visitors

Tuesday, July 13, 2010

அயோக்கியத்தனம்!!

அயோக்கியத்தனம்!!

மர்மயோகி என்ற பெயரை வைத்துக்கொண்ட ஒருவர், திரு வால் பையன் அவர்களை மிரட்டி, மேலும் தமிழ்மணத்தையும் திட்டி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்!!!

என்ன விடயம் என்று பார்த்தால், திரு வால் பையனும், அவரின் கூடவே எழுதும் (அல்லது அவரின் இன்னுமொரு பெயரா என்று தெரியாது) இராஜன் என்பவரும் இஸ்லாமை பற்றி கண்டபடி எழுதிவிட்டார்கள் என்று கோபப்பட்டு எழுதியது இது!!

திரு வால் மற்றும் அவரின் அடிபொடிகள் சிலர் இப்படி மதங்களை பற்றி கண்டபடி எழுதுவதை நான் கண்டித்திருக்கிறேன்! ஒரு முறை ஏசுவின் படத்தை அசிங்கமாக போட்டு ஏதோ கேவலமாக எழுதினர் இந்த ராஜன்! நானும் அதற்க்கு கடும் கண்டனங்கள் செய்தேன், மேலும் பலர் கடவுள் என்று நம்பும் ஒரு உருவத்தை கண்டபடி இகழ்வது தவறு என்றும் எழுதி இருந்தேன்! என்னை பொறுத்தவரை, கடவுள் மறுப்பு மிக ஜாக்கிரதையாக செய்யவேண்டிய ஒன்று! கடவுளை மறுங்கள், ஆனால் கேவலம் செய்யாதீர்கள் என்பதை நம்புபவன் நான்! திரு தருமி போன்ற ஒரு சிலரே ஒரு தன்மையுடன், நாகரீகத்துடன் வலை தளங்களில் இதை செய்கிறார்கள்! அவர்களின் எழுத்துகள் மிக வலுவானவை! பக்த்தர்களையும் யோசிக்க வைப்பவை! அதுதான் சிறந்த வழிமுறை! இல்லையேல், படிப்பவர் கோபம் கொள்ளுவார்கள்! சொன்ன விடயத்தை மறப்பார்கள்! திரு வால் போன்றவர்கள் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை!

மர்மயோகி என்று பெயர் வைத்துகொண்டிருப்பவர் ஒரு இஸ்லாமியர் என்று இப்பொழுதுதான் தெரிந்தது! அவர் வால் பையனை கண்டபடி தாக்கி மற்றும் மிரட்டி எழுதி இருந்தார்! மேலும் அவருக்கு வலு சேர்க்க இஸ்லாமிய பெயர்கள் கொண்ட சிலரும் வந்து வால் பையனை மிரட்டுகிறார்கள்! (இதில் வேடிக்கை திரு சென்ஷி என்று பெயர் வைத்துக்கொண்ட ஒருவர் இஸ்லாமியர் என்பது இன்றைக்கு தெரிந்து கொண்டேன்! அவர் பல தளங்களில், அதாவது இந்து மதத்தை கிண்டல் செய்யும் தளங்களில் வந்து சிங்கி அட்டிப்பவர்! ஆனால் வால் எழுதிய இஸ்லாமிய எதிர்ப்பு பதிவில் வந்து அவர் சொல்லுகிறார், வால் செய்வது தவறு என்று, அதாவது, இந்து மதத்தை தாக்கு பரவாஇல்லை, நாங்களும் வந்து ஜல்லி அடிப்போம், ஆனால் இஸ்லாமை பற்றி சொன்னால், கடும் கண்டனங்கள் தொடுப்போம் என்று. ஒரே நல்ல விடயம், இவர் மற்றவர்களை போல மிரட்டவில்லை! இஸ்லாமை பற்றி தவறாக பேசினால் கண்டனம் மட்டும் தெரிவிப்பாராம்! அந்த அளவில் கொஞ்சம் பரவா இல்லை! ஆனால், இந்து மதத்தை யாராவது திட்டினால், வந்து உட்கார்ந்து, அடி போடு, ஆம் அப்படிதான் என்று தட்டி கொடுப்பார், ஏனென்றால் அவர் முற்போக்கு)

விடயத்திற்கு வருவும்.

சரி, அண்ணன் மர்மயோகி கோபப்படுவது ஞாயம்தான் ஏனென்றால் அவரின் கடவுளை கண்டபடி திட்டுவதால் கோபம் கொண்டார் என்று நினைத்து நகரலாம் என்று நினைக்கையில், அவரின் பல பதிவுகளை, out of curiosity, கொஞ்சம் படித்தேன்!

