதான் அப்படி ஒரு பாய்ச்சல் போல இருக்கிறது!!(வேறு எங்கையாவது பாய்ந்தால் உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயம்)
இந்த மினி கட்டுரைக்கு(!!)ஒரு நல்ல டைட்டிலை யோசித்தேன். பல மனதில் வந்ததால் எல்லாவற்றையும் கீழே போடுகிறேன்!
பகுத்தறிவுக்கு பல்லைக்காட்டாததால் பச்சோந்தி பெயர்வாங்கிய பண்பாளன்!!
அல்லது
குடும்பத்துக்கு கும்பிடுபோடாததால் குட்டுவாங்கும் குணாளன்!!!!
அல்லது
திருடர்களுக்கு தக்கதிம்மி ஆடாததனால் தரிதிர பட்டம் வாங்கிய தளபதி!!!
அல்லது
மாபியா கும்பலுக்கு மண்டியிடாததால் மடயனாகிப்போன மகராசன்!!!
அல்லது
அடாவடி அண்டாகாகசும்களுக்கு அடிபணியாததால் அணிலாகிப்போன அறிவாளி!!!
விஜயின் மேல் எனக்கு எப்பவுமே அபிப்பிராயம் கிடையாது! இருந்தும் அவரை அசிங்கப்படுத்துவது யாரென்று பார்த்த பின்னர் விஜயை கொண்டாடும் கண்மணிகளுக்கு எல்லாம் சொல்லுவது ஒன்றுதான்!! விஜய் உருப்பட்டு விடுவார்!!! நல்லாயிருப்பார்!!! அணிலாக படம் போடபட்டாலும் அசடாக ஆசீர்வதிக்கபட்டாலும், அப்படி எள்ளுபவர்களின் யோகிதயினால் மட்டுமே அவர் நல்லவர் என்று புலப்பட்டு விடுவார்!!!
அதுதான் இங்கே நடந்திருக்கிறது!!! திராவிட டுபாகூர் அசடுகளின் திட்டுக்கள் அவரை யாரென்று அடையாளம் காட்டி இருக்கிறது!!
கடவுளினால் அசீர்வதிக்கப்படுவதும், சாத்தானின் வாயால் சபிக்கப்படுவதும் ஒன்றே!!
ஹி ஹி ஹி........................
பின் குறிப்பு - சன் டிவியில் இந்த படத்தை பத்தாவது இடத்திற்கு கீழ் போட்டாலும் (அநேகமாக அப்படிதான் நடக்கும் என்று நினைக்கிறேன்), இவர்களின் பத்திரிகையில் மற்றும் திராவிட அடிபொடிகள் இவரை கலாய்த்தாலும் இந்த படம் வாகை சூட வேண்டும் என்று விரும்பிகிறேன்!
Thursday, October 27, 2011
Subscribe to:
Posts (Atom)