visitors

Tuesday, July 27, 2010

துளிகள் - மேலும் சில

துளிகள் - மேலும் சில
--------------------

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு சானலில் Bill Maher அவர்களின் documentary ஆன,
"Religulous" ஐ பார்த்தேன்!

முதலில், Bill Maher என்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்! அவர் ஒரு நடிகர்,
சமுதாய பார்வையாளர் மற்றும் விமர்சகர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் பல பல
விடயங்களில் முத்திரை பதித்தவர். முக்கியமாக ஒரு நாத்தீகர்!

அவரின் இந்த டாகுமெண்டரி படம், மதங்களை கிண்டல் செய்யவே எடுக்கபட்டது, திரை அரங்குகளிலும் திரை இடப்பட்டது. இந்த படத்தின் பெயர் Religulous என்று முதலில் சொன்னேன். இது நடவில் உள்ள ஒரு ஆங்கில வார்த்தை இல்லை! ஆனால் அதற்க்கு அவர் கொடுத்த விளக்கம் - Religulous என்பது Religion + Ridiculous என்பதை சேர்த்து செய்ததாகும்! அதாவது மதம் + நகைக்கத்தக்க என்பவைகளை சேர்த்து செய்யப்பட்ட ஒரு சொல். அதாவது மதம் என்றால பார்த்து நகைகப்பட வேண்டியவை என்பதை அவர் சொல்லுகிறார்.

படு தமாஷாக மதங்களை கிண்டலடிக்கிறார். மத பரப்பாளர்களையும், பற்றாளர்களையும் சதாயக்கிறார்! மத நம்பிக்கையார்களும் அதை பார்க்கலாம், அதில் சொல்லப்பட்டதில் இருந்து கொஞ்சம் எடுத்துகொண்டு, தங்கள் மதங்களில் உள்ள extreme நிலைகளையும் ஒதுக்கலாம்.

சொல்லிக்காட்டப்பட வேண்டிய விடயம், இதை அமெரிக்க திரை அரங்குகளில் பிரச்சனை இல்லாமல் திரை இட்டார்கள். முன்னேறிய உலக நாடுகள் பலதில் திரை இடப்பட்டன, பிரச்சனை இல்லாமல். அதாவது, கிருத்துவ மதத்தை மிக அதிகமாக விமர்சித்த இந்த படம், கிருத்துவ நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பார்கபட்டது. ஆம், அங்கங்கே கோபம் இருந்தது, ஆனாலும், அந்த கோபத்தை யாரும் வன்முறையால் காட்டவில்லை!

கூகிள் வீடியோவில் அதன் காட்சிகள் இருக்கின்றன!

-----------


நித்யா மறுபடியும் போதனைகளை தொடங்கிவிட்டாராம். ஆதலால் சினம் கொண்ட சிலர், குறிப்பாக வலைப்பதிவுகளில் புரட்சி பேசும் சில அரை குறைகள் ஐயியோ அநியாயம் பார் என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அதாவது, அயோக்கியத்தனம் செய்து விட்டு மறுபடியும், கூசாமல் பொது வாழ்க்கைக்கு வருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சத்தம் போடுகிறார்கள்.

இதே போல அநியாயம் செய்து, அனால் "புரட்சி" பெயர் பலகை போட்டு மறைந்து கொண்டு கொட்டம் அடித்த சிலரை பற்றி பார்ப்போமா??

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெண்ணகளை மானப்பங்க படுத்தியவர். அவர் கையில் இருக்கும் இரகசிய போலிசின் பிடியில் யாரவது அழகிய பெண் மாட்டினால் உடனே தன் கைவரிசையை காட்டியவர்! இவரின் வண்டவாளங்கள் யாவையும் கடைசி வரை அறிந்தே, அது தக்க நேரத்திற்கு உதவும் என்று சும்மா இருந்த மற்றுமொரு மாபெரும் "புரட்சியாளர்"! இந்த அயோக்கியனின் பெயர் லாவேறேண்டி பேரியா! அந்த மாபெரும் புரட்சியாளர் வேறு யாரும் இல்லை. ஜோசெப் ஸ்டாலின்தான் அது!

லாவறேண்டி பேரியா ஸ்டாலினின் அடியாள். சுமார் இருபது வருடங்கள் ஸ்டாலினின் நிழலாக, ஸ்டாலின் சொன்னவர்களை ஒழித்து கட்டும் அடிமை! NKVD எனப்பட்ட (பின்னர் இதுவே KGB ஆனது) ரஷ்ய இரகசிய போலிசு மற்றும் உளவுத்துறையின் தலைவன். ஸ்டாலினின் வன்முறை எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் பெருமகன்!

இவனின் கற்பழிப்பு தாண்டவம் மற்றும் அராஜகம் ஸ்டாலினிக்கு நன்றாக தெரியும். ஆனால் அதனை தண்டியாமல், நேரம் வரும்பொழுது, அதாவது ஸ்டாலினிக்கு எதிராக பேரியா எப்போழுதாக திரும்பினால், அப்பொழுது அவனை போட்டு தள்ள அது உதவும், அதுவரை அவன் ஆடட்டும் என்று ஸ்டாலினால் விட்டு வைக்கபட்டான்!

பேரியா ஒரு சாம்பிள்தான்! இந்த புரட்சியாளர்களின் அசிங்க வண்டவாளங்கள் வெளியிடப்பட்டு நாட்கள் பல ஆகிவிட்டன! அதைப்பற்றி யார் இங்கு பேசப்போகிறார்கள் என்று நினைத்து இங்கே சில புரட்சி பொய்யர்கள், கதை விட்டு கொண்டிருக்கிறார்கள்!

நித்தியாவை திடட்டும். ஆனால், அதே சமயம் அதைவிட மிகக்கொடிய அசிங்கங்களையும் அராஜகங்களையும் நடத்திய திருடர்களுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர் "புரட்சியாளர்கள்"!


போதாகுறைக்கு, இந்த கயவர்களின் பெயரையும் படங்களையும் வலை தளத்தில் போட்டு அழகு பார்க்கும் ஆசாமிகளுக்கு, நித்தியா பெயரை கேட்டால் கோபம் வருகிறதாம்!!

நித்யா காவி கட்டிய அயோக்கியன் என்று சொல்லும் இவர்கள் தினமும் கும்பிடுவதோ சிவப்பு துணி கட்டிய சாக்கடைகளை!!

இவர்கள் செய்கிறார்களாம் புரட்சி, இவர்கள் எதிர்க்கிறார்களாம் அநியாயத்தை..இவர்கள் செய்கிறார்களாம் போராட்டம்.............கேக்கறவன் கேணையனாக இருந்தால்.........

No comments: