visitors

Monday, July 19, 2010

துளிகள்!

துளிகள்!

மற்றொரு ரயில் விபத்து! சுமார் நூறு உயிர்கள் வரை பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. மம்தா பாநேர்ஜி காரணம் தேடுவார். ஒரு வேளை புத்தா தேப் குண்டர்களை ஏவி விட்டு இதை செய்திர்க்கலாம், இல்லாவிடில் ஜோதி பாசுவின் ஆவி விளையாடி இருக்கலாம் என்று ஏதாவது கூறுவார். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று முழித்து கொண்டிருக்கும் இடதுசாரிகள், இதையும் சீரியசாக எடுத்துக்கொண்டு ஏதாவது பதில் கொடுப்பார்கள்!

பாவம் நம்ம ஊரு கம்யூனிஸ்ட்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் தாங்கள் கட்டி வைத்த கோட்டை, அதாவது வங்காள ஆட்சி, ஒழிக்கப்படப்போவது உறுதி என்று புரிந்து விட்டதால், மிட்டாய் இழக்கப்போகும் சின்னப்பயல்களை போல பொருமிகொண்டிருக்கிரார்கள்.

பெங்காலில்தான் இப்படி என்றால் கேரளத்தில் அதை விட மோசம். ஆட்சி காலிஆகப்போவது உறுதி. பின்னரயி விஜயனும் அச்சு தாத்தாவும் ஆடும் கபடி ஆட்டம் காமடியிலும் காமடி. கேரளமே சிரித்து கொண்டிருக்கிறது. அச்சு தாத்தாவிற்கு என்ன போச்சு. பதவி போச்சென்றால், லோக்கல் பாலிட்பீரோ ஆப்பிசில் பொய் உட்கார்ந்து தேசாபிமானி படித்து, சாயவை குடித்து, அதே வேட்டி சட்டையில் காலம் தள்ளி விடுவார். ஆனால் விஜயன் கோஷ்டியோ அப்படி இல்லையே. ஏகத்துக்கு பதவி சுகம் மற்றும் அதனால் வந்த வரவுகளை அனுபவித்து ஒரு நிலைக்கு வந்தாச்சே! அதை எப்படி அவ்வளவு எளிதில் விடுவது என்ற கவலை. அவர் கவலை அவருக்கு. காங்கிரஸ் காரன் திருப்பி வந்தாங்கன்னா சும்மா விடுவானா? பங்கு கேட்ப்பர்களோ என்ற கவலையும் கூட!


நான்கு சகோதரர்கள் சேர்ந்து தங்களின் தங்கையின் ஆண் நண்பரை உதைத்ததால் அந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் இறந்து விட்டானாம். இது நடந்தது பொக்காரோ நகரில். இது ஜாதி சம்மந்தப்பட்ட ஹானர் கொலையா என்று போலிசு விசாரித்து வருகிறது.

இது இப்படி என்றால் ஒரு ஜாதி கும்பல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் இருவர் மணமுடித்தால் கொன்று விடுவோம் என்று கத்துகிறது. அப்படி சொல்லுவது தவறு என்று கண்டிப்பதை விட்டு அரசியல் கட்சிகள் எங்கே ஒட்டு பொய் விடுமோ என்று கப்சிப்பென்று இருக்கின்றன. ஆக மொத்தம் மகளிர் தாங்களாகவே யாரையும் துணைவனாக தேடிகொள்ளக்கூடாது. அப்படி செய்தால் நாங்கள் தேடி-கொல்வோம் என்பதுதான் இங்கே வழிமுறை. ஆணாதிகத்தின் மொத்த குரூரமும் நம்மிடத்தில் இருக்கும்பொழுது, இங்கே தாலிபான் வரத்தேவை இல்லை என்று சொல்ல தோன்றுகிறது. அதான் இங்கேயே இருக்கே home grown Taliban!

பாகிஸ்தானை பற்றி தமாஷான ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. ஒன்று, கூகிள் வெளியிட்டதாக சொல்லப்பட்ட செய்தி. வந்த விபரங்கள் நிஜமானாலும், சொலப்பட்ட செய்தி மற்றும் சொல்லப்பட்ட புள்ளி விபரம் முழு பாகிஸ்தானுக்கும் பொருந்தாது என்று கூகிளே நேற்று சொல்லிவிட்டது. அதற்க்கு காரணம், பாகிஸ்தானில் இன்டர்நெட் பார்ப்பவர்கள் மிக குறைவு என்பதால். ஆனாலும் பார்த்தவர் விபரங்கள் உண்மையே.

பலரை சிரிக்க வைத்த அந்த செய்தி - கூகிளில் செக்ஸ் காட்சிகளை, ஆபாச காட்சிகளை பற்றி அதிகம் தேடுபவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளார்கள் என்ற புள்ளி விபரம்தான்! அதைவிட தமாஷு, இதில் தேடல்கள் மனித செக்ஸ்ஐவிட மனித-மிருக செக்ஸ் பற்றிய தேடல்கள் மிக அதிகம் என்பதுதான் (ஒட்டகம் மாடு அண்ட் மனிதன் வகைறாக்கள்)! Fox news மற்றும் பல செய்தி ஊடகங்கள் இதை கேட்டு பாகிஸ்தானுக்கு ஒரு பெயரும் வைத்து விட்டன. அது Pakistan இல்லை, Pornistan என்று. (அதாவது Porn என்றால், ஆபாச திரைப்படம்)!

இதை பார்த்து பாகிஸ்தானியர்கள் குறியோ முர்றியோ என்று கூச்சல் போட, கூகிள் சுதாரித்துக்கொண்டு, புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்ட ஜனத்திகை சிறிதானதால், இதை பாகிஸ்தானின் மொத்த அடையாளமாக காட்ட முடியாது என்று பட்டும் படாமலும் அறிவித்து விட்டது. அதாவது a lame reason.

ஆனால் உண்மை என்னவோ, அதிக மத வாதிகளை கொண்ட நாடான ஒன்று யாரும் பார்க்க வில்லை என்றால், நாடும் முதல் பொழுதுபோக்கு, இந்த மாதிரி விடயங்கள்தான் என்று எண்ணும் பொழுது , முக்கால் வாசி மனிதர்கள் வேடதாரிகளே, சராசிரிகளே என்று நினைக்க தோன்றுகிறது! (இதில் இந்தியாவும் முதல் ஐந்து இடங்களில் இருக்கலாம் என்று படித்ததாக ஞாபகம், ஆனால் கண்டிப்பாக ஆடு மாடு ஒட்டகம் அதில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்)

தொடரும்.....

1 comment:

மதுரை சரவணன் said...

அனைத்து விசயங்களும் துளியாக இருந்தாலும் சிந்திக்க தூண்டுபவை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்