visitors

Sunday, October 31, 2010

பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-

வலை தளத்தில் சிலரைப்பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும் இந்த தருணத்தில், சிலவற்றை மேற்கோள் கட்ட இருக்கிறேன். அதாவது சிலர் என்ன சொன்னாலும் கடைசியில் பார்பனர்களை சாடுவதில் வந்து நிற்கிறது என்று சொல்லுபவர்களுக்கு சில பதில்கள்.

இதை படித்து விட்டு இது யாரால் அல்லது எந்த இயக்கத்தை சார்ந்தவர்களால் எழுதபட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டும்.

படியுங்கள் ..............

--------------------------------------------------------
பார்ப்பன அடிவருடிகளின் விவாதங்களுக்கு பத்து பதில்கள்:-
--------------------------------------------------------

விவாதம் 1 : மதம் என்பது தனிமனித வழிமுறை என்று கூறிவிட்டு இந்து மற்றும் பார்ப்பன மதம் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்களே!

இந்து மதம் என்பது பார்பனரின் ஆளுமையை கட்டி காக்கவே செய்யப்பட்ட ஒரு கோட்பாடு. அவர்களின் தனி ஆளுமைமுறை நீர்த்து போகசெய்ய பார்பனர் அல்லாத சமூகங்கள் செய்தவையை எதிர்த்து நாட்டுக்குள் ஒரு நாடாகவே கட்டியமைத்தார்கள் பார்ப்பனர்கள்! இந்த "தனி நாட்டை" மதம் என்ற பெயரிட்டு அமைத்ததுதான் உலகிலேயே ஒரு பெரும் தந்திரம் என்று கூறலாம். பார்ப்பனீயம் என்பதற்கு இந்துமதம் என்று பெயரிட்ட முதல் பொய்யிலிருந்து வந்ததுதான் மற்ற பொய்கள்.

விவாதம் 2 : நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்களே!

நல்ல "பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" என்பதிலிருந்தே தெரியவில்லையே அவர்கள் எவ்வளவு என்று. சில நல்லவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மின் பார்ப்பன வெறுப்பை எடைபோடலாகாது! அவர்கள் ஏதாவது நமக்கு நல்லது செய்தால், நம்மை விரும்பி அவர்கள் அதை செய்தார்கள் என்பதை விட நம்மிடையே அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக செய்தார்கள் என்று கொள்ளலாம்.


விவாதம் 3 : பார்ப்பனர்கள் பலர் நம் சமூகத்தில் பல தொழில்கள் செய்யவில்லையா, அங்கே பல பார்ப்பனர்ர் அல்லாதவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

எந்த திருடன் வேண்டுமானாலும் குப்பையை விற்கலாம். பார்ப்பன திருடர்கள் தொழில் என்ற பெயரில் குப்பைகளை செய்து பார்ப்பனர் அல்லாதவரை அங்கே நியமித்து அந்த குப்பைகளுக்கு தங்க முலாம் பூசி விற்கிறார்கள். அவ்வளவுதான். அதே சமயம் அவர்கள் செய்யும் ஓரிரு நல்ல பொருட்களுக்கு மற்ற பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு விலைகளை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள். ஆகவே பார்ப்பனர் செய்யும் / விற்கும் பொருட்களை வாங்கும் தமிழர்கள் மற்றாரு தமிழனின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்!


விவாதம் 4 : பார்ப்பனரல்லாதவர்களில் பார்ப்பன தன்மை இல்லையா?

இப்படி சொல்லுவதால் அது பார்ப்பனியத்தின் வீரியத்தை காட்டுகின்றதே ஒழிய பார்ப்பனரல்லாதவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதாவது இதைப்போன்ற பார்ப்பனரல்லாதார்களின் தீய தன்மைகளை பார்ப்பனீயம் என்று அழைப்பதாலேயே பார்பனர்கள் எவ்வளவு மோசம் என்பது புரியவில்லையா? இப்படி பல நவீன பார்ப்பனர்கள் இருப்பதால் எல்லோருக்கும் புரியும் விடயம், பார்ப்பன விடம் எவ்வளவு ஆழமாக இந்த சமூகத்தில் பரவி இருக்கிறது என்பதே! இந்த ஒரு விடயமே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்! திராவிட தமிழர்கள் எல்லோரும் தனக்குள் உள்ள பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாகும்!