அப்பொழுதுதான் அண்ணன் திரு மர்மயோகி ஒரு பயங்கர முற்போக்கென்று புரிந்தது! அதாவது தமிழ் வலை பதிவு முற்போக்கு! அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி அதுதான் முற்போக்கு என்று கூவும் கும்பலை சேர்ந்தவர் என்று புரிந்தது!

நான் இரண்டு பின்னூட்டங்கள் இட்டேன்! அவை கீழே!!

------------

வடிகட்டின மத அடிப்படை வாதி திரு மர்மயோகி அவர்களே,

எப்படி எப்படி, நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஏசலாம், பேசலாம், நம்பிக்கைகளை எள்ளி நகையாடலாம் ஆனால் உங்க நம்பிக்கைகளை யாராவது கேள்வி கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வரும், மேலும் விட்டால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள், உங்கள் மதத்தை கேவலமாக பேசினான் என்று!

பல இந்துகளுக்கு கண்ணகி கடவுள் - அந்த கண்ணகி பற்றி நீங்கள் தூற்றி எழுதவில்லையா?

இதோ கீழே நீங்கள் எழுதியது!

//அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்.//

பல இந்துக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு உருவத்தை நீங்கள் கீழத்தரமாக திட்டலாம், ஆனால் யாராவது உங்கள் கடவுலாரையோ புனிதரையோ ஏதாவது சொன்னால் வருகுதுபார் கோபம்-

அடுத்தது நீங்கள் ஏசியது அவ்வையாரை பற்றி!

அவ்வையார் ஒரு சிறந்த முருக பக்தர்! இந்துக்கள் பலருக்கு அவ்வை ஒரு prophet! ஒரு புனிதர். அப்படி பட்ட, இந்துக்கள் மதிக்கும் ஒரு உருவத்தை நீங்கள் எப்படி எழுதினீர்கள்???
மேலும் இந்துக்கள் புனிதராக ஏற்றுக்கொள்ளும் வால்மீகியைப்பற்றி மற்றும் கம்பனை பற்றி என்ன எழுதினீர்கள்??

// வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் //

இந்து மதத்தை பற்றியும், அவர்கள் வணங்கும் மதிக்கும் உருவங்களையும் அசிங்கமாக நையாண்டி செய்யும் உன்னைப்போன்ற மத வெறியர்களுக்கு என்ன கள்ளத்தனம் இருந்தால், உன் கடவுளார்களை எவனாவது விமர்சித்தவுடன் அது தவறு, ஏனென்றால் என் தெய்வங்களை மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லத்தோன்றும்!

வடிக்கட்டிய மத அடிப்படைவாதியான உங்களைப்போன்றவர்கள் இந்த மாதிரி பதிவு எழுத லாயக்கு அற்றவர்கள்!! நீ யோக்கியமாக இருந்தால் வால் பையன் மேல் கல்லடிக்கவும்!! நீங்களே மற்ற மதத்தை திட்டுபவர், நாராசமாக பேசுபவர்! அவரும் அதைதான் செய்தார்!!
ஆனால் நீங்கள் மட்டும் நல்லவர் அவரு கேட்டவர், அவரை தமிழ் மணம் நீக்கவேண்டும்!!!

எப்படி கதை????? வெட்ககேடு!! இந்தியாவில்தான் இது நடக்கும்!! (இந்த அழகில இவரு legal action எடுப்பாராம். ஞாயமா இந்துக்கள்தான் உங்கள் மேல் legal action எடுக்க வேண்டும்)

-------------------------

அதற்க்கு அவரும் ஒரு பதில் கொடுத்தார்!

திரு no அவர்களுக்கு
கண்ணகி ஒரு கற்பனை கதாபாத்திரம்..அதை தெய்வம் என்பதும் அந்த கதையை நன்புவதும் மூடத்தனம் என்று நான் மட்டும் சொல்லவில்லை..உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்..
ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்..

---------------------------

இதற்க்கு நான் கொடுத்த இன்னுமொரு பதில்

-----

// ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்.. //

முதலில் - நீங்கள் என்ன என் மதத்தை பற்றி சொல்லுவது? அதுவும் கற்பனை என்றும் கதை என்றும்?? உங்களுக்கு யார் சொன்னது அது கற்பனை என்று?? போய் பார்த்தீர்களா? அல்லது வால்மீகி எழுதும்போது கூட இருந்தீரா? பிரச்சனை வந்தால் அது கதையா?? உங்கள் மதத்தால் இன்றைக்கு உலகம் பூராவும் பிரச்சனைதான், ஆதலால் உங்கள் மதமும் கற்பனையா??

