visitors

Thursday, March 18, 2010

கவிஞர் ஒசிப்பு மாண்டல்ஸ்டாமும் ஸ்டாலினின் கருத்து சுதந்திரமும்

இவர்கள் செய்ய நினைக்கும் புரட்சி தேசத்தில், மாற்று கருத்துள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பது மாவோவை மற்றும் சோவியத் ரஷ்ய "கருத்து சுதந்திரத்தை" பார்த்தாலே தெரியும்!!!!

கொல்லப்பட்டவர்கள் ஏராளம், நாசமக்கப்பட்ட்வர்கள் ஏராளம்!!!

இவர்களின் எழுத்துக்கள் தமிழ்மண விருதகள் வாங்கிவிட்டனவாம்! வாழ்த்துகள் சொன்னதோடு, இதே மாதிரி கருத்து சுதந்திர பரிசுகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் மற்றவர்களுக்கு தருவார்களா என்ற கேள்வியையும் கேட்டு, அப்படி சுதந்திரம் இருக்கு என்று நினைத்து சிறு கவிதை ஒன்று எழுதிய மாபெரும் ரஷ்ய கவிஞனான Osip Mandelstam ற்கு ஸ்டாலினால் நேர்ந்த கதியை சுட்டிக்காட்டினேன்!

பின்னூட்டம் அழிக்கப்பட்டது!

மண்டல்ஸ்டாமின் கவிதையை மொழி பெயர்த்து அவருக்கு நடந்த்தைப்பற்றியும் கீழே எழுதி இருக்கிறேன்! படியுங்கள்!


அன்பான நண்பர் திரு வினவு மற்றும் நண்பர்கள்,

வணக்கம் சார். வாழ்த்துகள்.

என்ன ஒன்று, இந்த மாதிரி ஓட்டுப்பொறுக்கி, ஏகாதிபத்திய சுரண்டல் சமூகங்கள் உங்களைப்போன்றவர்களுக்கும் அங்கீகாரம் வழங்குகிறது (இந்த தமிழ் மணத்தில் போட்டி போட்டு ஒட்டு குத்துவது யார் என்றெல்லாம் நீங்கள் ஆராயமாட்டீர்கள், ஏனென்றால் இப்போதைக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி பொய்களை சொல்லல வடிகாலாக இருக்கும்ப்படியால்), atleast அங்கீகாரம் வழங்குவதாக சொல்லிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது கொடுக்கிறது!

ஆனால் பாருங்க. நீங்கள் ரசிக்கும், துதிக்கும், ஆக்கத்துடிக்கும் சோவியத் அல்லது மாவோ அல்லது ஸ்டாலினிய சமூகத்தில் இதைப்போல எதையும் செய்யமுடியாது சார்! இதையும் புரியாமல், சில முற்போக்கு முத்திரை வாங்கத்துடிக்கும் நண்பர்கள் (வெகு சிலரே என்றாலும்) நீங்கள் எழுதித்தள்ளும் திரிபுகளை நன்று என்று தலையை ஆட்டி கையை தட்டி அருமை என்று இடுகிறார்கள்! இந்த மாதிரி கும்பல்களை ஆங்கிலத்தில் usefull idiots என்பார்கள்! அதாவது உபயோகப்படுத்தியபின் தூக்கிஎரியப்படவேண்டியவர்கள்!

இது அவர்களுக்கு புரியாது! கும்பலோட கூத்துக்குப்போனோம், காரணமில்லாம கரவொலி எழுப்பினோம், கட்டைய காட்டினதும் கத்திக்கொண்டே வீட்டுக்கு வந்திட்டோம் என்று என்று சும்மா ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு சரித்திரம் தெரியாது!

சோவியட்டுகள் இந்த மாதிரி இரண்டாங்கெட்டான் கூட்டங்களை, வேலை முடிந்தபின் அடித்து துரத்தி எஞ்சியவர்களை கூண்டோடு குலாகுக்கு அனுப்பி, முடியாதவர்களை மொத்தமாக போட்டுத்தள்ளினார்கள்!

ஒரு நாட்டையே சுமார் நூறு வருடம் பின்னுக்கு இட்டுச்சென்று, செல்வத்தையெல்லாம் அழித்து, வேறு யாவரும் ஆட்சி செய்யமுடியாமல் தானே அனுபவித்து, அதையும் புரட்ச்சி என்று பெயரிட்டு அம்மக்களை ஏமாற்றிய, ஏமாற்றிக்கொண்டிருக்கும் பிடேல் காஸ்ட்ரோ என்ற ஒன்றுக்கும் உதவாத கொடுங்கோல் சர்வாதிகாரி இவர்களுக்கு "முற்போக்கு தலைவர்"!

இதைவிட காமடி, மக்கள் முன்னேற்றத்திற்கு சிறிதளவும் உதவாத, மக்களின் எதிர்க்காலத்தைப்பற்றி சிறிதளவும் தொலைநோக்கில்லாத, மானிட முன்னேற்றத்திற்கான எந்த ஒரு சிறிய படிகளையும் காட்டியிராத சே குவேரா என்ற ஒரு அழிவுப்போராளி ஒரு மாபெரும் தலைவன்!

சுற்றியிருப்பவர் தங்களை வித்தியாசமானவர்கள் என்று பார்க்கவேண்டும், நான் சராசரியைவிட மேலானவன் என்று சுற்றியிருப்பவர் மெச்சவேண்டும், அய்யோ நான் எதையாவது செய்யவேண்டுமே என்ற அரிப்பு நீங்கவேண்டும், என் வார்த்தைகள் பலமானவை நான் இந்த ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்காதவன், முர்போக்கானவன், மேலும் அதை என்ன என்பதை புரியாமல், விளக்கமுடியாமல், பார்த்தவரையில் இதுபோல பேசும் சிலருடன் சேர்ந்து நானும் பார் இந்த மாதிரிதான் என்று சொல்ல விழைபவன் என்பது போன்ற பல அரைகுறை மற்றும் உண்மையாகவே நல்ல எண்ணம் கொண்ட பலருக்கு நிற்க கிடைத்த புள்ளிதான் இந்த பிடேல் காஸ்ட்ரோ மற்றும் செ குவேரா ரசிகர் மன்றம்!

பொருளியல், ஆய்வுக்குட்படுத்த, சார்பற்ற வரலாறு, சம கால விஞ்ஞானம், விரிவான படித்தலரிவு மற்றும் பலவற்றை இவர்களெல்லாம் கூர்ந்து நோக்காதவர்கள், அல்லது அறியாதவர்கள்! கிடைத்த அரைகுறை செய்திகளையும், புரிதல்களையும் வைத்துக்கொண்டு, நான் வித்தியாசமானவன் என்று உலகிற்கு காட்ட விழைபவர்கள் மட்டுமே!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்கள்தான் நீங்கள் மற்றும் உங்களுக்காக ஜல்லியடிக்கும் சிலரும்!!!

சரி சரி, தெரிந்த விடயத்திற்கு எதற்கு இவ்வளவு விளக்கம்! முக்கியமான விடயத்திற்கு வருவோம்!


Our lives no longer feel ground under them.
At ten paces you can’t hear our words.

But whenever there’s a snatch of talk
it turns to the Kremlin mountaineer,

the ten thick worms his fingers,
his words like measures of weight,

the huge laughing cockroaches on his top lip,
the glitter of his boot-rims.

Ringed with a scum of chicken-necked bosses
he toys with the tributes of half-men.

One whistles, another meows, a third snivels.
He pokes out his finger and he alone goes boom.

He forges decrees in a line like horseshoes,
One for the groin, one the forehead, temple, eye.

He rolls the executions on his tongue like berries.
He wishes he could hug them like big friends from home.

மேலே உள்ளது "epigram " எனப்படும் வகையை சார்ந்தது! ரஷ்ய மொழியில் எழுதப்பட்டதின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது!

இதை எழுதியவர் ஓசிப் மான்டேல் ஸ்டாம் (Osip Mandelstam) எனும் ரஷ்ய (உக்ரானிய) கவிஞர்! உன்னிப்பாக படித்துப்பார்த்தால் இது யாரைப்பற்றி எழுதப்பட்டது, என்பது புரியும் !

இதை எழுதிய ஓசிப் மண்டேல்ஸ்டாம் ஸ்டாலினால் குலாகில் அடைக்கப்பட்டு, காரணமேதும் சொல்லப்படாமல் மாண்டதாக அறிவித்தார்கள்!

அதாவது கொல்லபட்டார்! இவர் ஒரு பெரும் கவிஞர்! உண்மையை பேசக்கூடியவர்! ஆதலால் ஸ்டாலினால் கொல்லப்பட்டார்!

ஸ்டாலின் நடத்திய "ஜனநாயக" ஆட்ச்சியில் இருந்த கருத்து சுதந்திரம் அவ்வளவு பெரியது!!!! இப்பொழுது நண்பர் திரு வினவு எழுதுவதுபோல யாராவது எழுதினால் அவர்களின் கதி அதோகதிதான்! அட அவ்வளவு காரம் எதற்கு, மேலே மண்டேல்ஸ்டாம் எழுதியதுபோல பட்டும் படாமலும் கிண்டல் செய்தாலே போதும், சாவு நிச்சியம்! அதுதான் நம்ம உண்மையான கம்யூனிஸ்ட்களின், மன்னிக்கவும், ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோச்டுகளின் ஜனநாயகம்!!

பிடேல் காஸ்ட்ரோ செய்ததும் இதுதான், மற்ற எல்லா கம்முனிஸ்டு சர்வாதிகாரிகள் செய்ததும் இதுதான்! என்ன சே குவேரா தனி சர்வாதிகார ஆட்சிக்கு வர முடியவில்லை (அதற்க்கு பிடேல் காஸ்ட்ரோ இடம் கொடுக்க முன்வராததால், தனக்கென்று ஒரு அடிமை குட்டம் மற்றும் தேசத்தை தேட சென்றுவிட்டார்) முடிந்திருந்தால், அவரும் இதே போல ஜனநாயக, பேச்சு மற்றும் எழுத்துரிமை கொண்ட ஒரு சமூகத்தைதான் ஒரு வாக்கியிருப்பார்!

ஒரு பேச்சு வைத்துக்கொள்வோம், அதாவது, திரு வினவு இந்த நாட்டின் தலைவராகிறார் என்று (தயவு செய்து சிரிக்காதீங்க, ஒரு பேச்சுக்குதான் சொன்னேன், தாமாஷா இருந்தாலும் பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்). அவர் எந்த முறையான அரசாங்கத்தை மற்றும் சமூகத்தை அமைக்க விழைவார் என்று நினைக்குறீர்கள் ??? அதற்க்கு பதில், அதே ஜனநாயகமிலாத, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியைதான்!!!!!

இதை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள இயலாத ஜல்லிகள் எல்லாம், டமாரம் அடிக்கிறார்கள்!!!

சோவியத் அரசாங்கம், ஸ்டாலினிச அரசாங்க முறை, மாவோவிச முறை, மற்றும் எல்லா கம்முனிச அரசாங்கங்களும் கொன்றது ஒரு ஓசிப் மாடல்ஸ்டாமை மட்டும் இல்லை, இவரைப்போன்ற பல ஆயிரம் மக்களை! அவர்தம் உணர்ந்து சொன்ன உண்மைகளை!

இந்த வரலாறு ஆதாரங்களுடன் எழுதப்பட்டு, பல நூறு பெயர்களால் ஆராயப்பட்டு, உண்மையே என்றும் நிறுவப்பட்டு, இதன் காரணமாக, இந்த சோவியத் முறையே ஒரு பொய்களால் கட்டப்பாட்ட ஒரு மண் மண்டபம் என்று உணரப்பட்டு, உலகெங்கிலும் காரி துப்பலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன! நேபாளம், மற்றும் இந்தியாவில்தான் இந்த காமடியன்களுக்கு படங்களைக்காட்ட அரங்குகள் சில இன்று மட்டும் இருந்து வருகின்றது! அதுவும் இன்னும் சில வருடங்களில் வியாபாரம் இல்லாததால் இழுத்து மூடப்படும் என்பது திண்ணம்!

சரி, மேல உள்ள கவிதை, அதாவது மான்டேல் ஸ்டாமை கொன்ற கவிதை அப்படி என்னதான் சொல்கிறது!

ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்காக மொழி பெயர்க்கிறேன்!

*------*

எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அமுங்கிவிட்டது
பத்தடி போனால் வரும் கால்சத்தமும் அடங்கிவிட்டது

கிடைக்கும் சிறிது நேரத்தில் வரும் பேச்சு
கிரம்லினில் வாழும் அந்த மலை ஏறியைப்பற்றியே ஆச்சு

புழுக்கள் பத்து அவனின் விரல்களாம்
அமுக்கும் பளுதான் அவனின் வார்த்தைகளாம்

பல் இளிக்கும் கரப்ப்பான்பூச்சிகள் போல அவன் மேல் உதடுகளிருக்க
அணிந்த காலணிகளில் வெளிச்சம் தெறிக்க

கோழிகளைப்போல சில சகதித்தலைவர்கள் சுற்றிவர
அசைப்போட்டானாம் இந்த அரைமனிதர்களின் ஆராதனையைப்பார்த்து

ஒன்று ஆர்ப்பரித்த்தாம், ஒன்று கொஞ்சிப்பார்த்ததாம், ஒன்று முக்கி முனகியதாம்
விரல்காட்டிய அவனோ நான் மட்டுமே பேசலாம் என்றானாம்

கட்டளைகள் கட்டவிழ்ந்தன கட்டியடித்த லாடம் போல
கவட்டில் ஒன்று நெற்றியில் ஒன்று கண்களுக்கும் ஒன்றென

மரணதண்டனைகள் உருட்டப்பட்டன சின்ன பழங்களை வாயினுள் தள்ளுவதுபோல
அதை இழுத்தனைக்கவும் விரும்பினான் நன்கறிந்த நண்பர்களைப்போல

*------*

இந்த ஒரு பதினாறு வரிகளை தாங்க முடியாது அதற்காக ஒருவரை கொல்ல சிறிதளவும் சலனப்படாதவர்கள் இந்த சிவப்பு மாவீரர்கள்!

சோவியத் கம்யூனிசமும், ஸ்டாலினிசமும், மாவோவிசமும், மற்றும் நீங்கள் கொண்டாடும் ஏனைய நிசங்களும் இதைப்போல ஆயிரக்கணக்கானவர்களை பலி பீடத்திற்கு அனுப்பியுள்ளீர்கள்!!!

வாயைத்திறந்தால் வாட்டிவதைப்பு , கருத்தைச்சொன்னால் கட்டிவைத்து காட்டடி, உண்மையைப்பேசினால் உண்டுஇல்லை என உபசரிப்பு, அப்படியும் வாயைத்திறந்தால், கொடுத்தீர்களே நல்ல வாய்க்கரிசி, அதுவும் பல ஆயிரம்பெர்களுக்கு!

இப்பேற்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக நாகரீகத்தை தொடங்கி, பல கோடி உயிர்களை பலி வாங்கி, வலிதாங்காமல் மக்கள் விழித்தெழுந்து , நீங்கள் வைத்த சிலைகளை, புரட்டு கதைகளை உடைத்து நொறுக்கி, உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி, இப்பொழுது அதே சமூகம் உங்களுக்கு கொடுத்த, நீங்கள் அவர்களுக்கு தராத உண்மையான ஜநாயக உரிமையை பயன்படுத்தி, அதே சமூகத்தை தூற்றி, பொய் மேல் பொய் எழுதி, கிடைத்தது பார் எங்களுக்கு அங்கீகாரம், விரிவடயுதுபார் எங்கள் அதிகாரம் என்று கட்டம் கட்டி ஆடுவது, கபடத்திலேயும் உச்ச கபடம், தமாஷிலும் உச்ச தமாஷ், நாணயமின்மையிலும் உச்ச நாணயமின்மை!

நன்றி

1 comment:

Anonymous said...

நன்று. இங்கே வாருங்கள்.


http://tamilnerrupu.blogspot.com/2010/03/blog-post_18.html