அரைகுறை ஆண்டவனான கதை - 2
----------------------------------
சினிமா கதாநாயகர்களுக்கு மிக முக்கியமான தேவை அவர்களின் உருவத்தை நல்லபடியாக திரையிலோ அல்லது விளம்பரங்களிலோ அல்லாதோ வேறு எந்த ஒரு ஊடகத்திலோ காட்டுவது! அஜீத்து போன்ற நல்ல முகவட்டம் உள்ள ஒருவரைக்கூட ஒரு மட்டமான புகைப்படக்காரர் தன்னின் "திறமையினால்" கெடுக்க முடியும்! கதா நாயகிகளுக்கு கேட்கவே வேண்டாம்! எல்லா புகழும் ஒளிபதிவாளருக்கே! அவர்கள் நினைத்தால் கதாநாயகியை ஒரு வில்லி மாதிரியோ, அக்கா மாதிரியோ அல்லது பாட்டி மாதிரியோ கூட காட்ட முடியும்!
சாதாரண ஒரு மனிதரை, ஒரு நல்ல புகைப்படக்காரர் ஒரு சரியான முயற்ச்சியினால் ஒரு பெரிய ஆளுமை உடயவராகா கூட பதிவு செய்ய முடியும்!
ஜோசப் ஸ்டாலின் ஐந்தரை அடிதான். அவர் நல்ல முக வட்டம் கொண்டவரும் அல்ல! இருந்தாலும் அவரின் புகைப்படங்களை பார்த்தால் மிக அற்புதமாக இருக்கும்! ஹிட்லரின் நிலைமையும் ஏறக்குறைய இதேதான்! அவரின் photo shoot session's மிக பிரபலம்!
ஆகா, சொல்லவருவது, தலைவன் என்ற சொல்லத்துடிக்கும் ஒருவருக்கு முதலில் தேவை ஒரு நல்ல உருவ விளம்பரம்!
சே-குவாராவிர்க்கு அது கிடைத்ததுதான் நல்ல ஒரு ஜாக்பாட்!!!
இன்று எல்லோரும் பச்சை குத்தி கொள்ளும் மற்றும் டி சட்டைகளில் ஒட்டிக்கொள்ளும் சேவின் படத்தை எடுத்தவர் ஆல்பர்டோ கோர்டா என்பவர்! இவர் பிடேல் காஸ்ட்ரோவின் ஆஸ்தான புகைப்படக்காரர்! புகைப்படத்தில் பதிந்த சேயின் முக வாட்டத்திற்கு அவர் சொன்னது "“Guerrillero Heroico” (the heroic fighter), as “encabronadao y dolente” – angry and sad.
அதாவது கோபமுடன் வருத்தமும் கலந்த ஒரு வீரனின் படம் என்று!
மேலும் Jim Fitzpatrick என்ற ஓவியர் சேவின் இந்த புகைப்படத்திற்கு நல்ல ஒரு வடிவத்தைகொடுத்தார் (ubiquitous High contrast drawing)! அந்த வடிவம்தான் இன்று நாம் எல்லோரும் காணும் சே-வின் உருவமாகும்!
இதைப்பற்றி அவர் கூறுவது " I deliberately designed it to breed like rabbits," he says of his image, which removes the original photograph's shadows and volume to create a stark and emblematic graphic portrait. "His image will never die, his name will never die."
மேலும் சேவின் இந்த இமேஜை ஐரோப்பாவிற்கு எடுத்துசென்று பரப்பியவர் Giangiacomo Feltrinelli! அங்கிருந்தான் உலகம் முழுவதும் இந்த பிம்பம் பிரபலமாகியது!
சொல்லவருவது என்னவென்றால், சே-குவேரா என்ற மக்கள் காணும் ஒரு பிம்பம் திட்டமிட்டு பலரால் உருவாக்கப்பட்ட மாயதொற்றமே! அதற்க்கு முதல் படி அவரின் தோற்றத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து அவரின் மனநிலையை புரட்சி, புதியவை என்றவற்றுடன் சேர்த்து ஓட்டவைப்பதில் இந்த அவரின் படம் ஒரு முதல் படியே! அதுவும் வெற்றிகரமாக நடந்த முதல் படியே!
கொக்க கோலா விர்ப்பதர்க்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!
(மேலும் வரும்)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
To Mr.No
நானும் சின்ன வயசில அவர (Che) ஒரு Heroic Icon நினைச்சதல்லாம் உண்டு.
ஆனால் அப்ப எதாவது 'சே'வப்பத்தி தப்பா எங்க பிரசுரித்தால் அது ஐரோப்பியன் எழுத்தாளர்கள் 'சே'வை பற்றி வேண்டுமென்றே பரப்பும் வீண் குற்றச்சாட்டு என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால் அவர் பொருளாதரத்தில் அறிவு மிக்கவரல்ல. அவர் ஒரு மருத்துவர். அந்த பதவியை ஏற்றிருக்க கூடாது.
சமீபத்தில் Fox History Entertainment என்ற தொலைக்காட்சியில் International Terrorism என்ற தலைப்பில் சே நடத்திய தீவிரவாததை விளக்கப்படத்தை footage உடன் ஒளிபரப்பினார். கியுபாவில் அவர் கொன்று குவித்த மக்கள் என அனைத்தும் ஒளிபரப்பட்டது.
உங்களின் Source of Information ?
கம்யூனிச வன்முறை வியாபாரிகளை பற்றிய தொகுப்புகள் பல பல இருக்கிறது நண்பரே! இதில் சே ஒரு சின்ன பாகத்தைதான் செய்தார். ஏனென்றால் அவர் அதற்குள் பிடிபட்டு ஒழிந்தார்! அவரை விட தாதாக்கள் எல்லாம் ஆடிய ஆட்டங்கள், செய்த கொலைகள், சொல்லி மாளாது!
சில புத்தகங்கள் -
Exposing the Real Che Guevara: And the Useful Idiots Who Idolize Him - By Umberto Fontova
Fidel: Hollywood's Favorite Tyrant - By Umberto Fontova
The Che Guevara Myth and the Future of Liberty by Alvaro Vargas losa
Guide to the Perfect Latin American Idiot
Post a Comment