visitors

Wednesday, November 25, 2009

வினவாயணம் - பகுதி - 2

வினவாயணம் - பகுதி - 2

--------------------------------------
புரட்சி செய்யலாம் வாங்க:
-----------------------------------------


தோழர்கள் வினவு, மரணஅடி,சூப்பர் லினக்ஸ் மற்றும் பலர் ஓர் அறையில் உட்கார்ந்து பூந்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் மட்டும் பூந்தியை எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துக்கொண்டிருக்கிறார்! யாரென்று பார்த்தால் திரு புசிக்ஸ்சு! குருவி வெடியால் வந்த விளைவு!

வினவு (திடீரென்று விழித்துக்கொண்டு) : தோழர்களே, என்ன நேரம் பார்த்தீங்களா? பஜனைக்கு நேரமாகுதே? சீக்கிரம் வேலைய முடிங்க, போயி நடக்க வேண்டியத பாருங்க!

இப்படி அவர் சொல்லியவுடன் தோழர்கள் எல்லோரும் எழுந்து பக்கத்து அறைக்கு செல்கிறார்கள் அப்பொழுது வாசலில் ஒரு சத்தம்: சார்...........


வினவு: யாருங்க?

வந்தவர்: ஐயா இங்க வினவு கோஷ்டி அப்படின்னு ஒரு புரட்சி செய்யத்துடிக்கும் செயல் வீரர்கள் இருக்கறதாக கேள்விப்பட்டேன். ஒரு புரட்சி சம்பந்தமான வேலை ஒண்ணு இருக்கு, அதான் உங்களுக்கு ஆர்வம் இருக்கா, என்னோட வரீங்களான்னு கேட்க வந்தேன் ???


கலகம்: டேய் .......அடிவருடி....$^&%&^%**...டேய்.....ஏகாதிபத்தியம்....டேய் நாயே... நாங்க பஜனையா இன்னுமும் ஆரம்பிக்கல, அதுக்குள்ளா என்னடா அவசரம், அமெரிக்க அடிவருடி.....


மரணஅடி: தோழர் கலகம். பார்த்து...இந்த $^&%&^%** வார்த்தை என்னோட வார்த்தை, அத்த நான் சொன்னாத்தான் அந்த திட்டுக்கே அழகு. அனாவசியமா என்னோட வார்த்தைகள வீணாக்காதீங்க! வேற எதையாவது போட்டு திட்டுங்க, உங்களுக்கு சொல்லியா தரணும்!


கலகம்: என்ன மரண அடி சார் இப்படி சொல்லிட்டீங்க? நான் எங்க திட்டினேன், விவாதம்தான செய்தேன்!

வினவு எழுந்து பொய் அவர்கள் இருவரின் வாயையும் மூடுகிறார்.

வந்தவரிடம் வினவு: மன்னியுங்கள்....அவங்க எப்பவும் அப்படித்தான்...யாராவது புதுசா கண்ணுல பட்டா கண்டபடி திட்டுவாங்க.....தப்பா நினைக்காதீங்க...

வந்தவர்: அட உங்களமாதிரி ஒரு புரட்ச்சி கூட்டத்தைதான் இது வரை தேடினேன், கண்டுகொண்டேன் இப்பொழுது! சும்மா சொல்லக்கூடாது, எல்லோரும் ரொம்ப நல்லா தெளிவா திட்டுறீங்க! இதான் இதத்தான் எதிர்ப்பார்த்தேன்! என்ன உங்களுக்கு நான் எதிர்ப்பாகுற விஷியங்கள் மற்றும் அதற்கு எடுக்கக்கூடிய நேரம் இதெல்லாம் இருக்கான்னுதான் தெரியல்ல.


வினவு: விஷியத்திற்கு வாங்க! எங்க போயீ புரட்சி செய்யணும் சொல்லுங்க! நாங்க ரெடி. எங்க கிட்ட திட்ட ஆளுருக்கு, கண்டபடி வசைபாட வாயிருக்கு, வாய் சவடால் உட நாவிருக்கு, நாலாந்தரமாக நாராசம் பாட நேரமும் இருக்கு! இப்பகூட பாத்திங்கன்னா, நாங்க சொம்மாத்தான் ஈ ஓட்டிட்டு இருக்கோம்! என்ன நீங்க வந்ததுல எங்க பஜனை கொஞ்சம் தடைபட்டுபோச்சு!

