visitors

Tuesday, June 1, 2010

பரிந்துரை விளையாட்டு!!!

பரிந்துரை விளையாட்டு!!!
---------------------------

ஒரு அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டு, தோ படியுங்கள் என்று மட்டும் எழுதுகிறார்! அதற்க்கு ஒரு பத்து பரிந்துரைகள்! கவனிக்க வேண்டியது, இந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!

இயல்பாகவே விடத்தை கக்கும் ஒரு அசிங்கம் ஒன்று ஒரு முக்கால் பக்கம் மூச்சு முட்ட முக்கியதர்க்கு பரிந்துரைகள் பல! எழுதியது என்னமோ அசிங்க ஆர்ப்பரிப்புகள்! அதில் கும்மி அடித்தது என்னவோ அதே நாலு சாம்ப்ராணிகள், அனால் ஏகப்பட்ட பரிந்துரைகள்! இந்த சகதிக்கும் முகமூடி தேவை!

இதைபோல இன்னும் சில சொத்தைகள் வாய்க்கு வந்ததை துப்பி போட்டு விட்டு, அதற்க்கும் நான்கைந்து குப்பை காப்பாளர்கள் வந்து அழுக்கு போதவில்லை தோண்டி எடுத்து அப்புங்கள், வாய் திறந்து உண்ணுகிறோம் என்ற அலப்பல்! பரிந்துரை மேல் பரிந்துரை வேறு! அதாவது உன்னாலே நான் கேட்ட வார்த்தைகள் கற்றேன், என்னாலே நீ ஏதாவது கற்றாயா, வாழ்க புரட்சி என்று துதியுடன்! உனக்கு என் முத்திரை, எனக்கு உன் முத்திரை என்ற கணக்கு!

முத்தாய்பிற்கு முன், பைத்தியம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர், இந்த பாம்புகளுக்கு பண்ணை நடத்த சொல்லுகிறார்! விடம் எடுப்பதற்காக அல்ல, காலை சுற்றி அவைகள் கடித்து பழக காணிக்கையாய் இருக்க! இவரைப்போன்ற அறிஞர்கள் இந்த மாவோ கூடத்தின் usefull idiots படையை சேர்ந்தவர்கள்! எதுக்கும் இதைப்போன்ற ஜால்ராக்கள் இருக்கட்டும், புரட்ச்சி வரும்வரி இவைகள் உபயோகப்படலாம் என்ற எண்ணத்தில் இவர்கள்
வளர்க்கப்படுகிறார்கள் என்பது கூட புரியாது, வக்காலத்து வாங்குவதில் இன்ப சுகம் காண பழகிக்கொண்டவர்கள்! சொல்லி வைத்தார்ப்போல இவர் பதிவிற்கும் பல பரிந்துரைகள்!

இன்னும் ஒரு மேதாவி பாக்கி! இவருக்கு அப்பப்போ கோபம் வரும் ! இவர் எல்லோரையும் ஏசுவார்! பிற்போக்காளர்களை கண்டால் இவருக்கு கோபம் வருமாம்! அதை எதிர்ப்பது இவரின் உரிமையாம்! ஆதலால் இவர் எல்லோரையும் சாடுவாராம்! போதாக்குறைக்கு முகமூடியுடன் வருபவர்களை கண்டால் இவருக்கு ஆகாதாம்! ஆனால் இவர்களின் தோழர்களெல்லாம் முகமூடியுடன் வந்தால் அதற்க்கும் ஒரு விளக்கம் ரெடி! அதையும் யாராவது கேள்வி கேட்டால் வார்னிங் கொடுப்பாராம்! போதாக்குறைக்கு வாரத்திற்கு ஒரு ரெண்டு பக்கம் எழுதி, இந்த நாட்டு பாரம்பிரியங்களை திட்டி அதற்க்கு பின்னூட்டம் வருகிறதா என்று மணிக்கணக்கில் பார்த்துகொண்டிருப்பார்! அவ்வளவாக ஜன நடமாட்டம் இல்லாததால், இந்தமாதிரி சான்சு கிடைத்தால் போட்டு தாக்காமலா விடுவார்!

அதற்க்கும் பரிந்துரைகள் பல! குத்துவது யாரென்று பார்த்தால், அதே கும்பல்தான்! பரவாஇல்லை விடுங்க, இன்னைக்கு நல்லா தூங்கட்டும் என்று விட்டால், இந்த காமடியை கண்டு சும்மா இருக்க முடியவில்லை!

சரி, இந்த குப்பையை கிளறிய உலகமகா உத்தமர்கள் தளத்தில் வந்து கும்மி அடிப்பவர் யாரென்று பார்த்தால், அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான்! ஒரு பத்து பேர் பூச்சாண்டி, கேள்விக்குறி, கொக்கா மொக்கா என்று பெயர்வைத்க்கொண்டு வேலை விட்டி இல்லாத சிலர்! இவர்கள் எழுத்துகளை கூர்ந்து கவனித்தால் இவர்கள் எல்லாம் ஒரு சில ஆசாமிகளின் வேறு வேறு முகமூடிகள்தான் என்பது தெரியவரும்!

நான் சில காலம் முன்னர் எழுதிய (அவர்கள் தளத்தில் போய் எழுதியது. ஒரு முறை அடி பட்ட பிறகு என் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை,அவ்வளவோ பயம் :-))) ஹி ஹி)வினவு டாக்க்டிக்ஸ் பற்றிய ஒரு பத்தியை இங்கே பிறகு பதிவிடுகிறேன்! அதற்க்கு முன்னர் இந்த பரிந்துரை பைத்திக்காரத்த்னத்தை பற்றி இன்னும் கொஞ்சம்!!

அதாவது இந்த தமிழ்மணம் இந்து மதம், இந்தியா, இந்திய இறையாண்மை, இந்திய பாரம்பரியம் பற்றி திட்டுபவர்களுக்கு ஒரு தளமாக ஆகிப்போய் விட்டபடியால், ஒத்த கருத்துடைய இதுபோன்றவர்கள் சமயம் கிடைக்கும்போழுதேல்லாம் ஒன்றாக கூடி காட்டு கூச்சல் போடுகிறார்கள்!

அதானால் ஒன்றும் குடி மூழ்கி போகாதுதான்! இது எப்படி என்றால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பத்து தவளைகள், பிழைக்க இடம் தேடி அலையும்போழுது கிடைத்த இடம்தான் இந்த திரட்டிகள்! இவர்கள் எழுதிய குப்பைகளை இவர்களே படித்து மகிழ்ந்து, கூத்தாடி கொண்டாடி, புரட்ச்சி வந்தது பார், முற்போக்கு பார், உலகமே வாழ்த்துது பார் என்று கூவ கிடைத்த ஒரு சான்சு! இதானால் கெட்டது இவர்களின் பிழைப்பு, அதாவது இவர்களை வேலைக்கு எடுத்து கணினியெல்லாம் கொடுத்து தங்களுக்க்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் கம்பனிகாரர்களின் பிழைப்பு!!

இவர்கள் எழுதுவதும், அந்த கணினியில் பாக்க்மேன் விளையாட்டு ஆடுவதும் ஒன்றுதான்! பாக்மன் (ஆரம்பகால versions நான் ஆடியது உண்டு)ஆட்டத்தில் பப்பில்களை உடைத்து பாய்ண்ட்களை எடுத்து முழுங்க வரும் சுறாக்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்! தமாஷாக இருக்கும்! பாய்ண்ட்டு எடுக்க எடுக்க குஷியாக இருக்கும்! அது தரும் போதை தலைக்கு ஏறி, ஒரு நல்லைக்கு ஒரு அரை மணி நேரம் ஆடவில்லை என்றால் வேலை ஓடாது!

அதே போலதான் நம்ம தமிழ் பதிவு எழுதும் முற்போக்கு செம்மல்களும்!

கண்டதை எழுதி, முதுகு சொரிய, யார் நன்றாக சொறிந்தார்கள் என்று தங்களின் குட்டை உலகிற்கு சொல்ல கிடைத்த நல்ல குட்டை இந்த திரட்டிகள்! முதுகு சொரியும் வழிமுறைதான்
இந்த பின்னூட்டம் இடும் வழிமுறை!. இந்த முதுகு சொறிதலுக்கு முத்தாய்ப்பு, "பரிந்துரை" என்ற விளையாட்டு!

இங்கே எழுதப்படாத சட்டம், திட்டி எழுதினால், அதாவது நாங்களோ அல்லது எங்களுக்கோ வேண்டப்பட்டவர்கள் திட்டினால், முதலில் செய்யவேண்டியது, பரிந்துரை! "அருமை",
"வழிமொழிகிறேன்" "மிக சரி" "டௌசர் கிழ்சிடீங்க" என்ற சொல்ல ஒரு கூட்டம்! இவர்களின்
அடுத்தகட்ட வழிமுறை பரிந்துரை!

அதாவது உலகெல்லாம் சொல்லுதுபார் என்று சொல்ல துடிக்கும் உலகம் தெரியாத,உலகுக்கே தெரியாத ஒரு சுண்டெலிகள் கூட்டம் தங்களுடைய இல்லாத இன்றியமையாமையை உலகிற்கு சொல்ல நடத்தும் வழிமுறைதான் இந்த பரிந்துரை டிராமா!

இவர்களின் கடவுள் ஜோசெப் ஸ்டாலின் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தல் வழிமுரைப்பற்றி ஒருமுறை சொன்னார்! Its not the people that vote counts, its the people who count the vote! அதாவது, ஓட்டுப்போடும் மக்கள் கூட்டம் முக்கியமில்லை, அதை எண்ணும் கூட்டமே முக்கியம்! ஸ்டாலின் வழி வந்தவர்கள் ஆயிற்றே! அதே வழிமுரைதானே இவர்களுக்கும்!

இவர்கள் வழிமுறைகளில், ஒட்டு (இங்கே பரிந்துரை)என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றை உலகிற்கு சொல்லவதற்கு மட்டுமே! இது பிற்போக்கு, இது பொறிக்கித்தனம், இது அராஜகம்,
இது முற்போக்கு, இது புரட்சி, ஏனென்றால் நங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று தாங்களாகவே எடுத்த முடிவை வெளியே சொல்ல பயன்படும் வழிமுறைதான் இந்த பரிந்துரை விளையாட்டு!

அதுவும் திரட்டிகளில் இவர்களின் குத்தகை மற்றும் அடிமைகள் பல இருப்பதால் இந்த விளாயாட்டு கன கச்சிதமாய் நடக்கிறது!

இதனால் என்ன பயன் என்று பார்த்தால் - ஹி ஹி ஹி, ஒன்றும் இல்லை!

(மாவோ, ஸ்டாலின், சே குவேரா போன்ற மா மனிதர்கள் உயிருடன் இருந்தார்களானால், சந்தோசப்படுவார்கள், இன்னுமாட எங்கள இவெங்க நம்புறாங்க என்று!)

2 comments:

நெத்தியடி முஹம்மத் said...

அன்புள்ள நோ அவர்களே...

இன்று தெரிய வந்த உண்மை இப்படி இருக்க, அன்றே... பலருடைய எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் அன்று எதற்கு வினவிடம் இருந்து அவருடைய படிக்கும் திறனின் மீது அவ்வளவு நக்கல்…?

இதில் எல்லாம் அறிந்த சந்தனமுல்லை, வினவை //பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள்// என்கிறார்... இது செம காமடி. தன் முதுகில் தானே சபாஷ் தட்டா?

"இனி 'எல்லாரும்' வினவில் எழுதலாம்... "இனி 'அனைவரின்' எழுத்துக்களும் வினவில் இடம்பெறும்" என்பது இப்படித்தானா? ஆப்படியானால், இனி அடுத்து... (காரியம் ஆகவேண்டுமானால் தம்மால் பலமுறை வசைமாரி பொழியப்பட்ட)ஆர்.வி, டோண்டு...? வினவின் புதிய கூட்டணி வாழ்க...

தன் கொள்கை கடவுள்களை இழிவு படுத்தினார் என்று எவ்வளவு கேவலமாய் ஒரு பெண்ணை இழித்து பதிவுகள் போட்டு அதற்கு அசிங்க அசிங்கமாய்... நர்சிமே படிக்க வெட்கி கூசும்..(???).. அளவுக்கு ஆபாசமாய் பின்னூட்டங்கள் போட்டு கொட்டமடித்த வினவு தோழர்களா இப்போது ஒரு பெண்மையின் மானம் காக்க புறப்பட்டுவிட்டார்கள் என்று ஆச்சரியப்பட்டாள்... ச்சே... வினவு இல்லை வேறொருவர்... அப்பாடா...

வினவு என்ற 'பின்னூட்ட ஜனநாயகத்தின் ரஷ்ய ஸ்டாலின்', 'பதிவுலக நாட்டாமை', 'வலையுலக சர்வாதிகாரி'க்கு இன்று சரியான எழமுடியா நெத்தியடி கொடுத்துவிட்டீர்கள்...

சில மாதங்களாக நான் எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை பிரசுரிக்காமல் கொன்று புதைத்தனர்...

வினவின், பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்... (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் 'ஒதுங்கி இருப்பதாய்' கூறினர்...என்ன செய்வது... நொந்து போவதைத்தவிர... அவர்களின் போலி பின்னூட்ட ஜனநாயகம் அப்படி...

கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. பெப்சி-கோக்கில் 'ஜாக்பாட் ஜே' என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்... ஏனோ ஆச்சரியப்படும் வகையில் தொடர்ந்து அனுமதித்தனர்...

சரி, திருந்திவிட்டார்களோ(?) என்று என் பழைய ஐடியில் நான்போட்ட மேற்கூறப்பட்ட கருத்துகள் வரவே இல்லை. வெறுத்துபோய் 'ஒழிக பின்னூட்ட ஜனநாயகம்' என்று போட்டதை மட்டும் வைத்துக்கொண்டு என்னை தூற்றுகின்றனர்.

ஒரே ஆள் அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்...

வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்...

ஆகிய இரண்டும்

ஒன்றா...? ...ஒன்றா?.. ஒன்றா?

இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா?

உப்புத்திண்டவர்கள்... தண்ணீர் குடிக்கிறார்கள்...

Anonymous said...

திரு.நோ

உங்க பாணியில ஒரு திரு. போட்டாச்சு.

உம்மை என்னமோ பெரிய இதுவான நோ என்று நினைத்திருந்தேன். சில பின்னூட்டங்களில் கூட கலக்கற நோ கலக்கற என்று மற்ற பதிவர்கள் சொல்லவிட்டாலும் உம்மை கண்டுகிறாங்கோ.

ஆனா நீர் என்னய்யா இப்படி மெடலுக்கு மேல் மெடல் வாங்குகிறீர்.

நல்ல வாதங்ககளை எடுத்து வைக்கிறார், பதிவுலக தாதக்களை பெண்டு கழட்டுகிறார் என்றெல்லாம் நினத்திருந்தேன்.

சாருவை விட மோசமா உதை வாங்குகிறீங்களே.குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு பதிவிடும், அதே வகையில் கெட்ட வார்த்தை உபயோகிக்கும் சில்லறை பதிவுகளில் தென்படுகிறீர். சின்னபயல்களுக்கு வரிக்கு வரி பதில் வேற.

கோவி அய்யா கூட காது காதுன்னா வேது வேதுங்கிற மாதிரி கோனல்மானல் பதில் சொல்ற அளவுக்கு தான் போவாரு. ரொம்ப அசிங்கமா எழுதுவதில்லை.

இவனுக எழுதுறத படிக்கிறதே அதிகம் அதுக்கு பின்னூட்டம் ரொம்ப அதீதம் இல்லையா ?

எவனுக்கு எந்த அளவுக்கு வெயிட் கொடுக்கனும்னு தெரியாம இப்படி பச்சபுள்ளயா இருக்கலாமா