விவாதம் 5 : இவர் பார்பனர் அல்ல. மாறிவிட்டார். கோவிலுக்கு போவதாக தெரியவில்லை. பூணூல் அணிவதாக தெரியவில்லை.

மேலே தெளிவாக சொல்லிவிட்டோம். பார்ப்பனியம் என்பது மதம் இல்லை. நம்முடைய தலைவர் அப்பொழுதே சொல்லி இருக்கிறார், இது ஒரு வினோதமான மதம் ஏனென்றால் இந்த மதத்தை பின் பற்றுபவர்களை தொலைவிலிருந்தே மோப்பம் பிடுத்து விடலாம் என்று! ஒரு பார்ப்பனன் ஆனவன் என்றும் பார்ப்பனன்தான். என்ன சில சமயங்களில் பிழைப்பிற்காக, தங்களின் தொழிலை காப்பாற்றுவதர்க்காக நான் அது இல்லை இது இல்லை என்பார்கள். அனால் நம் தலைவர் சொல்லுவதெல்லாம், பார்ப்பனன் என்றும் பார்ப்பான்தான்!

விவாதம் 6 : இந்த குறிப்பிட்ட மனிதர் பார்ப்பனர்தான். ஆனாலும் இவர்களின் தந்தை மற்றும் பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருந்தவர்கள்தான்.

ஆடு எப்படி குதிரை ஆகாதோ, பாட்டன் மற்றும் முப்பாட்டன் இங்கே இருப்பதால் மட்டுமே ஒருவன் தமிழன் ஆகி விடமுடியாது. அதாவது படையெடுத்த ஆரியர் இங்கே தங்கியதால் தமிழன் என்று சொல்லக்கூடாது!

விவாதம் 7 : அவர்களும் மனிதர்கள்தானே!

அவர்களும் மனிதர்கள் தான். அதில் சந்தேகமே இல்லை.அதே சமயம் கொசுவும் உயிருனம்தான். அவை நம்மை துன்புறுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. நாம் செய்வது அவைகளை அடக்குவது. அவைகள் நம்மை துன்புறுத்தாமல் இருக்க அவைகளின் வீரியத்தை அடக்குவது. நாமும் பார்ப்பனர் விடயத்தில் அதைத்தான் செய்கிறோம்!

விவாதம் 8 : மனிதர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று நீங்களே சொல்லிவிட்டு.....

பார்பனர்கள் பற்றியல்ல அது. மனிதர்களை பற்றி. சிங்கமும் பன்னியும் வெவ்வேறுதான்!

விவாதம் 9 : பார்ப்பன எதிர்ப்பு என்பது முட்டாள்த்தனம்!

இந்த பொய்யை இனி இந்த திராவிட நாடு ஏற்காது! பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி பத்திரிகைகள் வேண்டுமானாலும் அப்படி எதையாவது எழுதலாம். ஆனால் உண்மையில் அறிவுள்ள பார்ப்பனர்களை யாரும் பார்த்தது கிடையாது. அறிவுள்ள எவரும் பார்ப்பனர்களின் எதிரிதான். சில அறிவுஜீவிகள் இதை பார்த்து யோசிக்கலாம் வருந்தலாம். ஆனாலும் நாங்கள் சொல்லுவது ஒன்றுதான். பார்ப்பனருக்கு எதிரான இந்த போரை நடத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் அது.

விவாதம் 10 : பார்ப்பனர்களின் பலரை துயரத்திர்க்குள் ஆக்கிவிட்டீர்களே. பல குடும்பங்கள், பல பார்ப்பனர்கள் வாய்ப்பு இல்லாததினால் உண்மையில் கஷ்டப்படுகிறார்களே?

எங்கள் வழிமுறைகளால் எந்த பார்ப்பனருக்கும் இங்கே ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் நிஜம். என்ன, எங்களுக்கான உரிமைகளை தட்டிப்பறித்த அவர்களை சாடி அந்த உரிமைகளை நாங்கள் மறுபடியும் எடுத்துக்கொண்டோம்! சில ஆயிரம் பார்ப்பனர்கள் பசியால் வாடுகிறார்கள் என்றால், பல லட்சம் பார்ப்பனரல்லாதவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வாடியதை பார்த்தல் இது ஒன்றும் இல்லை என்றேசொல்லலாம்.நமக்கும் பார்ப்பனர்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
உங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் திராவிடர்கள் ஆகிய நாம் எதற்கும் பரிதாபமே பார்க்கக்கூடாது!

Monday, October 4, 2010

எந்திரன்

எந்திரன்

படம் பார்க்கவில்லை. கதையை முழுமையாக விமர்சனங்களிலிருந்து படிக்கவுமில்லை. அநேகமாக அடுத்த வாரம் பார்ப்பேன். ஆனாலும், படித்ததிலிருந்து புரிந்து கொண்டது; செயற்கை அறிவு எப்படி வேண்டுமானாலும் பாயலாம், அது மனித இனத்திற்கே கேடாக முடியலாம் என்று சங்கரும் சுஜாதாவும் சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

A Chilling fact, இது ஓரளவிற்கு உண்மையும் கூட. போன மாத Scientific American பத்திரிகையில், அடுத்த நூறு வருடங்களில் அழிவைத்தருவது எவைகள், அதன் வீரியங்கள் எந்த அளவு என்றொரு கட்டுரை வந்தது. (Scientific American பத்திரிகை டுபாகூர் பத்திரிகை அல்ல. உலக விஞ்ஞானிகள் மற்றும் பல அறிவாளிகளும் எழுதும் ஒரு தலை சிறந்த மாத இதழாகும்). அந்த கட்டுரையில் வந்த ஒரு அழித்தல் சாத்தியக்கூறு, Aritificial intelligence ஆல் வரக்கூடும் என்று கூறுகிறது. அதாவது, எப்பொழுது இயந்திரங்கள், கணினிகளின் துணைக்கொண்டு மிக நுட்பமாக மாறி, பின்னர் ஒரு சமயத்தில் சுய சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறதோ அதுதான் மனித அழிவிற்கு ஆரம்பம் ஆக இருக்கலாம் என்று கூறுகிறது. மனிதனின் கணினி processing வேகம் மற்றும் தேவை அதிகம் ஆக ஆக அவனே இந்த செயற்கை அறிவின் துரித உதயத்திற்கு காரணமாகி, அது மிக வளர்ந்து, மனிதனை அடிமையாக்கி, மனித இனத்திற்கே முடிவு கட்டலாம் என்ற யூகம் செய்யப்படுகிறது.

இதில் உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். Moore's law என்ற ஒன்றை பலர் படித்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், புதிய கண்டுபிடிப்பினால், கணினியின் ஆணிவேரான IC (Integrated Circuit) இன் வேகம் இரட்டிப்பாகும் என்பதுதான் இந்த விதி.

இந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், ஒரு கணினியின் இணைப்புகள் மிக மிக அதிகமாகி, ஒரு கட்டத்தில் நம்முடைய மூளையில் இருக்கும் இணைப்புகளைப்போல மிகப்பெரிதாகி, சுய சிந்தனை செய்வதற்கேற்ற நிலைக்கு வரலாம். இது மேலும் வளர்ந்து எங்கு கொண்டு பொய் விடுமோ, மனிதனால் அதை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்பதெல்லாம் இப்பொழுது கண்டிப்பாக சொல்ல முடியாது. ஆனால் வளர்ச்சியின் வேகத்தை பார்த்தால், இன்னுமும் இருபது வருடங்களில், சுய சிந்தனை செய்யக்கூடிய ஒரு கருவி உருவாக்கப்படும் என்பது என் நினைப்பு.

அப்படியே வந்தாலும் அது ஏன் மனிதனுக்கு எதிரியாக முடியக்கூடம் என்ற கேள்விக்கு, ஏன் இருக்ககூடாது என்றுதான் விடை சொல்ல தோன்றுகிறது.

மாட்ரிக்ஸ், டர்மிநேடோர் போன்ற படங்கள் என் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது எந்திரன்!