visitors

Wednesday, November 25, 2009

வினவாயணம் - பகுதி - 2

வினவாயணம் - பகுதி - 2

--------------------------------------
புரட்சி செய்யலாம் வாங்க:
-----------------------------------------


தோழர்கள் வினவு, மரணஅடி,சூப்பர் லினக்ஸ் மற்றும் பலர் ஓர் அறையில் உட்கார்ந்து பூந்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் மட்டும் பூந்தியை எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துக்கொண்டிருக்கிறார்! யாரென்று பார்த்தால் திரு புசிக்ஸ்சு! குருவி வெடியால் வந்த விளைவு!

வினவு (திடீரென்று விழித்துக்கொண்டு) : தோழர்களே, என்ன நேரம் பார்த்தீங்களா? பஜனைக்கு நேரமாகுதே? சீக்கிரம் வேலைய முடிங்க, போயி நடக்க வேண்டியத பாருங்க!

இப்படி அவர் சொல்லியவுடன் தோழர்கள் எல்லோரும் எழுந்து பக்கத்து அறைக்கு செல்கிறார்கள் அப்பொழுது வாசலில் ஒரு சத்தம்: சார்...........


வினவு: யாருங்க?

வந்தவர்: ஐயா இங்க வினவு கோஷ்டி அப்படின்னு ஒரு புரட்சி செய்யத்துடிக்கும் செயல் வீரர்கள் இருக்கறதாக கேள்விப்பட்டேன். ஒரு புரட்சி சம்பந்தமான வேலை ஒண்ணு இருக்கு, அதான் உங்களுக்கு ஆர்வம் இருக்கா, என்னோட வரீங்களான்னு கேட்க வந்தேன் ???


கலகம்: டேய் .......அடிவருடி....$^&%&^%**...டேய்.....ஏகாதிபத்தியம்....டேய் நாயே... நாங்க பஜனையா இன்னுமும் ஆரம்பிக்கல, அதுக்குள்ளா என்னடா அவசரம், அமெரிக்க அடிவருடி.....


மரணஅடி: தோழர் கலகம். பார்த்து...இந்த $^&%&^%** வார்த்தை என்னோட வார்த்தை, அத்த நான் சொன்னாத்தான் அந்த திட்டுக்கே அழகு. அனாவசியமா என்னோட வார்த்தைகள வீணாக்காதீங்க! வேற எதையாவது போட்டு திட்டுங்க, உங்களுக்கு சொல்லியா தரணும்!


கலகம்: என்ன மரண அடி சார் இப்படி சொல்லிட்டீங்க? நான் எங்க திட்டினேன், விவாதம்தான செய்தேன்!

வினவு எழுந்து பொய் அவர்கள் இருவரின் வாயையும் மூடுகிறார்.

வந்தவரிடம் வினவு: மன்னியுங்கள்....அவங்க எப்பவும் அப்படித்தான்...யாராவது புதுசா கண்ணுல பட்டா கண்டபடி திட்டுவாங்க.....தப்பா நினைக்காதீங்க...

வந்தவர்: அட உங்களமாதிரி ஒரு புரட்ச்சி கூட்டத்தைதான் இது வரை தேடினேன், கண்டுகொண்டேன் இப்பொழுது! சும்மா சொல்லக்கூடாது, எல்லோரும் ரொம்ப நல்லா தெளிவா திட்டுறீங்க! இதான் இதத்தான் எதிர்ப்பார்த்தேன்! என்ன உங்களுக்கு நான் எதிர்ப்பாகுற விஷியங்கள் மற்றும் அதற்கு எடுக்கக்கூடிய நேரம் இதெல்லாம் இருக்கான்னுதான் தெரியல்ல.


வினவு: விஷியத்திற்கு வாங்க! எங்க போயீ புரட்சி செய்யணும் சொல்லுங்க! நாங்க ரெடி. எங்க கிட்ட திட்ட ஆளுருக்கு, கண்டபடி வசைபாட வாயிருக்கு, வாய் சவடால் உட நாவிருக்கு, நாலாந்தரமாக நாராசம் பாட நேரமும் இருக்கு! இப்பகூட பாத்திங்கன்னா, நாங்க சொம்மாத்தான் ஈ ஓட்டிட்டு இருக்கோம்! என்ன நீங்க வந்ததுல எங்க பஜனை கொஞ்சம் தடைபட்டுபோச்சு!

வந்தவர்: என்னது, நீங்க புரட்சி முற்போக்கு வீரர்கள் என்றுதானே கேள்விப்பட்டேன், உங்களுக்கு எதுக்கு சார் இந்த பிற்போக்கான, கேவலமான பஜனை என்ற பார்பனிய பம்மாத்து?

வினவு: சார், நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, நீங்க நினைக்கிற மாதிரி இது கேவலமான இந்து மத பஜனை கிடையாது, இது ஸ்டாலின் மாவோ நாமாவளி பஜனை! பக்கத்து அறையில பாத்தீங்கன்னா ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ, கிம் இல் சுங், போன்ற மனித நேய மகான்களின் படங்களை வைத்து, நடுவுல நாங்க எல்லாம் உட்கார்ந்து தெனமும் கொஞ்ச நேரம் துதிப்போம். அது முடிந்த பிறகுதான் திட்டுவதெல்லாம்!

வந்தவர்: அப்போ மார்க்ஸ் லெனின் எல்லாம்...

வினவு: அவங்களுக்கு மாசத்துக்கு ஒருமுறை ஆராதனை......... செவப்பு கொடி நட்டு, புரட்சி புரட்சி என்று ஒரு பத்து நிமிடங்கள் கத்திட்டு, பூந்தியும்

சோடாவும் சாப்பிடுவோம்!

வந்தவர்: அப்போ வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது விசேஷம் கிடையாதா? அதான் அந்த மே தின பரேடு அப்படின்னு நம்ம காலியாகிப்போன சோவியத்து ஆளுங்களும், இப்போ இருக்கிற சீனாக்காரனுங்களும் செயுராமாதிரி?

வினவு: ஏன் இல்லை? வருடத்திற்கு ஒரு முறை நாங்க எல்லாம் இந்த கட்டடத்துக்குள்ளார கூடி, வெகு விமர்சையாக கொண்டாடுவோம்! நம்ம தோழர்கள், பேப்பர் வித்த காசில பழைய பாத்திரங்கள் சில, செல்லரிச்சிப்போன ரெண்டு டீக்கடை பெஞ்சு, ஒரு நாலு ஒடிந்த

பிளாஸ்டிக் குடங்கள், மற்றும் ஒரு சோளக்கொலை பொம்மை போன்றவைகளை வாங்கி போடுவார்கள். நாங்களும் அந்த பொம்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், புஷ், இந்திய ஏகாதிபத்தியம் அப்படின்னு பெயர் சூட்டி, ஆளாளுக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் அதை கண்டபடி திட்டி, அப்புறம் ரெண்டு சவுக்கு கட்டையால ஒரு பத்து நிமிடங்கள் அந்த பொம்மையை அடித்து, சிவப்பு கொடி ஒன்றை கையில் பிடித்து, ஸ்டாலின் வாழ்க மாவோ வாழ்க என்று கத்திவிட்டு, கடைசியாக நாங்க வாங்கி வந்த பொருட்களை சுக்கு நூறாக உடைத்து, ஆஹா புரட்ச்சி புரட்சி என்று கூவி, மொட்டை மாடிக்கு சென்று

அதையெல்லாம் தூக்கி அடித்து, எல்லாம் முடிந்தபின், பூந்தியும் சோடாவும் சாப்பிடுவோம்!

