அப்படியா சாமி, இந்த புரட்சிகள் குட்டிச்சுவராக்கிய பல ஊர்களைப்பற்றி நான் கொஞ்சம் சொல்லலாம் என்பதற்குதான் இந்த சின்ன கட்டுரை! As usual, இதுவும் திரு வினவால் பின்னூட்டத்திலிருந்து நீக்கப்பட்டது!
சும்கயிட் (அசர்பைஜான்) நகரம் - சுடுகாடாக்கப்பட்ட சோவியத் நகரம்
-------------------------------------------------------------------
துபாய் ஒரு சுடுகாடு என்றால், நம்முடைய்ய சிவப்பு நண்பர்கள், அதாவது ஸ்டாலினிஸ்ட் நண்பர்கள் நாசம் செய்த சும்கயிட் நகரை என்னவென்று சொல்ல்வது என்ற கேள்வியை முன்வைப்பதர்க்கே இந்த எழுத்துகள்!
வாசகர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், சோவியத் யூனியனால் நாசமாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் மேலே சொன்னது! This is just an example of what the communist Stalinist, Maoist red revolutionaries did to their cities and how their dangerous and unworkable ideology wrecked people completely. அதவாது, நம்முடைய ஸ்டாலினிய மாவோவிய சிவப்பு புரட்சியாளர்கள் தங்களின் வேலைக்கு ஆகாத மேலும் ஆபத்தான சித்தந்தங்களினால் எப்படி பல நகரங்களை நாசமாக்கினார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே இது.
முதலில் எல்லோரும் அறியப்பட வேண்டிய விடயம், சிவப்பு புரட்சியாளர்கள் தங்கள் முரட்டுத்தனமான சக்தியை அட்டாவடி ஆதிக்கத்தைமட்டும் வைத்தே தங்கள் ஆளும் பிரதேசங்களில் யார் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்! அங்கே உள்ள மக்களின் நிலைமை, அவர்கள் பாரம்பரியம், சுற்றுப்புற சூழல் நீர் வளம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்டபடி அவர்கள் செய்ததின் விளைவுதான் சும்கயிய்ட்! இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே!
ஏறல் கடல் என்று அழைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய உள்நாட்டு தண்ணீர் ஏரியை ஏறக்குறைய முற்றிலுமாக கொன்றது இவர்களின் அராஜகம்தான்! இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதிகிறேன்! முதலில் சும்கயிட்டைப்பற்றி பார்ப்போம்!
இன்று அசர்பைஜானின் நரகம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், சோவியத் யூனியனின் சாதனை நகரம் என்று பொய்யாக உலகெங்கும் பரப்பப்பட்டது! இப்பொழுதும் இங்கே பிறக்கும் குழைந்தைகளின் நிலைமை, ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், "கொடுமை"!!!!
இது உங்கள் மனதில் பதிவதர்க்குமுன் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்! அராஜக சோவியத் முறையில், ஒன்றை முடிவெடுத்துவிட்டால், எதைப்பற்றியும் கவலைக்கொள்ள மாட்டார்கள்! இரசாயனத்துரையில் தொழிற்ச்சாலைகள் வேண்டுமென்றால், எந்த ஒரு விதிமுறை பற்றியோ, மக்களின் நிலமைபற்றியோ கவலைப்படாமல் பிற்கால சுகாதார நிலைமை பற்றி தொலைநோக்குடன் கவலைப்படாமல், அப்படி யாரவது எதிர்த்து பேசினால் அவர்களை சிறையில் அடைத்து அல்லது புரட்சியின் எதிரி என்று முத்திரை குத்தி ஒழித்து கட்டி தங்கள் நினைப்பதை சாதிப்பார்கள்!
அதுவும் சாதிப்பார்களா என்றால் அதுவும் இல்லை! அரைகுறையான வழிமுறைகள், முதிர்ச்சிபெராத மற்றும் அறிவியலில் பின்தங்கிய ப்ராசெஸ் முறைகள் போன்றவைக்கு
பெயர் பெற்றது சோவியத் யூனியன்! அதாவது அணுகுண்டு மற்றும் கனரக போர்த்தளவாடங்களை தவிர்த்து ஏனைய எல்லா துறைகளிலும் மிக பின் தங்கியே இருந்தார்கள்! அதும் அராஜக சோவியத் முறையில் யாராவது ஒன்றைப்பற்றி எதிர்த்து பேசி, வேறு மாதிரி செய்யலாம் என்று சொல்லிவிட்டால் போச்சு! அவரின் கதி அதோ கதிதான்! இதனாலேயே அவர்களின் industrial process மிக பின்தங்கியே இருந்தது! ஒரு அணு குண்டையோ அல்லது தளவாடங்கலையோ உற்பத்தி செய்தல் மட்டும் போதாது, அதன் வழி முறைகள் மிக சிக்கனமாக, சுகாதாரமாக, மக்களையும் சுற்று சூழலையும் கெடாமல் இருக்குமாறு செய்யவேண்டும்!
அனால் சோவியத் முறை, அதாவது கம்யூனிஸ்ட் முறை என்பது ஒரு கட்டுக்கடங்காத சர்வாதிகார செயல் திட்டம் மட்டுமே!
It is indeed a mindless autocratic bulldozer doesnt worry about consequences in terms of human cost even after completing the task. Being a system which goes against basic human nature, இவர்கள் தொட்ட எந்த ஒரு செயலாக்கமும் தொலைனுக்கிலா திட்டங்களாகவும் கொஞ்ச காலத்தில் முறியும் நடவடிக்கைகளாகவும் இருந்தன! இவர்களின் நாடுகள் இடிந்து விழிந்து என்று சுக்கு நூறாக போனதைவிட சான்றுகள் இதற்க்கு வேறு எதற்கு! இந்த அடிப்படை உண்மையைக்கூட ஏற்க்க முடியாத நம்ம புரட்சி நண்பர்கள் உளறுவது நகைச்சுவையிலும் நகைச்சுவை!
1939 இல் சுமார் 10,000 மட்டுமே இருந்த ஒரு சிறு ஊரில் கண்டபடி இரசாயன தொழிற்ச்சாலைகளை ஏற்ப்படுத்தி கசிவுகளை கொட்டக்கூட சரியாக இடங்களை அமைக்காமல், அங்கே பல லட்ச கணக்கானவர்களை குடிஎரச்செய்து, கசிவுகளை காஸ்பியன் கடலில் கொட்டி ஒரு வழி செய்து விட்டார்கள்!
1991 இல்சோவியத் யூனியன் செத்ததும்தான் இந்த கொடுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தன!
1994's அறிப் இஸ்லாம் ஜாடே எழுதிய ஒரு கட்டுரையின் லின்க்கை உங்களுக்கு தருகிறேன்.
ttp://azer.com/aiweb/categories/magazine/23_folder/23_articles/23_sumgayit.html
மேலும் படிக்கவேண்டும் என்றால் கூகிளில் சென்று sumgayit என்று டைப் செய்யுங்கள்! இவர்கள் செய்த அட்டுழியம் எல்லாம் வந்து விழும்!
ww.time.com/time/specials/2007/article/0,28804,1661031_1661028_1661024,00.html
மறுபடியும் சொல்லுகின்றேன், இது just a sample! இவர்கள் சுடுகாடாக்கிய நகரங்கள் ஏராளம்! நகரங்கள் மட்டுமா??? காடுகள், மலைகள்........கடல்கள்!!!!!!!!!!!!
இப்பேர்ப்பட்ட கொடுமைகளை செய்த ஒரு கும்பலை ஆராதிக்கும் ஒரு கூட்டம் துபாயை பார்த்து சொல்லுகிறது, அது சுடுகாடாம்!!!
சிவப்பு நண்பர்கள் அவர்கள் எழுதிய இதைப்போன்ற பொய் குப்பைகளை படிப்பவர் எல்லோரும் ஒன்றும் தெரியாத குருடர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்! என்ன செய்வது, வேலை ஏதாவது ஒன்று வேண்டுமே!!!!
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment