இடையே ஒரு சின்ன கேள்வி பதில்
(திரு டோண்டு அவர்களின் தளத்தில் "புரட்சி வீரர்களின்" கொள்கை மற்றும் கள-பணியைப்பற்றி சிலாகித்து எழுதிய ஒருவருக்கு நான் கொடுத்த பதில்)
// பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு//
The Nationalsozialistische Volkswohlfahrt (NSV), meaning "National Socialist People's Welfare" என்ற ஒரு இயக்கம் ஜெர்மனியில் இருந்தது! இதுவும் களப்பணியாற்றி மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு இயக்கம்!
ஜெர்மானிய வெள்ளை மக்களுக்கு மட்டும் சில நல்ல காரியங்களை செய்தது! இதில் உள்ளவர்கள் உண்டியல்களை குலுக்கிக்கொண்டு தெருத்தெருவாக வலம் வந்தனர். கிடைத்த பணத்தை மற்றும் பிற உபயோகமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து இல்லாதவர்களுக்கு (அதாவது வெள்ளை ஜெர்மானிய மக்களுக்கு மட்டும்) கொடுத்தனர்!
இந்த இயக்கத்தைப்பற்றியும், அவர்கள் செய்த "நல்ல காரியங்கள்" பற்றியும் ஆவணங்கள் உள்ளன!
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் நாஜி இயக்கத்தின் ஒரு அங்கம் என்பதுதான்! அதாவது இட்லரின் கொலைகார பாசிச கும்பலின் ஒரு பகுதி! இருந்தும், உண்மையில் இந்த மாதிரி பணம் சேர்த்து இல்லாதவர்களுக்கு உதவும், களப்பணியாற்றும் ஒரு கும்பலாக இது செயல் பட்டது என்பது மறுக்க முடியாது!
நீங்கள் சொல்லும் லாஜிக் படி, ஏன் இவர்களையும் சமூக விரோதிகளாக பார்க்கவேண்டும்? அதற்க்கு பதில், என்ன இருந்தாலும், என்னதான் சிறிதளவு நன்மைகள் செய்தாலும், இந்த குழுவின் அடித்தளமாக அமைந்தது, கொலைகார நாஜி கும்பலின் சித்தாந்தங்களே! நாஜிகள் வேறு இவர்கள் வேறு இல்லை!
அதேபோல்தான் நம்ம நாட்டு மாவோ கும்பல்களும்! நல்லது செய்வதுபோல படம் காட்டினாலும், ஏதாவது கொஞ்சம் நல்லது செய்தாலும் (அப்படி ஒன்றும் செய்வதாக தெரியவில்லை) இவர்களின் அடித்தளம் கொலைகார கொள்கைகள் மட்டுமே!
அயோக்கிய ஹிட்லரின் நாசிகளை NSV செய்ததை வைத்து ஒருவர் பாராட்டினால் அது எவ்வளவு மடமையோ, அதே மடமை இந்த கும்பல்களை அவர்கள் செய்யும் கள-பணிகளுக்காக ஒருவர் பாராட்டுவதும்!
// ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!//
ஹிட்லரின் நாஜிகளும் ஒரு குழுமம், அவர்களின் கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றினார்கள், இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்? இந்த கேள்வி எவ்வளவு வக்கிரமானதோ, அதே வக்கிரமானதுதான் உங்கள் கேள்வியும்!!
கொடூரங்களுக்கும் கயமைகளுக்கும் தங்கமுலாம் பூசுவது என்று ஒருவர் தீர்மானித்து விட்டால், எந்த ஒரு விளக்கமும் அவர் கேட்கமாட்டார் என்று முடிந்துவிடும்! கடவுள் சார்ந்த மதங்களுக்கு மட்டும் பொருந்துவது இல்லை இது! மாவோ சார்ந்த கம்யூனிச மதத்திற்கும் இது பொருந்தும்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
123
Post a Comment