வந்தவர்: ஆஹா அருமை அருமை....

வினவு: கேளுங்க, அது மட்டும் இல்லை..... இது முடிந்த பின், பூந்தி எல்லாம் காலியாகியபின், சிறந்த புரட்சியாளர் யார் என்ற போட்டி ஒன்றும் வைப்போம்!

வந்தவர்: அப்படி என்னங்க போட்டி? அதும் புரட்சி போட்டி?

வினவு: விதம் விதமா திட்டும் போட்டி! அதாவது, முதலில் கண்டபடி திட்டணும், அப்புறம் கண்ண மூடி திட்டணும், அப்புறம் காது மூக்கு இவைகளை

மூடிக்கொண்டு திட்டணும் அப்புறம், வாயை மூடிக்கொண்டு திட்டணும்!

வந்தவர்: இந்த கடைசி சமாச்சாரம்தான் புரியவில்லை......அது எப்படி சார் வாயை மூடி.......

வினவு: வேற ஒண்ணும் இல்லை, செய்கயிலையே காண்பித்து மற்றவருக்கு இது திட்டு என்று புரியவைக்க வேண்டும்!

வந்தவர்: அட அட ........ யாருங்க இதுல ஜெயிப்பவர் ரொம்ப பெரிய திட்டு நிபுணராக இருப்பார் போல இருக்கிறது....யாரு சார் அது?? தயவு செய்து சொல்லுங்க சார்?


வினவு: தோழர் கலகம்....... (அவரைக்கைக்காட்டி)


வந்தவர்: வந்தவுடன் என்னை யாரென்று கூட தெரயாமல் கண்டபடி திட்டியபோதே நினைத்தேன்........

வினவு: ஆமாம் ஆமாம், இவர் சாதாரண ஆளு இல்லை, சி பீ ஐ மார்சிஸ்ட் லெனினிஸ்டு போல இவரு சி பீ ஐ திட்டிஸ்ட்..........

வந்தவர் (தோழர் கலகத்தைப்பார்த்து, பரவசப்பட்டு) : கொஞ்சம் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்.........


கலகம்: டேய் .......^^%^&&*()(...... ஏகாதிபதிய..அடிவருடி.......நாயே..........


வந்தவர்: இது போதும் இது போதும்......


வினவு: Introduction போதும் என்று நினைக்கிறேன் சார், விடயத்திற்கு வருவோமா?

வந்தவர்: சரி. இதான் மேட்டர். எங்க ஊராண்ட இருக்கிற ரெண்டு கிரௌண்டு பொறம்போக்கு நிலத்துல குழி வெட்ட முடிவெடுத்தோம், மழை இல்லா காலத்தில மக்களுக்கு உதவ நீர் தேக்கம் செய்ய! அத்த தடுக்கநினைகிறாங்க சில ஏகாதிபத்திய அடிவருடிகள் மற்றும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் சிலர். இவங்களுக்கு பயந்து யாருமே குழிவெட்ட வர மறுக்கிறார்கள். நீங்க வந்து கொஞ்சம் புரட்சி பண்ணீங்கன்னா எல்லோரும் பயப்புடாம வேல செய்வோம்!

வினவு : ஆகா ஆஹா......இது தான் இதுதான் நாங்க செய்ய வேண்டியது! என்னடா எங்க வாழ்க்கையில புரட்சி புரட்சி என்று கத்தியே retire ஆகிடுவோம் என்றல்லோவோ நினைத்தோம், தெய்வம் போல, மனிக்கவும் ஸ்டாலின் போல வந்து உதவுறீங்க! வாங்க தோழர்களே, போயீ புரட்சி பண்ணுவோம்!!!!

வந்தவர்: ரொம்ப நன்றி புரட்சியாளர்களே.... வாங்க எல்லாம் போகலாம் ....போய் புரட்சி செய்யலாம்.........

வினவு: போகலாம் சார், ஆனால், இன்றைய கோட்டா பஜனை பாக்கி, கொஞ்சம் வெயிட் செய்தீங்கன்னா முடிச்சிட்டு வந்திடுவோம்!

வந்தவர்: ஒ தாராளமா....ஒரு விண்ணப்பம்...நானும் உங்க பஜனையை பார்க்கலாமா?

வினவு: வாங்க...........

புரட்சியாளர்கள் எல்லோரும் மற்றும் வந்தவரும் அடுத்த அறையினுள் செல்கிறார்கள்! உள்ளே, முன்னர் சொன்னதைப்போல பல சர்வதிகாரிகளின் படங்கள்! எல்லோரும் கீழே உட்காருகிறார்கள்!


வினவு:
ஓம் நமகா ஸ்டாலின் பேரச்சொல்லி
ஓம் நமகா மாவோவின் ஊரைச்சொல்லி
ஓம் ஓம்

அரைடிக்கெட்:
மாவோவே தெய்வம்
அவர் வார்த்தையே வேதம்
அவர் செய்த ஆட்சி
நமக்கும் வேண்டும்

மரண அடி:
ஸ்டாலின் அண்ணன் எந்தன் மெய்ப்பனல்லோ
அவர்தான் நமக்கு கடுவுளன்றோ
அவர்தம் பாதையில் நாம்செல்வோம்
பிடிக்காதோர் எல்லோரையும் திட்டி தள்ளுவோம்

செங்கொடி:
புரட்சிக்கு தந்தை யவரோ
எங்க காழ்ப்புணர்ச்சிக்கு காரணம் யவரோ
யாவிற்கும் அவரே எல்லை
அவருக்கும் கவலை இல்லை
மாவோ பெற்ற பிள்ளைதானே யாரும்

(எல்லோரும் கோரசாக) :
தாக்கினரே போட்டு தள்ளினாரே ஸ்டாலினையே மிஞ்சினாரே


கலகம்:

மாவோ அண்ணன் சொல்லுறார் ஒத்துக்கோ ஒத்துக்கோ
கண்டபடி திட்டும் கலைய கத்துக்கோ கத்துக்கோ
வாயார திட்டுவோம் வெறுப்போடு
கண்டபடி கத்துவோம் கடுப்போடு
திட்டுன்னா திட்டுவேன்
கண்டபடி கத்துவேன் ....


இப்படியாக பஜனை முடிந்தபின் திரு வினவு அவர்கள் எல்லோருக்கும் பூந்தி பிரசாதம் கொடுக்கிறார், கூடவே தோழர் திரு கலகமும் ஒவ்வொருவரையும் தனித்தனியே திட்டி ஆசீர்வாதம் கொடுக்கிறார்!