என்ன ஒரு அகங்காரம் இருந்தால் இந்து மத நடவுகளை கற்பனை என்றும், உங்கள் மத நடவுகளை மட்டும் உண்மை என்றும் சற்றும் சலனமிலாமல்
கூறுவீர்கள்! சரி சொல்லுங்கள் பரவாஇல்லை, ஆனால் அப்படி இருப்பவர் உங்களின் மதத்தை பற்றி சொல்லும்பொழுது பொறுத்து கொள்ள வேண்டும்! ஆனால் நீங்களோ அடாவடி அல்லவோ அடிக்கிறீர்கள்! வால் பையனை மிரட்டுகிறீர்கள்!

வால் பையன் அப்படி என்ன சொன்னார்! அதாவது நீங்கள் இந்துமதத்தை பற்றி சொல்லாததையா உங்கள் மதத்தை பற்றி அவர் சொன்னார்??

நீங்கள் மேலே கூறிய கூற்றில், இராமாயணத்தை எடுத்துவிட்டு ஹதீஸ் அல்லது வேறு ஏதாவது போடுங்கள்! அதைதானே அவரும் கூறினார்?

-ஹதீஸ் என்னும் கற்பனை கதையில் உள்ள பாத்திரங்களை புனிதர்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்னை என்பது உங்களுக்கே தெரியும்-

இதை நீங்கள் இந்துமதத்தை பற்றி சொன்னால் அது முற்போக்கு, பகுத்தறிவு, அதே உங்கள் மதத்தை பற்றி சொன்னால் அகங்காரமா?

இந்த போக்குதான் இஸ்லாம் என்றாலே எல்லோரையும் ஓட வழி செய்கிறது!!

இன்னும் ஒரு காமடி, இத்தனை நாள் வரை வால் பையன் போன்ற பலருக்கு சிங்கி அடித்த பல கூட்டங்கள் (அதாவது அவர் இந்து மதத்தை தாக்கும் பொழுது மட்டும்) அவர் உங்கள் இஸ்லாமிய மதத்தை தாக்குகிறார் என்றவுடன் அவர் அயோக்கியர் ஆகிவிட்டாரோ??? So, உங்கள் முற்போக்கு நாடகம் எல்லாம் உங்கள் மதத்தை திட்டாத வரைக்கும்தான்!!

மாபெரும் அறிவு மோசடி என்பது எதுதான்!!

மறுபடியும் சொல்லுகின்றேன், கூசாமல் நீங்கள் இந்துமத அடித்தளங்களை பற்றி பேசலாம், கண்ணகியை அவள் இவள என்று ஏசலாம், கம்பனை அவன் இவன் என்று தூற்றலாம், எங்கள் கடவுளாரை கற்பனை என்று தாக்கலாம், ஆனால் உங்கள் கடவுள்களையும் புனித பிம்பங்களையும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது! அப்படி சொனால் அது அயோக்கியத்தனம்!! ஆனால் அதை நீங்கள் செய்தால் அது உங்கள் உரிமை!

தூ!!

-----------------------------------------------

இதுக்கு பேருதான் அயோக்கியத்தனம்!

அதாவது, உன் மதத்தை நான் என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன்! கேட்டு ஒதுங்கி போவது உன் தலை எழுத்து! ஆனால் என் மதத்தை பற்றி நீ ஏதாவது சொன்னால், விட்டேனா பார் உன்னை !!!

4 comments:

நிகழ்காலத்தில்... said...

மத நடவடிக்கைகள், அதனோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பிற மதத்தினர் நல்லவற்றை குறிப்பிட்டு பாராட்டினால் மத நல்லிணக்கம் வளரும்.

மாறாக குறைகளாக நினைத்துக்கொண்டு கண்டதையும் எழுதுவது கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை என்பது போலத்தான்..

நிகழ்காலத்தில்... said...

இது எல்லோருக்கும் பொதுவான கருத்துதான் :))

Unknown said...

//மாறாக குறைகளாக நினைத்துக்கொண்டு கண்டதையும் எழுதுவது கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை என்பது போலத்தான்..//

மத நல்லிணக்கம் வரவேண்டும் என்பதா அவர்கள் எண்ணம், பிறரை குறை கூறுவதற்கு முன் தன்னுடைய குறையை பார்ப்பதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

Anonymous said...

மர்மயோகி மாதிரி இரட்டைவேடதாரிகளுக்கு மத்தியில் அப்துல்லா அண்ணன்,ஆசிப் அண்ணாச்சி,சுல்தான்பாய் போன்ற மனசாட்சிக்கு நேர்மையாளர்களும் இருக்கிறார்கள்.அதை நினைத்து நம்மைமாதிரி ஆட்கள் சந்தோஷப்பட வேண்டியதுதான்.