வந்தவர்: என்னது, நீங்க புரட்சி முற்போக்கு வீரர்கள் என்றுதானே கேள்விப்பட்டேன், உங்களுக்கு எதுக்கு சார் இந்த பிற்போக்கான, கேவலமான பஜனை என்ற பார்பனிய பம்மாத்து?

வினவு: சார், நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, நீங்க நினைக்கிற மாதிரி இது கேவலமான இந்து மத பஜனை கிடையாது, இது ஸ்டாலின் மாவோ நாமாவளி பஜனை! பக்கத்து அறையில பாத்தீங்கன்னா ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ, கிம் இல் சுங், போன்ற மனித நேய மகான்களின் படங்களை வைத்து, நடுவுல நாங்க எல்லாம் உட்கார்ந்து தெனமும் கொஞ்ச நேரம் துதிப்போம். அது முடிந்த பிறகுதான் திட்டுவதெல்லாம்!

வந்தவர்: அப்போ மார்க்ஸ் லெனின் எல்லாம்...

வினவு: அவங்களுக்கு மாசத்துக்கு ஒருமுறை ஆராதனை......... செவப்பு கொடி நட்டு, புரட்சி புரட்சி என்று ஒரு பத்து நிமிடங்கள் கத்திட்டு, பூந்தியும்

சோடாவும் சாப்பிடுவோம்!

வந்தவர்: அப்போ வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது விசேஷம் கிடையாதா? அதான் அந்த மே தின பரேடு அப்படின்னு நம்ம காலியாகிப்போன சோவியத்து ஆளுங்களும், இப்போ இருக்கிற சீனாக்காரனுங்களும் செயுராமாதிரி?

வினவு: ஏன் இல்லை? வருடத்திற்கு ஒரு முறை நாங்க எல்லாம் இந்த கட்டடத்துக்குள்ளார கூடி, வெகு விமர்சையாக கொண்டாடுவோம்! நம்ம தோழர்கள், பேப்பர் வித்த காசில பழைய பாத்திரங்கள் சில, செல்லரிச்சிப்போன ரெண்டு டீக்கடை பெஞ்சு, ஒரு நாலு ஒடிந்த

பிளாஸ்டிக் குடங்கள், மற்றும் ஒரு சோளக்கொலை பொம்மை போன்றவைகளை வாங்கி போடுவார்கள். நாங்களும் அந்த பொம்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், புஷ், இந்திய ஏகாதிபத்தியம் அப்படின்னு பெயர் சூட்டி, ஆளாளுக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் அதை கண்டபடி திட்டி, அப்புறம் ரெண்டு சவுக்கு கட்டையால ஒரு பத்து நிமிடங்கள் அந்த பொம்மையை அடித்து, சிவப்பு கொடி ஒன்றை கையில் பிடித்து, ஸ்டாலின் வாழ்க மாவோ வாழ்க என்று கத்திவிட்டு, கடைசியாக நாங்க வாங்கி வந்த பொருட்களை சுக்கு நூறாக உடைத்து, ஆஹா புரட்ச்சி புரட்சி என்று கூவி, மொட்டை மாடிக்கு சென்று

அதையெல்லாம் தூக்கி அடித்து, எல்லாம் முடிந்தபின், பூந்தியும் சோடாவும் சாப்பிடுவோம்!

வந்தவர்: ஆஹா அருமை அருமை....

வினவு: கேளுங்க, அது மட்டும் இல்லை..... இது முடிந்த பின், பூந்தி எல்லாம் காலியாகியபின், சிறந்த புரட்சியாளர் யார் என்ற போட்டி ஒன்றும் வைப்போம்!

வந்தவர்: அப்படி என்னங்க போட்டி? அதும் புரட்சி போட்டி?

வினவு: விதம் விதமா திட்டும் போட்டி! அதாவது, முதலில் கண்டபடி திட்டணும், அப்புறம் கண்ண மூடி திட்டணும், அப்புறம் காது மூக்கு இவைகளை

மூடிக்கொண்டு திட்டணும் அப்புறம், வாயை மூடிக்கொண்டு திட்டணும்!

வந்தவர்: இந்த கடைசி சமாச்சாரம்தான் புரியவில்லை......அது எப்படி சார் வாயை மூடி.......

வினவு: வேற ஒண்ணும் இல்லை, செய்கயிலையே காண்பித்து மற்றவருக்கு இது திட்டு என்று புரியவைக்க வேண்டும்!

வந்தவர்: அட அட ........ யாருங்க இதுல ஜெயிப்பவர் ரொம்ப பெரிய திட்டு நிபுணராக இருப்பார் போல இருக்கிறது....யாரு சார் அது?? தயவு செய்து சொல்லுங்க சார்?


வினவு: தோழர் கலகம்....... (அவரைக்கைக்காட்டி)


வந்தவர்: வந்தவுடன் என்னை யாரென்று கூட தெரயாமல் கண்டபடி திட்டியபோதே நினைத்தேன்........

வினவு: ஆமாம் ஆமாம், இவர் சாதாரண ஆளு இல்லை, சி பீ ஐ மார்சிஸ்ட் லெனினிஸ்டு போல இவரு சி பீ ஐ திட்டிஸ்ட்..........

வந்தவர் (தோழர் கலகத்தைப்பார்த்து, பரவசப்பட்டு) : கொஞ்சம் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்.........


கலகம்: டேய் .......^^%^&&*()(...... ஏகாதிபதிய..அடிவருடி.......நாயே..........


வந்தவர்: இது போதும் இது போதும்......


வினவு: Introduction போதும் என்று நினைக்கிறேன் சார், விடயத்திற்கு வருவோமா?

வந்தவர்: சரி. இதான் மேட்டர். எங்க ஊராண்ட இருக்கிற ரெண்டு கிரௌண்டு பொறம்போக்கு நிலத்துல குழி வெட்ட முடிவெடுத்தோம், மழை இல்லா காலத்தில மக்களுக்கு உதவ நீர் தேக்கம் செய்ய! அத்த தடுக்கநினைகிறாங்க சில ஏகாதிபத்திய அடிவருடிகள் மற்றும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் சிலர். இவங்களுக்கு பயந்து யாருமே குழிவெட்ட வர மறுக்கிறார்கள். நீங்க வந்து கொஞ்சம் புரட்சி பண்ணீங்கன்னா எல்லோரும் பயப்புடாம வேல செய்வோம்!

வினவு : ஆகா ஆஹா......இது தான் இதுதான் நாங்க செய்ய வேண்டியது! என்னடா எங்க வாழ்க்கையில புரட்சி புரட்சி என்று கத்தியே retire ஆகிடுவோம் என்றல்லோவோ நினைத்தோம், தெய்வம் போல, மனிக்கவும் ஸ்டாலின் போல வந்து உதவுறீங்க! வாங்க தோழர்களே, போயீ புரட்சி பண்ணுவோம்!!!!

வந்தவர்: ரொம்ப நன்றி புரட்சியாளர்களே.... வாங்க எல்லாம் போகலாம் ....போய் புரட்சி செய்யலாம்.........

வினவு: போகலாம் சார், ஆனால், இன்றைய கோட்டா பஜனை பாக்கி, கொஞ்சம் வெயிட் செய்தீங்கன்னா முடிச்சிட்டு வந்திடுவோம்!

வந்தவர்: ஒ தாராளமா....ஒரு விண்ணப்பம்...நானும் உங்க பஜனையை பார்க்கலாமா?

வினவு: வாங்க...........

புரட்சியாளர்கள் எல்லோரும் மற்றும் வந்தவரும் அடுத்த அறையினுள் செல்கிறார்கள்! உள்ளே, முன்னர் சொன்னதைப்போல பல சர்வதிகாரிகளின் படங்கள்! எல்லோரும் கீழே உட்காருகிறார்கள்!


வினவு:
ஓம் நமகா ஸ்டாலின் பேரச்சொல்லி
ஓம் நமகா மாவோவின் ஊரைச்சொல்லி
ஓம் ஓம்

அரைடிக்கெட்:
மாவோவே தெய்வம்
அவர் வார்த்தையே வேதம்
அவர் செய்த ஆட்சி
நமக்கும் வேண்டும்

மரண அடி:
ஸ்டாலின் அண்ணன் எந்தன் மெய்ப்பனல்லோ
அவர்தான் நமக்கு கடுவுளன்றோ
அவர்தம் பாதையில் நாம்செல்வோம்
பிடிக்காதோர் எல்லோரையும் திட்டி தள்ளுவோம்

செங்கொடி:
புரட்சிக்கு தந்தை யவரோ
எங்க காழ்ப்புணர்ச்சிக்கு காரணம் யவரோ
யாவிற்கும் அவரே எல்லை
அவருக்கும் கவலை இல்லை
மாவோ பெற்ற பிள்ளைதானே யாரும்

(எல்லோரும் கோரசாக) :
தாக்கினரே போட்டு தள்ளினாரே ஸ்டாலினையே மிஞ்சினாரே


கலகம்:

மாவோ அண்ணன் சொல்லுறார் ஒத்துக்கோ ஒத்துக்கோ
கண்டபடி திட்டும் கலைய கத்துக்கோ கத்துக்கோ
வாயார திட்டுவோம் வெறுப்போடு
கண்டபடி கத்துவோம் கடுப்போடு
திட்டுன்னா திட்டுவேன்
கண்டபடி கத்துவேன் ....


