Thanks a lot Doctor. You are welcome. By the way, I thought you are already doing only that in your blog. In case you need extra bins, please feel free.
Dedicated to தீபாவளியை திட்டும் முற்ப்போக்கு நண்பர்களுக்கு
சொல்லாடல்களால் மட்டுமே சிலை செய்ய நினைக்கும் இந்த சிவப்பு நிற சிர்ப்பிகள் சிந்தனைகள் யாவையும் சண்டியர்களிடம் சன்மானமாக பெற்ற வெறும் வெறுப்பு நிரப்பிகள்
இமயம் தாண்டி இவைகளை வேண்டி சமயம் இதுவே என சத்தியம் செய்தார்கள் கயமைக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் நல்ல சட்டை ஒன்றை நெய்தார்கள் அழித்தலை ஆனந்தமாக்கி, சிதைத்தலை சிங்காரமாக்கி, சகிக்க முடியாத சிறுமை நடைகளை சத்துணவாக படைத்தார்கள்
அழித்தலில் ஆழம் கொள்ளா அனைத்து மாந்தரிடமும் மனிதம் என்றும் மானுடம் என்றும் சற்றும் சளைக்காமல் சத்தமாக வைத்தார்கள்
நச்சு நதியின் இந்த நாற்றத்தை அறிந்த நல்ல குணம்கொண்ட கோடி பேர், கொச்சையாக இட்ட இந்த பச்சை பொய்களை, துச்சமென தூக்கியெறிந்தார்!
வரிந்து வந்து வாய் பிளந்தார்கள் வேண்டிய குருதி வாராது போனதால் தெளிந்த மக்கள் தவிர்த்த தாக்கத்தால் தவித்துப்போனார்கள், தன்னிலை மறந்தார்கள்!
தெரியாததை தொகுத்து, புரியாததை பதித்து, நெறியாளர்கள் நாங்கள் என்றும் நாவிலாமல் வீசி
புதிதாக பலரை விரிவாக வசைபாடி, புதுமைகள் நாங்களே என பரச்சாற்றிக்கொண்டார்!
குதித்துப்பார்த்தார்கள் கசடுகளை சொல்லி, கிடைக்கவில்லை இந்த கசாப்புகடைக்கு காது பிளக்கும் கரவொலி!
விரித்து வைத்தார்கள் நல்ல வெங்கலக்கடையை, வெட்டிபயல்களை தவிர வந்தவர் வேறில்லை!
எல்லைத்தாண்டிய ஏவல்களும், மண்ணைத்தாண்டிய கூவல்களும் விண்ணைத்தாண்டும் வன்மங்களும், வாங்க ஆளில்லாமல் வாடியது!
விட்டேனாபார் என்று இந்த விந்தைகள், தட்டி எடுத்ததோ விடம் தடவிய வினவுகள்!
கட்டிவைத்தாலும் கேட்க ஆள் இல்லையாம் இதற்கும், கூட வளர்ந்த குஞ்சுகளைத்தவிர!
எட்டிப்பார்த்தால் ஒருவனும் இல்லையாம், இன்றைக்கி துப்பித்தாக்க, திட்டப்பட்டவரின் பட்டியல் பூர்த்தியானதால்
சட்டென்று வந்தது நினைவிற்கு பட்டென வெடிக்கும் பட்டாசு
ஆட்களை திட்டினார்கள் ஆன்மாக்களை திட்டினார்கள் மக்களை திட்டினார்கள் பல மதங்களை திட்டினார்கள் விட்டுப்போனது இந்த பட்டாசு மட்டுமே
விட்டுவிட மனமில்லா , தட்டினார்கள் பாருங்கள் புரட்சியாளர்களுக்கு எதற்கு புஸ்வானம் என்று
நரகாசுரனாம் நாமறியோம், நன்னாளேன்றே நாமறிவோம் நால் பக்கமும் நன்சொல் பேசி நல்லவை நிலைத்து நிற்க நடத்தை நன்கில்லா நச்சுண்ட நாராசங்களை நரகாசுரன் என்றழைத்து நினைவில் நிற்காவண்ணம் நீர்ந்து போக மட்டுமே நல்ல நாளொன்றை கண்டோம்,
உடல் சிவப்பினை சிதைத்து, மனிதத்தை வதைத்து அன்பினை உடைத்து, செய்த பாவங்களை புதைத்து ஆயுதத்தால், ஆணவத்தால் அடித்தளமிட்டு ஆன ஒரு ஆதிக்க அடாவடிகளுக்கு ஆடிப்பாடி, கூடிப்பழக நல்ல நாளெதற்கு, நாலு நல்லவை எதற்கு நரகாசுரன் நாளை வரமாட்டான் என்ற நம்பிக்கை எதற்கு
கொடும் கனவாக தொடங்கி, வினாவாக முடங்கி, மனம்போல அர்ச்சிக்கும் சிவப்பு மதம் பிடித்த மா மேதைகள் முழக்கங்களுடன் மகிழ்ந்தார்களாம் நாங்கள் நரகாசுரனின் நண்பர்கள் என்று!
வேண்டாம் இவர்களின் பொய் புரட்சி
கூவினர் அன்று வந்தது ரஷ்ய புரட்சி என்று
பாடினர் நன்று துன்பங்கள் யாவும் கலைந்தது என்று
சாடினர் நின்று தன்னைத்தவிர மற்றவரை நன்று
மூடினர் கொன்று பல சாமானியரை சிவப்பில்லை என்று
2 comments:
thanks for giving a chance to throw rubbish back at you
Thanks a lot Doctor. You are welcome. By the way, I thought you are already doing only that in your blog. In case you need extra bins, please feel free.
Post a Comment