visitors

Sunday, June 6, 2010

அரைகுறை ஆண்டவனான கதை!

அரைகுறை ஆண்டவனான கதை
--------------------------------

சோவியத் சர்வாதிகாரிகளுக்கு சர்க்கரை சப்ளை செய்யும் சாதாரண கடை!

என்னவென்று முழிக்கிறீர்களா? இதுதான் கியுபா என்ற சோசியலிச கம்யூனிச புரட்சியாளர்களின் சொர்கபுரி!!

சோவியத்து யூனியனிற்கு சர்க்கரை, அவர்கள் இந்த கடைக்கு கொடுத்தது பெரிய சில்லறை போக, டப்பா டப்பாவாக கச்சா எண்ணை! அப்படி கொடுத்ததை விற்று காசுபார்த்த கூட்டத்திற்கு பெயர் "புரட்சி பூமி"! இதில் குற்றங்கள் பல செய்து, அதற்க்கு புரட்சி என்றும் பெயரிட்டு சகட்டு மேனிக்கு தாண்டவமாடிய ஒருவர் சே குவேரா என்ற அழிதல் விரும்பி!!

அப்பேற்பட்ட மாசிலா மகானின் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு "புரட்சி" "புரட்சி" என்று பாட்டு பாடும் புரட்சி விரும்பிகள் பல!! இதில் காமடி, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் அவரின் படத்தை போட்டுக்கொண்டு ஒரு சிலர் கதை அளப்பது! இணையத்தில், கேட்கவே வேண்டாம்! பலர் இதை செய்கிறார்கள்!

வேற்று நாட்டு கொள்கைகள் மற்றும் உருவங்களை நாங்கள் அடிமைபோல பின்பற்றுவோம், வாழ்த்துவோம், துதிபாடுவோம், அவற்றிற்காக சண்டையும் போடுவோம் என்று எல்லோருக்கும் காட்ட இந்த சே குவேர துதி பாடும் வழி முறையை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை!

இந்த மா மனிதரை பற்றி கொஞ்சம் பார்ப்போம்!

கியூபாவை கைப்பற்றிய காஸ்ட்ரோ சே குவேராவை அந்த நாட்டின் National Bank இன் தலைவராக போட்டார்! அவர் முதலில் செய்த காரியம், புதிய பண நோட்டுகளில், தன பெயரால் கையெழுத்து போட்டு அச்சடித்தது!

அவருக்கு கீழு பணியாற்றிய "Ernesto Bentacourt" கூறுகிறார் : “[He] was ignorant of the most elementary economic principles.” Guevara’s powers of perception regarding the world economy were famously expressed in 1961, at a hemispheric conference in Uruguay, where he predicted a 10 percent rate of growth for Cuba “without the slightest fear,” and, by 1980, a per capita income greater than that of “the U.S. today.” In fact, by 1997, the thirtieth anniversary of his death, Cubans were dieting on a ration of five pounds of rice and one pound of beans per month; four ounces of meat twice a year; four ounces of soybean paste per week; and four eggs per month.

அதாவது, பொருளாதாரத்தில் அவரின் அறிவு, பொருளாதாரித்தில் உள்ள மிக அடிப்படையான விடயங்களில் கூட புரிதல் இல்லாமை என்ற நிலைமையில் மட்டுமே இருந்தது! மேலே குறிப்பிட்ட ஒரு கூட்டத்தில் அவர் உளறியதை பார்த்து பலர் வாயடைத்து போனார்கள்!

அடுத்து நிலச்ச்சீர்த்திருத்தங்களில் தன்னுடைய்ய திறமையை காட்ட நினைத்தார்!
பணக்காரர்களிடத்திலிருந்து நிலத்தை எடுத்து "ஏழைகளுக்கு" கொடுக்காமல் (அதுதானே சமூக நீதி?) ஆட்ச்சியில் உள்ள பணித்துரையினருக்கு (bureacrat) கொடுத்தார்!! (இந்த சட்டம் அவரின் வீட்டில் எழுதப்பட்டது)! இதுவும் இவர் செய்த பல குளறுபடிகளினால், 1961 முதல் 1963 வரை கரும்பு சாகுபடி (அந்த நாட்டின் ஒரே ஆதார பயிர்) பாதியாக குறைந்தது!

கியூபாவை தொழில் மிகுந்த நாடாக்குகிறேன் என்று இவர் அடித்த கூத்து பற்றி மிக விரிவான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றனா!

ஒரு கட்டத்தில் காஸ்ட்ரோவே ஆடிப்போய் இவர் போனால் போதும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்!

உண்மை இப்படி இருக்கையில் இந்த அரைகுறை வன்முறை விரும்பியை ஒரு மிக்க அறிவாளி போல பலர் சித்தரிக்க விழைந்து அதில் வெற்றியும் கண்டார்கள்! பக்கம் பக்கமாக ஆதாரங்கள் வந்த பிறகும், அதை படிக்காமல், சே குவேராவை ஏதோ பெரிய புள்ளியாக எல்லாம் தெரிந்தவராக திரித்து அதில் மகிழ்ச்சி கண்டனர்!

மேலும் வரும்!

1 comment:

no-nononsense said...

//மேலும் வரும்!//

மேலும் அவசியம் வர வேண்டும்.