வந்தவரும் மிக பரவசத்துடன் : ஆஹா என்ன முற்போக்கு என்ன முற்போக்கு..... உங்க பஜனையை பார்த்து பரவசப்பட்டதால் எனக்கே ஒரு பஜனை பாடல் பாடவேண்டுமென்று தோன்றுகிறது!


வினவு: அதுகென்ன... பாடுங்களேன்.....கடுவுளப்பத்தியா பாடுறோம்... அதெல்லாம் பிற்போக்கு.. நாமெல்லாம் முற்போக்கு .......... நாமெல்லாம் ஸ்டாலின் மாவோ லெனின் இவங்களைத்தான் வணங்குவோம்.....பாடுவோம் ....... ம்ம் ஆரம்பிங்க....வந்தவர்:

மாவோவை துதிக்காத நாள் இல்லையே
தலைவர் ஸ்டாலினை போன்றொரு ஆள் இல்லையே
உண்மை மட்டும் பேசும் தெய்வம்
எங்கள் வினவன்றி வேறொருவர் ஏது...............

பஜனை இப்படி மொத்தமாக முடிந்த பின்னர் வந்தவருடன் வினவு மற்றும் தோழர்கள் புறப்படுகிறார்கள், புரட்சி செய்ய!

Tuesday, November 24, 2009

வினவாயணம்

இந்த கற்பனைக்காவியம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கிறது!

பகுதி ஒன்று - வினவு தளத்தில் ஒரு நாள்! - Completed and ready for release
பகுதி ரெண்டு - புரட்சி செய்யலாம் வாங்க! - Shooting in progress, climax pending
பகுதி மூன்று - அய்யய்யோ புரட்சி போச்சே! - Story dicsussion in progress


டிஸ்கி 1 : திரு வினவு மற்றும் அவர்தம் புரட்சி நண்பர்களுக்கு இந்த கற்பனை சித்திரத்தை காணிக்கையாக்குகிறேன்!

டிஸ்கி 2 : இவர்களில் பலர் ரஷ்ய மற்றும் சீன பெயர்களை வைத்துக்கொள்வார்கள்! ஆதலால் பெயரைப்பார்த்து குழம்பவேண்டாம்!

டிஸ்கி 3 : பட்ஜெட் அதிகம் இல்லாததால், இவர்களுக்கு பிடித்த ரஷ்ய மற்றும் சீன பகுதிகளில் படத்தை எடுக்க முடியவில்லை. எல்லாம் லோக்கல்!

டிஸ்கி 4 : இவர்களின் தளங்களின் ஏதோ ஒரு ரஷ்ய அல்லது சீன மனிதர்களின் படத்தைப்போட்டு அவர்கள் மட்டும் கொடி பிடிப்பதாக காட்டுவதால் சீன அல்லது ரஷ்ய நடிகார் யாராவது துணை பாத்திரத்திற்கு போடலாமா என்று யோசித்தேன்! பட்ஜெட் இல்லையென்பதால் only Indian, புரட்சி நண்பர்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட!

டிஸ்கி 5 : படம் முடிந்த பிறகு அல்லது ஆரம்பமாகும்முன் ஜன கன மன பாடக்கூடாது!

Союз нерушимый республик свободны
Сплотила навеки Великая русь
Да здравствует созданный волей народов
Единый, могучий Советский Союз!

Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!

Сквозь грозы сияло нам солнце свободы,
И Ленин великий нам путь озарил:
Нас вырастил Сталин - на верность народу,
на труд и на подвиги нас вдохновил!

Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!

Мы армию нашу растили в сраженьях.
Захватчиков подлых с дороги сметем!
Мы в битвах решаем судьбу поколений,
Мы к славе отчизну свое поведем!

В победе бессмертных идеи коммунизма
Мы видим грядущее нашей страны,
И красному знамени славной Отчизны
Мы будем всегда беззаветно верны!

Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!

என்ற பாட்டுதான் பாடவேண்டும் - இந்த சோவியத் ரஷ்ய பாடலை புரியவில்லை என்றால் பரவாஇல்லை! இவர்களுக்கும் புரியாது ஆனால் பாடுவார்கள்!!!

அது வேண்டாமென்றால் கீழே இருக்கும் சீன பாடலை பாடலாம்!

起來!不願做奴隸的人們!
把我們的血肉,築成我們新的長城!
中華民族到了最危險的時候,
每個人被迫著發出最後的吼聲。
起來!起來!起來!
我們萬眾一心,
冒著敵人的炮火,前進!
冒著敵人的炮火,前進!
前進!前進!進!

இதற்கும் அர்த்தம் புரியவில்லை என்றால் கவலை வேண்டாம்! இதை மாவோ மற்றும் மற்ற புரட்சியாளர்கள் பாடியது! ஆகவே நம்ம ஊரு புரட்சியாளர்களும் அர்த்தம் புரியாமல் வாயை அசைப்பார்கள்! நீங்களும் அசைத்து விடுங்கள், இல்லையேல் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, அடிவருடி என்று அன்பாக செல்லப்பெயர் கொடுப்பார்கள்!


பகுதி 1 : வினவு தேசத்தில் ஒரு நாள்
----------------------------------------------------------

திரு வினவு, திரு சூப்பர் லினக்ஸ், திரு பவெல் எல்லோரும் ஒரு கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்.

வாசலில் திடீரென்று ஒரே சத்தம்!

வினவு: தோழர் சூப்பர் கொஞ்சம் என்னன்னு போய்ப்பாருங்களேன்
சூப்பர்: அட போங்க சார், எனக்கு வேலை இருக்கு, இப்போதான் அஞ்சு ஈ அடிச்சிருக்கேன். கொறஞ்சது நூறாவது இன்னும் அடிக்கணும். ஆள விடுங்க நான் பிஸி!!!
வினவு: தம்பி பாவெல் நீங்களாவது.....
பாவெல்: சார் இன்னைக்கு கோட்டாவில வசவு எனக்கு பாக்கி இருக்கு, ஜன்னல் வழிய போற வரவங்க நாலு பேர இது வரைக்கும் திட்டிட்டேன், கொறஞ்சது, வேளைக்கு பத்து பேராவது எங்கிட்ட வாங்கணும். முடிஞ்சதும் உங்களுக்கு உதவறேன்!

வினவு, தலையில் அடித்துக்கொண்டு....சரி சரி நானே பாக்குறேன்.......

வெளியே வரும் திரு வினவு, உடலெல்லாம் ரத்தக்கறை படிந்த இருவர் தங்கள் கட்டடத்தில் நுழைவதை பார்க்கிறார். அவர்களைப்பார்த்து நாலு பேர் மயங்கி விழுந்ததால் இவ்வளவு சத்தம் என்பதையும் புரிந்துகொள்கிறார்!

வினவு: ஹலோ யாரப்பா நீங்க, அதுவும் இந்த கோலத்தில??

வந்தவர்: அண்ணே, தெரியில்லையா, நாந்தாண்ணே , மரண அடி, பக்கத்தில நம்ம புரச்சி அண்ணன்தான்!

வினவு: எலேய் என்ன கோலங்க இது?

ம அ : வேற ஒன்னுமில்லீங்க, புரட்சி புரட்சின்னு பேசியே போரு அடிச்சிப்போச்சு, கொஞ்சம் நடைமுறைல காட்டலாமுன்னுதான், அக்டோபர் புரட்சி இப்போதான் செய்தாமாதிரி ஒரு கெட்டப்போட வந்தோம். வெறும் தக்காளி sauce தான் அண்ணே. பயந்துட்டீங்களா! சும்மா சொல்லக்கூடாதுன்னே, நாங்களே கண்ணாடில பார்த்து கொஞ்சம் பயந்துட்டோம். இருந்தாலும் புரட்சியாளர்கள் இல்லையா, அதான் பயம் வந்தாலும் அத்த மறச்சி தில்லா வந்துட்டோம்! எப்படி?

வினவு: நல்லது தோழரே, நானும் ரொம்ப நாளா இத்தப்பத்தி நெனெச்சேன், நம்பளும் தான் புரச்சி புரச்சின்னு டெய்லி கத்துறோம், அனா ஒரு பயலும் நம்மள கண்டுக்கல, சொல்லப்போனா நம்ம பக்கத்து கட்டடத்துல இருக்குற ஆளுங்களுக்குக்கூட நம்ம பத்தி தெரியில, நேத்துக்கூட ஒரு சினப்பையன் வினவு வினவுன்னு கூவிக்கினு வந்தப்போ அஹா சின்னப்பசங்க கூட நம்மள பத்தி கேக்கறாங்களே அப்படின்னு சந்தோஷப்பட்டேன், கடைசில பார்த்தா வினவுன்னா ஏதோ பத்தாம் கிளாஸ் மாதிரி வினை தாள் வெளியிடோரோமுன்னு நெனச்சி வந்தேனுங்க என்று சொன்னப்போ, ரொம்ப டென்சனா ஆயிட்டேன், ச்சே நம்ம நெலம இப்படிப்போச்சென்னு! நல்ல வேளை, நீங்க இந்த கோலத்துல வந்தீங்க, நேர நம்ம கம்பெனி மொட்ட மாடியில போயீ நீங்க ரெண்டு பெரும் புரட்சி புரட்சின்னு கொஞ்ச நேரம் சவுண்ட் உடுங்க, அத்த பாத்தாவது சிலரு நம்ம வேயட்டு என்னன்னு புரிஞ்சிக்கட்டும்!

ம அ : சரிங்க ஐயா, ஆரம்பிக்கறோம். ஒண்ணு சொல்லுங்க, கிண்டல் பண்ண அந்த பொடியன சும்மாவா விட்டீங்க?

வின்: அட நம்ம அப்படியெல்லாம் சும்மா உட்டுருவோமா. நம்ம தோழர் கலகத்த கொண்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேநில்ல? என்னமா திட்டினாருப்ப நம்ம கலகம் அய்யா. சும்மா சொல்லக்கூடாது அவரு இருக்கிற வரை, கடையில வாங்கின trouser டைட்டு ஆயிடிச்சுன்னா கூட வந்து அவுத்து வுட்டு போவாரு! அவ்வளவு பிரியம் மத்தவன் trouser அவுக்கருதுல!

அண்ணன் திரு மரண அடியும் திரு புரச்சியும் மொட்டைமாடிக்கு போய் தங்கள் வேலையை துவங்குகிறார்கள்!

திடீரென்று இன்னொரு சத்தம். டேய் டேய் , நாயே பேயே, *(*^*^&%$^%....(*&^^%%&%$$#$#, அடிவருடி, கடி வருடின்னு. என்னன்னு பார்த்தா நம்ம கலகம் அய்யா entry!

கலகம் : வணக்கம் அண்ணே. விஷியம் தெரியுமா? நமக்காகவே ஒரு comission போடுறாங்களாம். அந்த comission இல பங்குபெற நமக்குதான் முழு தகுதியும் இருக்குண்ணே. இன்னைக்கு பேப்பருல கூட வந்திருக்கு!

வினவு: அண்ணே நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, அது மக்கள் நல வாழ்வு திட்ட comission. திட்டுற comission இல்லை!

கலகம்:சரி அத்த உடுங்க அண்ணே. வேற நல்ல விஷயம் ஒண்ணு இருக்கு. எல்லோரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தாங்க இல்ல, அதுல நம்ம மட்டும் ஏண்ணே கலந்துக்கக்கூடாது? என்னக்கு முழு தகுதியும் அதுக்கு இருக்குண்ணே. உங்களுக்கே தெரியுமே, தினமும் எப்படி எல்லோரையும் பாகுபாடில்லாம அர்ச்சனை பண்ணுவேன். தெரிஞ்சவங்க இருந்தா சொல்லி சேர்த்து உடுங்க. புண்ணியமா போகும்!

வினவு : தோழரே, அது உங்களைப்போன்ற புரட்சியாளருக்கு கிடையாதுங்க. இது வேற அர்ச்சனை. உங்க வார்த்தை ரேஞ்சே தனி. உட்டுறுங்க!
வேலை இல்லேன்னா ஒண்ணு பண்ணுங்க, உலகமையமாக்குதல் ஒரேயடியாக ஆனதால் அவனவன் வாய்த்திட்டு என்றால் என்னென்னே மறந்துட்டான்! எல்லாம் ஆங்கிலத்திலேயே, அதுவும் ஈ மெயில் போட்டு மட்டுமே திட்டுறான்! நீங்க ஒரு திட்டும் tutorial class ஆரம்பிங்க. நம்மள மாதிரி பல புரட்சி கொழுந்துகள் கண்டபடி வசவுவது எப்படின்னு வந்து கத்துப்பானுங்க!

கலகம்:உத்தரவுங்க. பேரு என்ன போடலாமுங்க?

வினவு: வசவு Tutorials

திடீரென்று வேறு ஒரு சத்தம். அதுவும் அழுகைசத்தம்!
வினவு ஓடிச்சென்று பார்கிறார்!

தோழர் திரு புசிக்ஸ் வருகிறார், அழுதுகொண்டே!

வினவு: புரிட்சியாளரே, ஏன் இந்த கோலம்! என்ன ஆகிவிட்டது?

புசிக்ஸ் : அண்ணே, ஹூம் ஹூம்ம் , எல்லாம் என் பெயரால் வந்த வினைங்க! driving license வாங்க போனேனுங்க, அங்க அவுக என் பெயர கேட்டதுக்கு எதார்த்தமா புசிக்ஸ்சு அப்படின்னா என்னன்னு விளக்கம் கொடுத்தேன். இந்த மாதிரி பெயரெல்லாம் டைப் பண்ண முடியாது, வேணுமுன்னா ஏதாவது வாயில வர பெயர வெச்சிகிட்டு வரச்சொல்லிப்புட்டானுக! நம்ம தான் புரட்ச்சி திலகமாச்சே, வினவு தளமுன்னு நினச்சு கண்டபடி திட்டிட்டேன், அவங்களும் பதிலுக்கு வாயில பேசாம முதுக பதம் பாத்துட்டானுக! அதான் இப்படி, சட்ட கிழுஞ்சி, வாயு ஒடஞ்சு,,,,,ஹூம் ஹூம்.......................

வினவு : தோழரே, இவ்வளவு நடந்தும் நீங்க சும்மாவா இருந்தீங்க???

புசிக்ஸ்ஸ்: அட நீங்க ஒண்ணு, எவ்வளவுதரம் புரட்சி புரட்சி அப்படின்னு நான் கத்துனேன். அப்படியும் அவங்க சும்மா உடல! போன் போட்டு மேலும் ஒரு பத்து பேர வரச்சொல்லி நம்மள ரவுண்டு கட்டிடாங்க தோழரே!

வினவு : இருந்தாலும் நீங்க பெரிய புரட்சியாளர் தோழரே, இவ்வளவு அடி வாங்கியும் பொறுத்துக்கொண்டு வந்தீங்களே.......

புசிக்ஸ்ஸ்: அதைத்தான் அவனுங்களும் சொன்னாங்க தோழரே, இவ்வளவு போட்டும் தாங்குரானே, இவன் ரொம்ப நல்லவன்னு...........................

வினவு: சரி சரி தோழரே, அத்த உடுங்க, இன்னைக்கு டார்கெட் ஒரு ரெண்டு பேரு இருக்காங்க, வாங்க நீங்க மட்டும்தான் திட்டல.....இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் காட்டி வசைபாடிடுங்க....ராத்திரியில வலியெல்லாம் மறந்து நல்லா தூக்கம் வரும்...
இப்படி சொல்லிவிட்டு தோழர் கலகத்தை அழைத்து, "கலகம் அவர்களே, நம்ம புசிக்ஸ்ஸ் தோழர் ரொம்ப சோகமா இருக்காராம், கூட்டிட்டு போயி எவனாவது மாட்டினா கண்டபடி திட்டுங்க, அண்ணனும் அதை பார்த்து, மனம் கொஞ்சம் இளகி, அவரும் கொஞ்சம் திட்டி, நார்மலாக ஆகிவிடுவாறு, போங்க அண்ணே "

கலகம்: வினவு சார், இன்னைக்கு யாரும் மட்டலியே, ரோடுல போறவங்க ஒரு பத்து பெற பாவெல் அவர்கள் திட்டிட்டாரு, அதைக்கேட்டு நம்ம ஜன்னலாண்ட ஒருத்தனும் வர மாட்டேன் என்கிறான், அப்படியே வந்த ஒரு ரெண்டு ஆடு, மூணு நாயையும் எட்டு கொழியயிம் அண்ணன் திட்டியதால் மிருகங்கள் கூட பயந்துகினு கிட்ட வரலை.

பாக்கி, நம்ம சலவைக்கார அண்ணன் சிங்காரத்தோட நாலு கழுதைதான்! அத்த வேணா வரச்சொல்லி நாலு வாங்கு வாங்கவா? என்னதான் திட்டினாலும் தேமேன்னு கேட்டுக்கூங்க. என்ன ரொம்ப கிட்ட போயி திட்டக்கூடாது. வெத்து
பேப்பருன்னு நெனச்சு நம்மள நக்கும், அவ்வளவுதான். மேலும் நம்ம கூட பழகி பழகி நம்மள எட்டி உதைக்கிறது கூட இல்லை!

வினவு: அதெல்லாம் வேண்டாம் கலகம், வேற ஐடியா ஏதாவது சொல்லுங்க, பாவம் புசிக்ஸ்சு ரொம்ப வேதனையுல இருக்காரு!

கலகம்: அப்போ இப்படி செய்வோம்! போனை எடுத்து ஏதாவது ஒரு நம்பரை தட்டி, கண்டபடி திட்டுவோம். ஏதாவது திரும்பி பேசினால், அமெரிக்க அடிவருடி, பாசிஸ்டு, ஏகாதிபத்திய அரக்கன் அப்படி இப்படின்னு போட்டு தாக்குவோம்! நமக்கும் இணைக்கு கோட்டாவிற்கு திட்டினாமாதிரி இருக்கும், அண்ணனுக்கும் கொஞ்சம் தெளிவி ஏற்ப்படும்!

வினவு: கலகம் அண்ணே, கொஞ்சம் ரிஸ்க் இருக்குமே! திட்டு வாங்கினவன் நம்பர கண்டுபிடுச்சி போலிசு அது இதுன்னு போனான்னா, அப்புறம் யாரு ஓடுறது! ஏதோ வந்தோமா, ஏமாந்தவன், நம்ம பத்தியே தெரியாதவன், இப்படி யாரையாவது நாலு திட்டு திட்டி பொழுத கட்டினோமா, அதை உட்டுபுட்டு, எதுக்கு இந்த வேண்டாத வேலை! சரி ஒன்னு சொல்லுறேன், வண்டலூர் ஜூ ஆண்ட போயி, ஏதாவது...............

அதெல்லாம் எதுக்கு சார், ஒரு ஈசியான வழி இருக்கும் பொழுது ஏன் சார் கஷட்டப்படனும் சார், நான் சொல்லுறேன் சார் நல்ல வழி சார் என்று
கூறியபடி ஒருவர் வருகிறார்!

என்னடா இது, வினவு தளத்துல, இவ்வளவு சார் போட்டு அதுவும் நாகரீகமே இல்லாத, அதாவது வினவு நாகரீகமே கொஞ்சம் கூட தெரியாத, கண்டபடி திட்டாத இப்படி ஒரு குரல் என்று வினவு அவர்கள் பார்க்கிறார்!பார்த்தால் நண்பர் திரு அரை டிக்கெட்டு!

அட நாகரீக வேட நண்பரா, யாரோன்னு நினைத்தேன்! என்ன சார் குரல் ஒரு மாதிரி இருக்கு? அதான் ஒரு செகண்டு யாருன்னு புரியலை? என்ன இப்படி?


அரைடிக்கெட்: வேற ஒன்னும் இல்லை, இப்போதான் நம்ம எப்பவும் செய்யுறா மாதிரி டபில் ஆக்ட்டு போட்டுட்டு வந்தேன், அதான் சார், ஒரு பேருல வந்து கண்டபடி திட்டி, அப்புறம் அரை டிக்கெட்டு பேருல வந்து நாகரீகமா நல்லவன் போல பேசி...... அப்படியே வந்ததால, அதே ஸ்டைலுல பேச வேண்டியதா போச்சு. பிடிக்கலைன்னா சொல்லுங்க, கண்டபடி யாரையாவது திட்டுறேன்! அனால் ஒண்ணு சார், நான் திட்டினாலும் மரியாதையோடுதான்
திட்டுவேன், அதாவது, ஏகாதிபதிய நாலு கால் பிராணியே, பாசிஸ்டு கூர்ம அவதாரமே.....அப்படின்னு!

வினவு: ஓகே அதை விடுங்க சார். நீங்க செய்யிறதுதான் எல்லோருக்கும் தெரியுமே! நாங்க எல்லோரும் கண்டபடி திட்டுவோம், நீங்க வந்து திட்டுவீங்க! இப்போ விடயம் என்னவென்றால் நம்ம புசிக்ஸ்சு அண்ணன் ............

அரை டிக்கெட்டு: கேட்டேன் கேட்டேன்.... எதுக்கு சார் அவ்வளவு தூரம் போகணும், அதுக்கு ஈசியாக ஒரு வழி வெச்சுருக்கேன்!

வினவு: சொல்லுங்க சொல்லுங்க .

அரை டிக்கெட்டு : நம்ம கட்டடம் பக்கத்துல சங்குபாணி பூந்தி கடை தெரியும் இல்ல ?

வினவு: ஆமாம், நாம எழுதுற புரட்ச்சி எழுத்தெல்லாம், மாசக்கடைசில பொட்டலம் கட்ட மொத்தமா நல்ல ரேட்டுல வாங்குவாரே, அவரு கடைதானே? அவருக்கென்ன?

அரை டிக்கெட்டு: கேளுங்க. சங்குபானியோட தாத்தா சங்குராஜன் ஊரிலேர்ந்து வந்திருக்கிறாராம்! அவரு ரொம்ப நல்ல மனுஷனாம்! என்ன சொன்னாலும் கேட்ப்பாராம்! என்ன அவருக்கு ஒரு பாகெட்டு புகையிலை, ஒரு பாக்கெட்டு காஜா பீடி வாங்கி கொடுத்தாப்போதும்! அவர என்ன வேனும்முனாலும் சொல்லலாம்! ஒண்ணியும் பதில் சொல்ல மாட்டாரு, எல்லாத்தையும் வாங்கிக்குவாரு!

வினவு: ஏங்க?

அரை டிக்கெட்டு: அவருக்கு காது டமாரமுங்க!!!! சுத்த செவிடு! நம்ம எல்லோரும் இவரு கிட்ட ப்ராக்டிஸ் செய்யலாம், நம்ம திட்டும் கலையை! முதலில் அனன் புசிக்ஸ்சு ஆரம்பிக்கட்டும்! எப்படி ஐடியா?

வினவு: என்னதான் இருந்தாலும், என்ன செவிடா இருந்தாலும், நாம்ம ரேஞ்சே தனிதான? நம்ம கலகம் அண்ணன் இந்த மாதிரி சான்சு கிடைச்சா கண்டபடி திட்டுவாரே? என்னதான் செவிடா இருந்தாலும் நம்ம திட்டு காதுலு விழுதுடுச்சின்னா, அதும் சங்குபானிக்கு தெரிஞ்சு போச்சுன்னா அப்புறம் நம்ம பேப்பருக்கு யாரு நல்ல ரேட்டு தருவாங்க, அப்புறம் யாரு நமக்கு ஓசியில பூந்தி தருவாங்க?

அரை டிக்கெட்டு: கவலையை விடுங்க! அவரை செவிடாகியதே சங்குபானிதான்! எப்படின்னா, இவரு தொல்லை தாங்காம இவரோட காதுல நாலு குருவி வெடியை வெச்சு காலி பண்ணிட்டாராம்!!

வினவு: ஏங்க?

அரை டிக்கெட்டு: அங்கதானே விஷயம்! சங்குராஜன் தாத்தாவும் நம்ம மாதிரி புரட்ச்சி வீர்கள் நடத்தும் கூடங்களுக்கு போயி பேச்சுக்களை ரசிப்பாராம்! மேலும் அதை விட்டில் உள்ளவங்களுக்கு பேசிக்காட்டுவாராம்! அதைக்கேட்ட கடுப்பான சங்குப்பாணி, இந்த மாதிரி வயசான காலத்துல, சும்மா வேலை வெட்டி இல்லாம, அதுவும் என்னோட காசுல வண்டியை ஓட்டுற இந்தாளுக்கு நல்ல பாடமா இருக்குமேன்னு, காதுல வெடியை வெச்சாராம்!

வினவு: அப்பாடி! இந்த மாதிரி ஒருத்தரைத்தான் நாங்க தேடிக்கிட்டு இருந்தோம்! ரொம்ப நன்றி அரை டிக்கெட்டு!
"அண்ணன் கலகம், புசிக்ஸ்ஸ் , பாவெல் எல்லோரும் வாங்க! அரை டிக்கெட்டு சொல்லியது போல சங்குராஜன் தாத்தாவை கூட்டியாந்து வசை படலத்தை தொடங்குங்கள் " என்று ஆணை இடுகிறார்!

சிறிது நேரம் பொறுத்து ஒரு பெரும் சப்தம் கேட்கிறது!

வினவு: என்ன இது, இந்த எழுவு பண்டிகை தீபாவளி கூட முடிஞ்சு போச்சு, எந்த மடையன் இப்போ வெடிக்கிறான்? தீபவளியையே திட்டினோம் நாங்க, எவன் அவன் எங்க ஏரியா பக்கத்துல பாட்டாசு விடுறான்? அக்டோபர் புரட்ச்சி, மாவோ பிறந்தநாள், ஸ்டாலின் பிறந்தநாள் போன்ற நல்ல விடயங்களுக்கு மட்டும்தான் பட்டாசு வெடிக்கணும். இது கூட தெரியாம? ச்சே......

அரை டிக்கெட்டு: சார், இது குருவி வெடி மாதிரி இருக்கே! அதுவும் ஏதோ பொந்துக்குள்ள வெச்சு வெடிச்சாமாதிரி இருக்கே........

சொல்லி முடித்தவுடன் குறியோ முறையோ என்று சத்தத்துடன் கலகம், பாவெல் மற்றும் புசிக்ஸ்ஸ் ஓடிவருகிறார்கள்! புசிக்ஸ்ஸ் வாயில் ரத்தம்!!!!!

வினவு: இருங்க இருங்க.... புசிக்ஸ்சு அண்ணே ...... அதான் இந்த தக்காளி சாசு டெக்னிக்கை அண்ணன் மரண அடி செய்துட்டாரே, மறுபடியும் எதற்கு????

கலகம்: அண்ணே இது தக்காளி இல்லை, உண்மையான ரத்தம்.... நாங்க ரத்தத்த இப்போதான் பாக்குறோம், பயந்தே போயிட்டோம்...........

வினவு: என்னகே ஆச்சு?

கலகம்: நீங்க சொன்னமாதிரி சங்குராஜன் தாத்தா கிட்ட போயி, ஒரு கட்டு பீடியையும், கொஞ்சம் புகை இலையும் கொடுத்து கண்டபடி திட்டத்தொடகினோம்! அப்போ.........

பவெல்: இருங்க நான் சொல்லுறேன்....... இதை பார்த்த புசிக்ஸ்ஸ் அண்ணனும் சோகம் போயி மூடு வந்து கண்டபடி திட்டத்தொடங்கினார்! சங்கு தாத்தாவும் பீடி வலிச்சி, புகைஎலையும் மென்னுகினு எங்க திடுக்கேல்லாம் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ புரிந்தாமாதிரி நடந்துகிட்டார்! இதைப்பார்த்து இன்னும் குஷியாகிப்போன கலகம் அண்ணன், மேலும் திட்ட, அது ஓவராகிப்போய், சங்குராஜன் என்ற பெயரை சுருக்கி டேய் சங்கு, நாய் சங்கு பேய் சங்கு அப்படின்னு போட்டுத்தாக்க, வந்த சத்தத்துல, சங்குபாணி வந்துட்டாரு!!!!!!!!

வந்த சங்குபாணி, அவரைதான் திட்டுறாங்கன்னு நினைச்சு, ரெண்டு குருவி வெடியை எடுத்து பக்கத்துல நின்ற புசிக்ஸ்சு அண்ணன் வாயில் சொருகி பத்த வெச்சுட்டாரு!!!!!!!! அதன் இப்படி!!! அனால் ஒண்ணுங்க, ஒரு சாதாரண குருவி வெடியை என்னமா வெக்குறார் நம்ம சங்குபாணி! நச்சுன்னு வெச்சாருங்க! முன்னாடி ஏதாவது வெடி வெக்குற பழக்கம் இருக்குமோ?

இதைகேட்டு ஓவென அழுகிறார் அண்ணன் புசிக்ஸ்ஸ், வாயில் ரத்தத்தோடு!

அண்ணன் வினவும் ஓடிவந்து அவரை சமாதானப்படுத்துகிறார் மேலும்: புசிக்ஸ்சு, கவலைப்படாதீங்க, அழாதீங்க.......
புசிக்ஸ்சு நிருத்தாமால்....ஓவென்று ஓலமிட்டு அழுகிறார்!

ஓட்டிவந்த அண்ணன் கலகம்: அழாதே புசிக்ஸ்சு ....... என் புரட்ச்சி நண்பனில்ல, ஸ்டாலின் தம்பிஇல்ல, மாவோவின் குஞ்சில்ல .... எங்க அழுகையை நிறுத்தி, நல்லா வாயைத்திறந்து சமத்தா நாலு திட்டு திட்டு பார்க்கலாம்...... இதுக்கு போயி...........

புசிக்ஸ்சு, உடைந்த வாயுடன்: நிழுதுங்க....நிழுதுங்க ......எழ்னக்ழு வாழ்சூ போழ்னத்பழ்த்ழி கவ்ழளை இள்ழை, ஆண்ழ்ழ எழ்ண் அழுமைய்ழ்ன தழ்மிழ்ஹ பெழய்ரழன புழஜிக்க்ச்ழை சொல்ழஹா முட்திய்ழஹளை என்ழட்ர்ஹா கவழளைதான்ஜான்........( இதன் தமிழாக்கம் - "" நிறுத்துங்க நிறுத்துங்க, எனக்கு வாய் போனதைப்பற்றி கவலை இல்லை, என் அருமையான தமிழ் பெயரான புசிக்ஸ்சை சொல்ல முடியாது என்ற கவலைதான்"")

இதைக்கேட்ட வினவு மற்றும் நண்பர்கள் - ஆஹா இப்படி அல்லவோ புரட்ச்சியாளர்கள் இருக்கவேண்டும்....... ரஷ்ய பெயர்கள் எவ்வளவு புனிதமானது, ரஷியர்கள் எவ்வளவு புனிதமானவர்கள், அதைவிட சீன மாக்கள் எவ்வளவு புனிதம்..... அதுவும் ஒரு வெள்ளைகார அல்லது சீனாக்காரரின் படத்த போட்டு அவங்க பெயர நமக்கும் வெச்சுகிட்டு ஒரு உண்மையான புரட்ச்சியாளர்களா வலம் வந்துகிட்டு இருக்கோம்..... நம்மள போயி ..... இப்படி ............


கவலை வேண்டாம் ..... கவலை வேண்டாம் ..................... என்ற சத்தத்தோடு வருகிறார் ஒருவர் ..... பார்த்தால் நண்பர் செங்கொடி............

செங்கொடி: மாவோ வாழ்க ....... 1962 வில் நூற்றுக்கணக்கான இந்திய போர் வீரர்களை கொன்று இந்தியப்பகுதிகளை கைப்பற்றிய மாவீரர்கள், தேசபக்த்தர்கள் வாழ்க வாழ்க!!!! வாழ்க சீனா, ஒழிக இந்தியா!!!! அப்பா, என்னோட introduction ஓவர், விடயத்திற்கு வருவோம் தோழர்களே!

வினவு: சொல்லுங்க! ஆனால், ஆட்களை திட்டுவது மட்டும் வேண்டாம்! இப்போதான் ஒரு வாய்................ சரி அதை விடுங்க.... விடயத்திற்கு வாங்க!

செங்கொடி: அதைதான் நானும் சொல்லப்போறேன்...... ஆட்களை திட்டுவது கொஞ்சம் நிறுத்திட்டு, வேறு ஒன்றை திட்ட ஆரம்பித்துவிட்டேன்!

கலகம்: அப்படியா அப்படியா ....சொல்லுங்க சொல்லுங்க .... அப்புறம் என்னையும் சேத்துக்கோங்க..... ப்ளீஸ் ப்ளீஸ்..... எதையாவது திட்டனும்போல இருக்கு!!!!

செங்கொடி: கலகம் அவர்களே, நீங்க நினைக்கிறா மாதிரி இந்த ரவுண்டு ஆள திட்டல....

வினவு: எனக்கு தெரியும், இந்த முறை கேவலமான கேடுகெட்ட இந்து மதம் தானே, ஆனால் அதைதான் நாங்க திட்டுரோமே............ நீங்க வேற.... ஓகே ஓகே நீங்களும் திட்டிக்கோங்க, உங்க வீட்டு மதமா எங்க வீட்டு மதமா...... ...

செங்கொடி: ஹூ ஹூம்

வினவு: அட கிருத்துவமா? அதான் ஆவி அல்லேலூவிய அப்படின்னு நாங்க போட்டு தாக்கிட்டோமில்ல?

செங்கொடி: நீங்க சொல்லுறது எதுவும் இல்லை புரட்சி வீரர்களே. நீங்க மட்டும் இந்த மாதிரி திட்டி பிரபலமானா போதுமா, அதான் என் கணக்குக்கு ஒரு புது டார்கெட்டை எடுத்திருக்கிறேன்! அதாங்க, குரான், இஸ்லாம் பத்தி போட்டு தள்ளுறேன் பாத்தீங்க இல்ல?