இப்படியாக பஜனை முடிந்தபின் திரு வினவு அவர்கள் எல்லோருக்கும் பூந்தி பிரசாதம் கொடுக்கிறார், கூடவே தோழர் திரு கலகமும் ஒவ்வொருவரையும் தனித்தனியே திட்டி ஆசீர்வாதம் கொடுக்கிறார்!


வந்தவரும் மிக பரவசத்துடன் : ஆஹா என்ன முற்போக்கு என்ன முற்போக்கு..... உங்க பஜனையை பார்த்து பரவசப்பட்டதால் எனக்கே ஒரு பஜனை பாடல் பாடவேண்டுமென்று தோன்றுகிறது!


வினவு: அதுகென்ன... பாடுங்களேன்.....கடுவுளப்பத்தியா பாடுறோம்... அதெல்லாம் பிற்போக்கு.. நாமெல்லாம் முற்போக்கு .......... நாமெல்லாம் ஸ்டாலின் மாவோ லெனின் இவங்களைத்தான் வணங்குவோம்.....பாடுவோம் ....... ம்ம் ஆரம்பிங்க....



வந்தவர்:

மாவோவை துதிக்காத நாள் இல்லையே
தலைவர் ஸ்டாலினை போன்றொரு ஆள் இல்லையே
உண்மை மட்டும் பேசும் தெய்வம்
எங்கள் வினவன்றி வேறொருவர் ஏது...............

பஜனை இப்படி மொத்தமாக முடிந்த பின்னர் வந்தவருடன் வினவு மற்றும் தோழர்கள் புறப்படுகிறார்கள், புரட்சி செய்ய!

8 comments:

நிகழ்காலத்தில்... said...

வலைப்பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இப்போது வலைப்பதிவுக்கும் வந்து ஆரம்பித்துவிட்டீர்கள்

உங்கள் எழுத்தில் இருக்கும் நகைச்சுவைக்கு மட்டும் எப்போதும் நான் ரசிகன்:))

வாழ்த்துகள்...

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள் அதிரடியாக திரட்டிகளிலும் இணைத்து கலக்கவும்.

கோவி.கண்ணன் said...

வலையுலக சுப்பிரமணிய சாமி, தனிப்பதிவு தொடங்கியாச்சா ?

அவ்வ்வ்வ்வ்வ்

வாழ்த்துகள் !

மணிகண்டன் said...

இட்லிவடை மட்டும் உங்க கமெண்ட் ரிலீஸ் பண்ணி இருந்தா ஒரு வலைப்பதிவு மிஞ்சி இருக்கும் :)- வாழ்த்துக்கள். நல்லதை எழுதுங்க. வெறும் விமர்சனம் மட்டும்ன்னா போர் அடிச்சுடும். அடுத்தது அனானிமஸா எழுதும்போது ஒரு tight discipline maintain பண்ணுவது கடினம். ஈசியா personal attacksaa மாறிடும். வினவு குறித்து நீங்க எழுதி இருக்கும் நக்கல், நீங்க எப்போதும் கோவி சம்பந்தமா எழுதும்போது உள்ள சுவாரசியம் இல்லை. அதுனால தான் ரெஸ்பான்ஸ் இல்லை :)-

ரவி said...

ஹி ஹி.......

கிரி said...

//நீங்க எப்போதும் கோவி சம்பந்தமா எழுதும்போது உள்ள சுவாரசியம் இல்லை. அதுனால தான் ரெஸ்பான்ஸ் இல்லை //

:-))))))))

"No" Welcome :-)

Ken said...

http://www.thiruvilaiyattam.com/2009_12_01_archive.html

வஜ்ரா said...

வலையுலகத்து டி.ராஜேந்தர் உங்களை வலையுலகத்து சு.சாமி என்கிறாரே!