எந்திரன்
படம் பார்க்கவில்லை. கதையை முழுமையாக விமர்சனங்களிலிருந்து படிக்கவுமில்லை. அநேகமாக அடுத்த வாரம் பார்ப்பேன். ஆனாலும், படித்ததிலிருந்து புரிந்து கொண்டது; செயற்கை அறிவு எப்படி வேண்டுமானாலும் பாயலாம், அது மனித இனத்திற்கே கேடாக முடியலாம் என்று சங்கரும் சுஜாதாவும் சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
A Chilling fact, இது ஓரளவிற்கு உண்மையும் கூட. போன மாத Scientific American பத்திரிகையில், அடுத்த நூறு வருடங்களில் அழிவைத்தருவது எவைகள், அதன் வீரியங்கள் எந்த அளவு என்றொரு கட்டுரை வந்தது. (Scientific American பத்திரிகை டுபாகூர் பத்திரிகை அல்ல. உலக விஞ்ஞானிகள் மற்றும் பல அறிவாளிகளும் எழுதும் ஒரு தலை சிறந்த மாத இதழாகும்). அந்த கட்டுரையில் வந்த ஒரு அழித்தல் சாத்தியக்கூறு, Aritificial intelligence ஆல் வரக்கூடும் என்று கூறுகிறது. அதாவது, எப்பொழுது இயந்திரங்கள், கணினிகளின் துணைக்கொண்டு மிக நுட்பமாக மாறி, பின்னர் ஒரு சமயத்தில் சுய சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறதோ அதுதான் மனித அழிவிற்கு ஆரம்பம் ஆக இருக்கலாம் என்று கூறுகிறது. மனிதனின் கணினி processing வேகம் மற்றும் தேவை அதிகம் ஆக ஆக அவனே இந்த செயற்கை அறிவின் துரித உதயத்திற்கு காரணமாகி, அது மிக வளர்ந்து, மனிதனை அடிமையாக்கி, மனித இனத்திற்கே முடிவு கட்டலாம் என்ற யூகம் செய்யப்படுகிறது.
இதில் உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். Moore's law என்ற ஒன்றை பலர் படித்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், புதிய கண்டுபிடிப்பினால், கணினியின் ஆணிவேரான IC (Integrated Circuit) இன் வேகம் இரட்டிப்பாகும் என்பதுதான் இந்த விதி.
இந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், ஒரு கணினியின் இணைப்புகள் மிக மிக அதிகமாகி, ஒரு கட்டத்தில் நம்முடைய மூளையில் இருக்கும் இணைப்புகளைப்போல மிகப்பெரிதாகி, சுய சிந்தனை செய்வதற்கேற்ற நிலைக்கு வரலாம். இது மேலும் வளர்ந்து எங்கு கொண்டு பொய் விடுமோ, மனிதனால் அதை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்பதெல்லாம் இப்பொழுது கண்டிப்பாக சொல்ல முடியாது. ஆனால் வளர்ச்சியின் வேகத்தை பார்த்தால், இன்னுமும் இருபது வருடங்களில், சுய சிந்தனை செய்யக்கூடிய ஒரு கருவி உருவாக்கப்படும் என்பது என் நினைப்பு.
அப்படியே வந்தாலும் அது ஏன் மனிதனுக்கு எதிரியாக முடியக்கூடம் என்ற கேள்விக்கு, ஏன் இருக்ககூடாது என்றுதான் விடை சொல்ல தோன்றுகிறது.
மாட்ரிக்ஸ், டர்மிநேடோர் போன்ற படங்கள் என் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது எந்திரன்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"இதில் உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். Moore's law என்ற ஒன்றை பலர் படித்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், புதிய கண்டுபிடிப்பினால், கணினியின் ஆணிவேரான IC (Integrated Circuit) இன் வேகம் இரட்டிப்பாகும் என்பதுதான் இந்த விதி. "
i am not a techie and wish had read your post two days ago coz just bought my IPad,.\Moore's law seems true coz i had bought my mac book air last year and now there is already the next generation.
Yet to read the Scientific american article.Many years ago when cloning was ?invented i remember reading in the hindu,if we will reach an age where we will make hitlers or mother teresas.
I am not sure if these robots will have 'remorse' or can it be incorporated?
had not read scientific american due to laziness inspite of having subscribed. thank you very much ,finished reading. mmm lot to think about. as a psychiatrist particularly..thank you.
Post a Comment