வினவு: அட அமாம், இப்போதான் புரியுது! நாங்க இந்து மதம், அதாங்க, இந்த பயித்திக்காரத்தனமான நம்பிக்கையை கொண்ட, சுமார் எண்பது கோடி முட்டாள்கள் நம்பிக்கைக்கொண்ட இந்த பிற்போக்கு பார்பனிய கொலைகார குப்பையை தாக்கு தாக்குன்னு தாக்கி எவனாவது வந்து அதை எதிர்த்து பேசி, அது ஒரு பெரிய விஷியமாக மாறி அப்புறம் நம்மளும் கொஞ்சம் பிரபலமாகலாம் அப்படின்னு நினைத்தோம். ஆனால் பாருங்க, நம்ம புரட்சி நண்பர்கள் வட்டத்தைத்தவிர ஒரு பயலும் வந்து பார்த்து நாங்க சொல்லுறதை சீரியஸ்ஆக எடுத்துக்க மாட்டேன் என்கிறான்! அப்புறம்தான் புரிஞ்சது எங்க திட்டத்தை விரிவு செய்யணுன்னு, உடனே அல்லேலூவியா கும்பல் அப்படி எப்படின்னு போட்டு, யாராவது வந்து சண்ட போடுவாங்கன்னு பார்த்தோம்! அப்படியும் ஒருத்தனும் கண்டுக்கல. கடைசியாக, வேற வழி இல்லாம, அகமதியா, இஸ்லாம் பார்ப்பனீயம் பாசிசம் அப்படின்னு மிக்ஸ் செய்து போட்டு தாக்கினோம் பாருங்க! அசத்தல் - ஏன்னா எங்களுக்கு நல்ல ஹிட்ஸ் இந்த ஒரு ரெண்டு பதிவுனால!!! சோ, நீங்களும் இதை செய்யப்போகுரீர்கள் போல! வாழுத்துக்கள்! அப்படிதான் சார், நம்மக்கு புரியாத விடயம் ஏதாவது இருந்தா, அதுவும் உலக மகா உத்தமர்களான நம்ம ஸ்டாலின் அண்ணன் மற்றும் மாவோ அண்ணன் ஆகியவர்களைத்தவிர எல்லோரையும் திட்டனும்! குறிப்பா, குரானை எழுதியது யாரோ என்று போட்டா வச்சிகொங்களேன், பல பேரு விவாதம் செய்ய வருவாங்க, நாமும் பிரபலமாகலாம், அப்புறம் நாங்க சொல்லுவதற்கு சாட்சி இருக்குன்னு சொல்லி ஒரு பயலும் நம்ம கிட்ட பேசி ஜெயிக்க முடியாது!

செங்கொடி: கரீக்டு அண்ணே! அதேதான் நானும் எழுதறேன்! நம்ம கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மற்றும் பல புரட்சி வீரர்கள் என்ன செய்தார்கள் என்று நம்ம எல்லாம் நேர பாத்துட்டுதானே எழுதுறோம்!அதுக்குதான் சாட்சி இருக்கே! ஒரு பயலாவது சாட்சி இல்லேன்னு சொல்லுவானா?
எத்தன பேரு எழுதினாங்க நம்ம ஸ்டாலின் மற்றும் மாவோ எவ்வளவு லட்சக்கணக்கான பேருகள போட்டு தள்ளினாங்கன்னு, அதுவும் சாட்சின்னு சொல்லி அவங்க கை எழுத்துப்போட்ட நோட்டுலேர்ந்து அவங்க கூட கடை காலம் வரை ஒண்ணா இருந்து இதையெல்லாம் எழுதி, மற்றும் சோவியத் ஆர்கைவுல இருக்குற நூத்துக்கணக்கான டாகுமென்ட்ஸ் இல் இதெல்லாம் பதிவாகி, பல பல புதைக்கப்பட எலும்புகளையெல்லாம்
எடுத்து இது உண்மை என்று சொன்னார்கள்! இந்த மாதிரியான சாட்சி எல்லாம் நாங்கள் சாட்சியே இல்லையேன்னு எவ்வளவு ஆணித்தரமாக சொல்லுறோம்! அதான் சொல்லுரோமில்ல சாட்சி இல்லைன்னு, அதுதானே சாட்சி! இவ்வளவு அழகா சாட்சி பத்தி பேசுற நாங்க சொல்லுறோம் குரான் பல பேரு எழுதிய கதையுன்னு, அப்போ எங்க சாட்சிதானே கரீக்டு! இதுக்கெல்லாம்தான் சாட்சி இருக்கே, அதான் கலகம் அண்ணன் எல்லாம் சொல்லிட்டாரே கரீட்டா, சாட்சி இருக்கு, என்னென்றால் நாங்கள் சொல்லிவிட்டோம், அதான சாட்சி!!! ஆனால் குரானுக்கு சாட்சி இல்லையே, என்னென்றால் நாங்களே சொல்லிட்டோமே, அது எழுதினது யாருன்னு! அதானே சாட்சி அது பொய்யென்று! அதுக்குதான் நம்ம தலைவர் மாவோ சொல்லிட்டாரே, சாட்சி எனப்படுவது யாதெனின் யாதொன்றும் சாட்சி இலாது சொலல் அப்படின்னு!

கலகம்: நான் சொன்னதா நீங்க சொன்னது கரெக்டு அண்ணே. அதுக்கு நீங்க தான் சாட்சி! இடுந்தாலும் ஒரு சந்தேகம், தலைவர் மாவோவிற்கு தமிழ் தெரியுமா, ஏன்னா அவர் சொன்னதா ஏதோ சொன்னீங்க?

செங்கொடி : என்ன அப்படி கேட்டுட்டீங்க! அதான் சொல்லிட்டேனில்ல, நான்தேனே அதுக்கு சாட்சி!

கலகம்: அட, கரெக்டா சாட்சியோட பின்னுறீங்க சார்! நீங்க சொன்னதுக்கு நானும் சாட்சி போங்க!

வினவு: அட இந்த ஆட்டம் ரொம்ப நல்லா இருக்கே! என்ன அரை டிக்கெட்டு, ஆரம்பிக்கலாமா?

அரை டிக்கெட்டு: கீதை ஒரு கற்பனை, பைபிள் ஒரு கற்பனை, குரான் ஒரு கட்டு கதை, அதுக்கு நான் சாட்சி!

வினவு : அரை டிக்கெட்டு அவர்கள் சொல்லுவதற்கு நான் சாட்சி!

பாவெல்: வினவு அவர்கள் சொல்லுவதற்கு நான் சாட்சி!

கலகம்: இவர்கள் அனைவரும் சொல்லோவதர்க்கு நன் சாட்சி!

செங்கொடி: இவர்கள் எல்லாம் சாட்சி சொல்லுவதால் இவைகள் எல்லாம் பொய் என்பதற்கு இதுவே சாட்சி!!!!!!

வினவு: ஆஹா அஹா ... எப்படி வருது பாருங்க, லாஜிக்கு.... அசத்தலா விவாதம் பண்ணுறோம் சார், நம்மள அடிக்க ஆளே இல்லை! வாங்க இப்படியே இன்னும் கொஞ்சம் மதங்க விட்டு போச்சு..... அதையும் ஒரு கை பார்ப்போம்..... நம்மகிட்டதான் சாட்சி இருக்கில்ல.......

End of Part 1
---------------------