visitors

Saturday, March 27, 2010

கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்! அது யாராக இருந்தாலும்!!

துஷ்டனை கண்டால் என் செய்யலாம் என்று பல நினைத்து
கணினி ஒன்றை கைதனில் கொடுத்து
காழ்புணர்ச்சிதனை கலவை இலாமல் திணித்து
காட்டுக்கூச்சல் கக்கிப்போடலாம்; பல காவடி தூக்கிகள் கைதட்டி போவார்கள்

தான் செய்தால் சூரா சம்ஹாரமாம் , மாற்றான் செய்தால் மானப்பங்கமாம்
வெறியுடன் உருமுவாராம் தான் நினைத்த நிலையில் இல்லாமல் போன நிகழ்வுகளுக்கு
வலியென உணர்ந்து வாங்கிய வசவை வேண்டியவை இல்லையன
வம்பில்லாமல் சொன்னாலும், வந்தது விடம்தான் நான் சொல்வதால்
வடிகட்டு இல்லை நடையை கட்டென காரி உமிழும் கலைக்கு
கொடுக்கும் பெயர்கள் பல, அதை புரட்சி என்பார் சிலர்

உருவமிலா ஓரழுக்கு ஒளிந்து தாக்குகிறது, உண்மைதான் அது வன்மம்தான், மறுப்பதற்கில்லை
உருவத்துடன் பல அழுக்கு உணர்ந்தே தாக்குதே, வன்மம்தானே அது உண்மைதானே, புரட்சிகள் ஏனோ அதை எதிர்ப்பதில்லையே

கரிநீர் மொண்டு , காய்ந்த எச்சத்தையும் கொண்டு
மாற்றானை அடிப்பது எங்கள் வழி அதை வாங்குவது உங்கள் விதி
தப்பென்னவோ அதில் என்று தவில் அடிக்கும் இவர்களின் தர்க்கம்
பாசிசத்தில் முத்தெடுத்த வன்முறையாளனின் குரூர மார்க்கம்

நாகரீகம் நாராசமாக போனதுபார், நாதாரி எல்லாம் நச்சை என் மேல் பூசுதுபார்
நொந்துபோய் சொன்னாராம் நாசக்காரர்களின் நல்ல நண்பர்

நாசத்தின் நாதத்தை நாள்தோறும் நடத்தும் நாதியற்ற ஒரு கூட்டம்
நாராசமாக நாலாபக்கமும் நாகொளாமல் நனைத்திட
தானும் வந்து வன்மத்தை கொண்டு நன்று நன்றென நாதம் பாடிட

நட்ட பயிர் நாளிடைவில் நானிருக்கேன் என்றிராதோ
வளர்ந்த கனியும் விடமுடன் வன்மமாக வட்டமிடாதோ

நட்டவன் சொல்வான் நடுவது என்பணியென
வந்தவனும் சொல்வான் சொல்வதும் என் பணியென

சாபமிடும் வலையினில் வக்கணையாக வந்திறங்கி
கோபமுடன் சாபன்தனை முரசாக முழங்கி
செய்யும் இந்த வழிமுறை வழங்காதோ வாரிசு

வந்தவனோ உன்பக்கமில்லை வந்துபார் கோபம்!

சாபமிடல் என் உரிமையென, மாற்றான் செய்தால் அது கொடுமையென!!

------------

அநாகரீகமான தனிநபர் தாக்குதல்கள் மிகத்தவறு!கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்!

எல்லோருக்கும் அது பொருந்தவேண்டும்!! அது யாராக இருந்தாலும்!!

2 comments:

Maximum India said...

//அநாகரீகமான தனிநபர் தாக்குதல்கள் மிகத்தவறு!கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்!

எல்லோருக்கும் அது பொருந்தவேண்டும்!! அது யாராக இருந்தாலும்!! //

வழிமொழிகிறேன்!

சமீபத்தில் உங்களுடைய வால்பையன் அவர்களது பதிவில் பார்த்தேன். கடவுள் நம்பிக்கையை புதிய கோணத்தில் அணுகியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்!

விவாத பொருளை விட்டு விட்டு தனிமனித சாடல்களில் இறங்கிய சிலரின் இடையூறுகளால் உங்களது பக்கத்தினை முழுமையாக புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருந்தது.

உங்களது விவாதத்தின் சாராம்சத்தை ஏன் நீங்கள் தனிப் பதிவாக பதிவிடக் கூடாது?

என்னைப் போன்று புதிய தளங்களை அறிய விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்குமே?

நன்றி.

Anonymous said...

//உண்மையில் திரு வால் பையன் ஒரு நேர்மையான நடுநிலைவாதிதான்.//

நோ தம்பி , பல பதிவிகளில் உன்னோட பின்னூட்டம் படித்திருக்கிறேன். நல்லா தான் எழுதி வந்திருக்கே !! ஆனா கடசில நீயும் இன்னொரு தகர டப்பா தானா ? என்ன ராஜா இது >>>> ஏன்னா பேசுற ???

நீ கோவி பையனை மெண்டு நிமிர்த்திவிட்டு வாழ் பதிவுக்கு முத முதலா வந்தப்ப, இவர் மத்த ஆளுக மாதிரி இவர் இல்லை கொஞ்சம் லூசில் விடுங்க இவரை என்று சொன்ன "சொள் அலகனை" நினைவிருக்கா ????
(சொள் அலகன்: என்னிடம் தமிழ் படித்த அமெரிக்க இரண்டாம் தலை முறை தமிழ் (தெரியாத) பையன் )

அவனை அப்போதே கண்டித்தேன் நான். வால் பையன் சும்மா கண்ணை மூடிக் கொண்டு பகுத்தறிவே இல்லாமல் கத்தும், இந்து கிருத்துவ மதங்களை மட்டும் கண்டபடி வசை படும் ஒரு சாதா கோமாளி

அருமைநாயகம் யேசுராஜா