visitors

Thursday, March 18, 2010

புரட்சியாளர்களின் சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனத்தில் இறங்கியிருக்கும் அன்பான நண்பர் திரு வினவு மற்றும் பல நண்பர்களுக்கு,

எப்படியும் நான் எழுதியதை நீங்கள் வேண்டாததன்று என்று ஒதுக்கி விடுவீர்கள் என்று தெரிந்துதான் எழுதுகிறேன்!

இப்படித்தான் டைரக்டர் திரு T ராஜேந்தர் எல்லாவற்றையும் செய்வார். அதாவது, கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, இயக்கம் என்று பல. சிறிது காலத்திற்கு பிறகு, இந்த லிஸ்டில் சேர்ந்தது மற்றுமொரு அடையாளம்! Audience!!! அவரின் படங்களுக்கு அதையும் அவர்தான் செய்ய வேண்டியதாக போய்விட்டது! வேற யாரும் சினிமா கொட்டகைக்கு வர மறுத்துவிட்டனர்!!!!

இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால், பல விதமான கதைகளை எழுதி எழுதி, யாரும் படிக்காததால், இப்பொழுது சினிமா பக்கம் வந்து விட்டீர்கள் போல! T ராஜேந்தரின் நிலைமைக்கு வரும் நேரம் ஏறக்குறைய வந்து விட்டது! என்ன அவர் எடுத்த மொக்கைகளில் பலவற்றை அவரே செய்து கடைசியில் அவர் ஒருவரே அதை பார்க்கும் நிலைமைக்கு வந்தார்!

நீங்களும், பல பல கதைகள் விட்டு, அளந்தது போதாது என்று நினைத்து, புதிய துறையான சினிமா விமர்சனத்தில் வந்து இறங்கியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! கூடிய சீக்கிரம் தனி ஆளாய் உங்கள் பிளாகில் ருத்திர தாண்டவமாட வாழ்த்துக்கள்!

எல்லாம் சரி, இவ்வளவு மும்முரமாக சினிமா விமர்சனம் செய்றீங்களே நீங்கள் இந்த சோவியத் சினிமா எதையாவது பார்த்திருக்கீங்களா?

மத்த மொக்கை சோவியத் படம் எல்லாத்தையும் விட்டுடுவோம் சார். Ivan The Terrible படம் பற்றி கொஞ்சம் பேசுவோமா?

அதாவது, இந்த படம் மிக சிறப்பாக இருந்ததாகவும், ஜார் இவான் வேசளிஎவிச்
என்ற Tsar Ivan IV ஐ மிக சரியாக சித்தரித்ததர்க்காகவும், இந்த படத்தின் இயக்குனர்
செர்கே ஐன்ஸ்டீன்னுக்கு ஸ்டாலின் பரிச வழங்கினார் உங்கள் ஆண்டவர்
ஸ்டாலின்!


எப்படி, இந்த பிற்போக்குதனமான (உங்க மொழியில்) கொலைகார மன்னராட்சி செய்த ஒரு ஜனநாயகமே தெரியாத ஒரு கொடுங்கோலன் பற்றிய படத்தில் சற்று பிழையே இல்லாமல் அந்த மன்னனை பற்றி காட்டியதற்காக தரப்பட்டது இந்த பரிசு.

நிற்க

இது ஆட்டோ ஷங்கரை பற்றி ஒருவர் படமெடுக்கும்போழுது அதை தத்ரூபமாக அருமையாக காட்டினார் என்பதைபோன்று இல்லை! ஆட்டோ ஷங்கரை ஒரு நல்ல மனிதாராக, ஞாயத்திற்கு தான் இந்த கொலைகளை செய்தார் என்பதை அருமையாக காட்டியதற்காக கொடுக்கப்பட்ட பரிசுதான் இது!

சொல்லவருவது என்னவென்றால், மன்னராட்சியை முறிப்போம், அதெல்லாம் பிற்போக்கு, அவர்களெல்லாம் மக்களின் ரத்தத்தை குடித்து கொழுத்த ஆதிக்கவாதிகள் மற்றும் அவர்களால் நடந்த ஆட்சியில் பங்குபெற்றவர் எல்லாம் ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை சொல்லியே ஆட்சியை பிடித்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், அதிலும் அவர்களின் விடிவெள்ளி ஸ்டாலின், தூக்கி பிடித்ததோ, இந்த இவான் என்ற மன்னனின் சரித்த்ரத்தை!!!!
ஏன் ஸ்டாலின் இந்த படத்தை கொண்டாடினாறேன்றால், இந்த படத்தின் கரு, அதாவது, மற்ற உள்ளநாட்டு சக்திகள் ரஷ்யாவை முறிக்க நினைத்தபொழுது இந்த மன்னன் அதை முறித்து ரஷ்ய சிறப்பை நிலைநாட்டினான் என்று வலியுறுத்தியதால்தான்!

இந்த Tsar Ivan (Ivan the terrible என்றுதான் இவரை அழைப்பார்கள்) எதற்கும் தயங்காத ஆதிக்கவாதி! தன் ஆட்ச்சியை அசைக்க நினைத்த யாரையும் விட்டு வைத்தது இல்லை! ஒரே தண்டனைதான்! சாவு! அதுவும் கூண்டோடு அடித்து கொலை!! போயார்கள் (Boyars) எனப்படும் மன்னராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஜமீன்களை, தனக்கு வேண்டாதவர்களாக கருதி கும்பல் கும்பலாக போட்டு தள்ளினார்! காரணம் (இது வரலாற்றில் பொறிக்கப்பட்டது) எல்லா ஆதிகாரங்களும் மன்னன் இவானிடம் மட்டும் தங்கிவிட்டால் அது மிக மோசமான சர்வாதிகாரமாக ஆகிவிடும் அன்று இவர்கள் கருதியதால்!

சரி விடயத்திற்கு வரும்!

இந்த மோசமான ஒரு சர்வாதிகாரி, ஸ்டாலினிக்கு நல்லவராம்! அதற்குதான் இந்த படத்தின் இயக்குனருக்கு பரிசு!

அதாவது, கம்யூனிஸ்ட்கள், எல்லோரையும் பிற்போக்கு, மட்டம், அயோக்கியத்தனம் எண்டு விமர்சிப்பார்கள், ஆனால் அவர்கள் இதுபோல ஏதாவது செய்திவிட்டு அதற்க்கு சித்தாந்த ரீதியாக ஒரு நொண்டிசாக்கையும் கொடுப்பார்கள்!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்களின் விமர்சன நேர்மை, தங்களின் அந்த நேர நோக்கையும் தங்களுக்கு அந்த காலகட்டத்தின் தேவையையும் மட்டுமே கருத்தில் கொண்டதாகும்! இவர்களிடம் எல்லா காலங்களிலும் சமமான மற்றும் நேர்மையான ஒரு பதிலையோ, செயல்திரனையோ, வழிமுரையையோ, பதில்களோ எதிர்ப்பார்க்கவே முடியாதோ!

இது மட்டுமா?

ஸ்டாலினும் அவர்களின் சகாக்களும் போட்டுத்தள்ளிய சினிமா இயக்குனர்கள், கவிஞர்கள் மற்றும் நாடகத்துரையினார்களின் பட்டியல் மிக நீளம்!

இதைப்போல ஒரு சரித்திரத்தை தங்கள் பின்னே வைத்துக்கொண்டு, புரட்சி என்ற பெயரில் தங்கள் முன்னோடிகள் செய்தது தவறு என்று சிறிதும் வருத்தப்படாமல், அதையும் புகழ்ந்து பாடி, பொய் சொல்லி, திரித்து, நங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை என்று நாடகமாடும் இந்த கூட்டம், இந்த கோவா திரைப்படம் என்ன, ஒரு மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுத தகுதியற்றவர்கள்!

சோவியத்கள் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு, இந்த மாதிரிதான் திரைப்படம் எடுக்கவேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்! அந்த வழி முறையின் பெயர் Socialist Realism! அதாவது, எடுத்தால் எங்க propaganda தான், இல்லையேல் ஓடு! இங்கே வாய்கிழிய விமர்சனம் பேசும் நண்பர்கள், இவர்களின் சோவியத் மற்றும் மாவோவிஸ்ட் ஆட்ச்சியில் எந்த மாதிரி சுதந்திரமாக படம் எடுக்க முடிந்தது என்பதையும் கூறினால் இவர்களின் நேர்மையை பாராட்டலாம்!

அதை மறந்து, அல்லது மறைத்து, அதோடு நிற்காமல், நாங்கள் செய்ததுதான் சரி என்று கூசாமல் கதை விட்டுக்கொண்டு, இந்த சுதந்திர நாட்டின் சுதந்திரங்களை முழுதாக அனுபவித்துக்கொண்டே அதையும் தூற்றிக்கொண்டிர்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது!

நல்ல சினிமா விமர்சனம் எழுதராங்காப்பா சாமி!

No comments: