நோக்கியா மற்றும் பல கம்பனிகள் நம்நாட்டில் வந்து நம்மையே அடிமையாக நடத்துகிறார்களாம்! புரட்சியாளர்களின் one more கண்டுபிடிப்பு!
நம்ம புரட்சியாளர்கள் அங்கே வேலை செய்து இதை எல்லாம் கண்டு பிடித்தார்களா என்பது தெரியாது! என்ன, கண்டு பிடிச்சா எழுதுறோம், ஏதோ இன்னைய கணக்குக்கு நாலு பெயரை திட்டி ஒரு பதிவு போட்டால் ஒரு புரட்சி செய்தாச்சு என்ற கணக்குதானே? அதையும் கட்டுரை வடிவில் இல்லாமல் ஒரு கதை வடிவில் ஒரு புரட்சியாளர் போட்டார்!
நானும் அந்த கதையை கொஞ்சம் மாற்றி, அனால் அந்த கதையின் நடை மாறாமல், கரு மாறாமல், வேறு மாதிரி இட்டேன்!
ஆதலால், வினாவில் அதை நீங்கள் படித்து இதை படித்தால் நன்றாக புரியும்!
எதிரி
----------
தெருவோரம் நின்றிருந்த ஒரு சீன மனிதரின் படம்போட்ட கொடியினைக்கொண்ட கும்பலை பார்த்துவிட்டு பேரன் கேட்டான்
இது எதுக்கு தாத்தா?
புரட்சி செய்ய.
புரட்சி என்றால்?
சீன மற்றும் சோவியத் தலைவர்கள் தங்கள் நட்டு மக்களை கொன்றது போதாதுன்னு
நம்ம நாட்டையும் பிடித்து நாசமாக்குவது
புரட்சி செய்து என்ன பண்ணுவாங்க?
பேரனின் கேள்விகள் விரிவடைய ஊன்றிக்கொள்ள வார்த்தைகளை தேடினார் தாத்தாஎன்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு நம்பளையே அடிமையாக்கி ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..
பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து பேரனின் கேள்விகள் முடிந்துவிடும் என எதிர்பார்த்தார் தாத்தா.
ஆராய்ச்சிப் பார்வையுடன் அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து நம்ம ஊரையே வளைச்சுகிட்டு ஒழுங்கா சீனா அல்லது சோவித் ரஷ்ய செய்தது போல செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
ஆந்திராவில மற்றும் சடீச்கரில நம்பளையே அடிமையாட்டம் மிரட்டுறான்னு மாமா சொன்னாரே… அவர்களெல்லாம் யாரு தாத்தா....
இவர்கள் புரட்சி அவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாதா?
பேரன் கேட்டதும்
புரட்சி நடந்தது போல் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிப் போனார் தாத்தா.
தடுமாறுவது தாத்தா மட்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment